Sunday 7 August 2016

வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு சகாப்தம் - 2016 ஆகஸ்ட் 7 மறைவு

வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு சகாப்தம் 
- 2016 ஆகஸ்ட் 7 மறைவு 

சாவு என்பது நாடக அரங்கேற்றம் போன்றது. 
அதற்கான ஒத்திகைதான் வாழ்க்கை   
_வியட்நாம் வீடு சுந்தரம்


வியட்நாம் வீடு  சுந்தரம் திருச்சியில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார் . அவர் கைக்குழந்தையாய் இருந்த போது அவருடைய அன்னை காந்தியை பார்க்க 1945 இல் மெட்றாஸ் பட்டணத்திற்கு வந்தார் .தொடர்ந்து பஞ்சம் ,பசி இவற்றால் துரத்தப்பட்ட இவரது அன்னை மெட்றாசுக்கு 1955 இல் குடி  பெயர்ந்தார் சுந்தரத்திற்கு சிறு வயதில் படிப்பு ஏறவில்லை -எனவே சென்னையில் டன்லப் தொழிற்சாலையில் பணியாற்றினார் .படிப்படியாய் உயர்ந்து மிசின் ஆப்பரேட்டர் ஆனார்   

அப்போது ஒய் .ஜி .பார்த்தசாரதி ,அவரது மனைவி மற்றும் பட்டு இவர்களின் பரிச்சயம் ஏற்பட்டது . அவர்களிடம் வசனம் எழுதும் வித்தையை கற்றார் .பின்னாளில் "சோ" ராமசாமி அவர்களும் பட்டுவிடமே தொழில் கற்றார் 

தன்னுடைய 15 ஆம் வயதில்  1958ம் ஆண்டு டன்லப் தொழிற்சாலையில் முதலாண்டு விழாவில் மேடை ஏற்றிய முதல் நாடகம் மூலம் அன்றைய சிறப்பு விருந்தினர் எம்.ஜி.ஆரால் விசேஷ பாராட்டைப் பெற்றார். அந்த நாடகத்தில் –

‘கடைசி வரைக்கும் 
உன் கை வானம் பார்க்கக்கூடாது;
 தலை பூமி பார்க்கக்கூடாது’’ என்று வந்த வசன வரிகளை வெகுவாகப் பாராட்டிய எம்.ஜி.ஆர், எதிர்காலத்தில்
 நீ பிரமாதமாய் வருவாய் என்று வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது





பின்னாளில் எம்ஜியார் படமான   " நாளை நமதே " விற்கு கதை வசனம் 
எழுதினார்   


அதிலிருந்து நாடகங்களை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு, வியட்நாம் வீடு உள்ளிட்ட நாடகங்களை எழுதினார். இந்த நாடகம், சிவாஜி நடிப்பில் மாதவன் இயக்கத்தில் படமாக்கப்பட்டது. அதிலிருந்து வியட்நாம் வீடு சுந்தரம் என அறியப்பட்டவர், சிவாஜி நடித்த கௌரவம், விஜயா, ஞானப்பறவை ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.


நாடகத்தின் மூலமாக திரைத்துறைக்கு வந்தவர்களில் சுந்தரமும் ஒருவர். இவர் எழுதிய வியட்நாம் வீடு’ நாடகம் சிறப்பாக வரவே அதை அப்படியே படமாக இயக்கினார் மாதவன். இதில் சிவாஜி ஹீரோவாக நடிக்க, பத்மினி ஹீரோயினாக நடித்தார். சுந்தரமே கதை, வசனம் எழுதினார். இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. வியட்நாம் வீடு’ தந்த புகழ், சுந்தரத்தை வியட்நாம் வீடு’ சுந்தரமாக்கியது.


சிவாஜி நடித்த கெளரவம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு சுந்தரத்தையும் நல்ல இயக்குநராக இந்த திரையுலகில் அடையாளம் காட்டியது. தொடர்ந்து பயணம், விஜயா, தேவிஸ்ரீ கருமாரியம்மன், ஞானபறவை உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.

 சிவாஜி மட்டுமல்லாது எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், முரளி, கார்த்திக் முத்துராமன், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.


வியட்நாம் வீடு, 












ஞான ஒளி, 











ஜஸ்டிஸ் கோபிநாத், 
கெளரவம், 











சத்யம், 
கிரகப்பிரவேசம், 
அண்ணன் ஒரு கோயில், 













ஒரு மலரின் பயணம், 
கீதாஞ்சலி, 

தர்மம், 

நாளை நமேதே, 












நான் ஏன் பிறந்தேன், 












ஜல்லிக்கட்டு, 















சூரசம்ஹாரம், 
ராஜமரியாதை, 
ஆனந்த் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு வியட்நாம் வீடு சுந்தரம் கதை வசனம் எழுதியுள்ளார்.

இயக்குநர், வசனகர்த்தாவாக மட்டுமல்லாது நடிகராகவும் பாராட்டைப் பெற்றவர் சுந்தரம். வெள்ளித்திரையில் அப்பு உள்ளிட்ட சில படங்களிலும், சின்னத்திரையில், 
மை டியர் பூதம், 
கிருஷ்ணதாசி, 
ராஜ ராஜேஸ்வரி, 
மர்மதேசம், 
மெட்டிஒலி, 
அத்திப்பூக்கள்
வள்ளி”உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

அப்பு, 
கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களிலும் நடித்திருக்கும் 
இவர், 15-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

வியட்நாம் வீடு சுந்தரம் தன் குடும்பம் வேறு சினிமா உலகம் வேறு 

என்பதை நன்கு புரிந்து கொண்டிருந்தார்

25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் ஆகியவற்றை எழுதியிருக்கும் சுந்தரம், மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார்.



நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர். 
ஷ்ரவந்த் என்ற இளைஞர் பட்டாளத்தை துணைக்கு வைத்துக் கொண்டு  2 ஆண்டுகளாக ‘மைம்’  (மவுன மொழி) நாடகங்களை மேடையேற்றி வந்தவர். ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

ஒய்.ஜி.மகேந்திரா அனுதாபம்
கடைசி வரைக்கும் நாடகமே சுவாசமாக இருந்தவர் வியட்நாம் வீடு சுந்தரம். எங்கள் குழுவோடு 56 ஆண்டுகாலம் நெருங்கிய பழக்கம். எங்கள் குழுவுக்கு அவர் தந்த நாடகம் கண்ணன் வந்தான். பின்னாளில் சிவாஜியின் நடிப்பில் கவுரவமானது. குடும்பப்பாங்கான– கதைகளுக்கு உணர்ச்சிகரமான வசனங்களை எழுதியவர். இவரது இழப்பு– எங்களுக்கெல்லாம் தனிப்பட்ட பேரிழப்பு என்று கூறினார் ஒய்.ஜி.மகேந்திரன்.

சாவு என்பது நாடக அரங்கேற்றம் போன்றது. அதற்கான ஒத்திகைதான் வாழ்க்கை  என்று வியட்நாம் வீடு சுந்தரம் அடிக்கடி கூறுவார். இன்று நாடகத்தை  அரங்கேற்றிவிட்டார் என கூறியபடி கண்ணீர் மல்க தனது அஞ்சலியை செலுத்தினார்  ஒய்.ஜி.மகேந்திரன்.

வியட்நாம் வீடு, ஞானஒளி, கவுரவம்– ஆகிய வெற்றிப் படங்களைத் தந்தவர். கலையுலகின் பிதாமகன்களில் அவரும் ஒருவர் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

நாடகக்குழுக்களின் சார்பில் டி.வி.வரதராஜன், வி.கே.ஆர். சுபாஷ், சி.வி.சந்திரமோகன், ராஜா ஆகியோரும் வியட்நாம் வீடு சுந்தரம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுந்தரத்தின் உடல், சென்னை  திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



கடந்த சில நாட்களாகவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73  வயதுமூப்பு காரணமாக, சென்னை, தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று நள்ளிரவு உயிர் பிரிந்தது.அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

படவுலகப்பிரமுகர்கள் கதை வசனகர்த்தா டைரக்டர் சித்ராலயா கோபு,  நடிகர்கள் சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரா, மனோபாலா, சி.சுந்தர், மக்கள்  குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும், நாடக –  டெலிவிஷன் நடிகர்களும் நேரில் சென்று சுந்தரம் உடல் மீது மாலை வைத்து  மரியாதை செலுத்தினார்கள்.

சுந்தரத்துக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இன்று மாலை ஐஜி ஆபீஸ் பின்புறம் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வியட்நாம் வீடு’ படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு. தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம். வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் “வியட்நாம் வீடு

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கதை சுருக்கம்


வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்ற ரீதியில் சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் "வியட்நாம் வீடு'. நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை வாங்கி படமாக்கினார்கள், சிவாஜி பிலிம்ஸார்.
அந்தப் பிராமணக் குடும்பத் தலைவனாக தன்மானத்திற்காக உயிரையும் விடும் ரிட்டையர்டு "பிரிஸ்டீஜ்' பத்மநாப அய்யராக சிவாஜி நடித்தார். அவர் மனைவியாக மடிசார் மாமியாக பத்மினி நடித்தார்.
ஒரு மனிதனின் அந்தஸ்து என்பது அவனது கெளரவத்திலும் தன்மானத்திலும் அடங்கியது என்ற கொள்கையில் வாழ்ந்து வருபவர் பிரிஸ்டீஜ் பத்மநாப அய்யர். வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற பழமொழி போல வீட்டுக்கு வீடு குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளால் சண்டை சச்சரவு வரும். அவை, வந்த வேகத்தில் மறைந்து விடும். இந்த வியட்நாம் வீட்டுச் சச்சரவுகள் தொடர்கதையாக தொடர்கிறது. மன அமைதி குறைந்து வீட்டுப் பிரச்னைகள் மரண வாயில் வரை அழைத்துச் செல்கிறது.
பிரிஸ்டிஜ் என்ற வார்த்தையை, அடிக்கடி கூறிக்கொண்டு சிங்கம்போல உலவி வரும் குடும்பத் தலைவன் பத்மநாப ஐயர். அந்தக் கதாபாத்திரத்தின் கம்பீரத்தையும் நேர்மையையும், மிகத் திறமையோடு வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார் சிவாஜி.
ஒரு பிராமண குடும்பத்தின் அறுபதாம் ஆண்டு விழாவை நேரில் பார்ப்பதுபோல் காட்டிய, டைரக்டருக்கு நன்றி சொல்ல வேண்டும். சாதாரண பாமர ரசிகர்களும் கூட, ரசிக்கும்படியாக, விலாவாரியாக காட்டுவார்கள்.
அதில் சிவாஜி தனக்கே உரிய குறும்புகளை செய்து நகைச்சுவை உணர்வை ஏற்படுத்துவது சாதாரண காரியமல்ல. அத்துடன் பாசத்தை காட்டுகிற இடங்களில் உள்ளத்தின் மென்மையான இடத்தை தொட்டு விடுகிறார். இவருக்கு இணையாக நடிக்கக்கூடிய ஒரே நடிகை பத்மினி மட்டும்தான். ஜோடிப் பொருத்தம் மட்டுமல்லாது, அவருக்கு ஈடு கொடுத்து பிராமண பாஷை பேசி திகைப்படைய வைத்து விடுகிறார்.
உடன் நடித்தவர்கள் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. நாடகமாக பலமுறை மேடை ஏறியதால், திரைக்கதையில் மெருகு ஏற்றப்பட்டு, ஒளி வீசியது.
பாலகாட்டு பக்கத்திலே பாடலில் தொனிக்கும் நகைச்சுவை உணர்வுடன் கூடிய சிவாஜியின் நடிப்பு மறக்க முடியாத ஒன்று. உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் கண்ணீர் பெருக்கெடுக்க வைத்து விடுகிறார்கள். பிராமண குடும்பத்தின் வாழ்க்கை கொண்ட "வியட்நாம் வீடு' படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு.
தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம்.
நடிக, நடிகையர்    :சிவாஜிகணேசன், நாகேஷ்,
பத்மினி,ஸ்ரீகாந்த், எம்.பானுமதி
கதை, வசனம்    : கே.சுந்தரம்
பாடல்கள்    : கண்ணதாசன்
இசை    : விஸ்வநாதன்
தயாரிப்பு    : சிவாஜி புரொடக்ஷன்ஸ்.

No comments:

Post a Comment