Wednesday 24 August 2016

தமிழ் திரைப்பட நடிகைஅஞ்சலிதேவிBORN 1927 AUGUST 24

தமிழ் திரைப்பட நடிகைஅஞ்சலிதேவிBORN 1927 AUGUST 24






அஞ்சலிதேவி பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர்.

அஞ்சலிதேவி

மங்கையர்க்கரசி (1949) திரைப்படத்தில் அஞ்சலிதேவி
பிறப்புஅஞ்சனி
ஆகத்து 241927
பெத்தாபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டம்,சென்னை மாகாணம்
இறப்புசனவரி 132014(அகவை 86)
சென்னைதமிழ்நாடு,இந்தியா
பணிநடிகை
வாழ்க்கைத் துணைபி. ஆதிநாராய

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
அஞ்சனி குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.[1]

1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெயரைச் சூட்டினார். அந்த படத்தின் மூலம் இவர் பெரும் புகழ் பெற்றார். ஏறத்தாழ 350 தெலுங்குத் திரைப்படங்களிலும், சில தமிழ், கன்னடப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.[1]



நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]
சுவர்ண சுந்தரி
அனார்க்கலி
மணாளனே மங்கையின் பாக்கியம்
கணவனே கண்கண்ட தெய்வம்




சிவாஜி வாங்கின முதல் அட்வான்ஸ்...

கடந்த இதழில் ஆந்திரத்தில் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சென்னைக்கு வந்து தன் முதல் தமிழ்ப் படத்தில் நடிக்கத் தொடங்கிய 
 பிறகு "மாயாவதி', "சர்வாதிகாரி', "பூலோக ரம்பை', "நீலமலை திருடன்', "சக்கரவர்த்தி திருமகள்', "மன்னாதிமன்னன்', "பக்த பிரகலாதா', "மாயக்குதிரை', "கணவனே கண்கண்ட தெய்வம்'னு தொடர்ச்சியா படங்கள் வர தொடங்கிச்சு. அப்பல்லாம் தமிழ் டயலாகை தெலுங்கில் எழுதி வெச்சு மனப்பாடம் பண்ணி அர்த்தம் என்னான்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் பேசுவேன்.

பிறகு மெல்ல மெல்ல தமிழ்ல பேச கத்துக்கிட்டேன். மனப்பாடம் பண்றதுமட்டும் தெலுங்கில எழுதி வெச்சுத்தான். அப்போ டப்பிங் எல்லாம் கிடையாது. அதனால நடிக்கிறவங்க எல்லாரும் ஸ்பாட்லயே பேசி நடிக்கணும். எந்த மொழியில பேசறவங்களா இருந்தாலும் தமிழ்ல பேசியாகணும்.
பெரிய பெரிய டயலாக்கா இருக்கும். ஒரே டேக்ல அதை முடிக்கணும். இல்ல மறுபடியும் முதல்ல இருந்து சொல்லணும். நாம மிஸ்டேக் பண்ணினா, கூட நடிக்கிறவங்களும் மொதல்ல இருந்து டயலாக் பேசணும். இப்போ எல்லாம் "இங்கே வா அப்படி'ன்னு சொல்லனும்ன்னா "இங்கே' என்பதற்கு ஷாட் எடுக்கலாம், "வா' என்பதற்கு ஒரு ஷாட் எடுத்துக்கலாம் அந்தளவுக்கு சுலபமா ஆகிடுச்சு.

அதன்பிறகு தெலுகு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தின்னு கிட்டத்தட்ட சேர்த்து 500 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
ஒரு நடிகை வாழ்க்கையில முக்கியமானதுன்னா நம்ம நடந்து கொள்ற விதத்திலதான் இருக்கு. அப்போ சினிமாவில பணத்தைவிட மரியாதை, பாசம் அதிகமா இருக்கும். சக நடிகர்கள் நடிகைகள் யாருக்கும் பொறாமை இருக்காது. ஒருத்தரோட ஒருத்தர் அன்பா, பாசமா சொந்தகாரங்களைப் போல ஒரே பேமலி மாதிரி இருப்போம். அதெல்லாம் கோல்டன் டேஸ். அந்தக் காலம் இனிமே திரும்பி வரவே வராது. இப்போ நினைத்தாலும் சந்தோஷமா இருக்கு.

அதே போல நாங்க நடிக்கும் போது பார்த்தீங்கன்னா ஜெமினி, வாஹினி, விஜயா, கோல்டன், விக்ரம், ஜூபிடர், சத்யான்னு எல்லா ஸ்டுடியோவிலும் கலகலன்னு ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கும். எல்லா படத்தையும் ஸ்டுடியோலதான் எடுப்பாங்க. ஒவ்வொரு ப்ளோர்ல ஒவ்வொரு ஷூட்டிங் நடக்கும். ஸ்டுடியோ எல்லாம் அவ்வளவு பிஸியா இருந்தது. ஸ்டுடியோ கிடைக்கிறது அவ்வளவு கஷ்டம். வாஹினியில் ஷூட்டிங் என்றால் ஒரு ப்ளோர்ல சிவாஜி, ஒரு ப்ளோர்ல எம்.ஜி.ஆர்., ஒரு ப்ளோர்ல நாகேஷ்வர ராவ்.. என்.டிஆர், பத்மினி, ராகினி என்று ஒவ்வொரு ப்ளோர்ல ஒவ்வொருத்தர் இருப்பாங்க. மதியம் சாப்பாட்டு வேளையில எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சாப்புடுவோம். ஜாலியா கொஞ்ச நேரம் அரட்டை அடிப்போம்.

அப்போது மூணு கால்ஷீட். காலைல ஏழு மணியிலிருந்து ஒரு மணி வரைக்கும் ஒரு கால்ஷீட், அப்புறம் ரெண்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்கும் ஒரு கால்ஷீட், அப்புறம் நைட் பத்து மணியிலிருந்து காலையில ஆறுமணி வரைக்கும் ஒரு கால்ஷீட். அந்த மாதிரி தொடர்ச்சியா ஷூட்டிங் இருக்கும்.




நான் ஒரே நாள்ல மூணு படத்துக்கு கால்ஷீட்ல நடிச்சிருக்கேன். தூக்கம் எல்லாம் கிடையாது. அவ்வளவு கஷ்டப்பட்டோம். அந்த ஸ்டுடியோக்கு பிறகுதான் ஏவி.எம். ஸ்டுடியோ, பிரசாத், கற்பகம் ஸ்டுடியோ எல்லாம் வந்தது.
ஆனால் இப்போ இருக்கிற நடிகர்களுக்குள்ள அந்த ஒத்துமை இல்லை. அது பற்றி அவர்களையும் குறை சொல்ல முடியாது ஏன்னா ஒவ்வொருத்தரும் அவங்க ஷூட்டிங் இருக்கிற அப்ப வந்துட்டு அவங்க வேலை முடிஞ்சதும் பறந்து போயிட்றாங்க. பக்கத்து ப்ளோர்ல யார் நடிக்கிறாங்க.. என்ன படம் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிற அவகாசமோ, விருப்பமோ இல்ல. அங்க யாரோ நடிக்கிறாங்க. நமக்கு என்னன்னு பறந்துகிட்டே இருக்காங்க.

எம்.ஜி.ஆர் கூட நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். அவரோட நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் படங்கள்தான். அதே போல சிவாஜி நடித்த முதல் படம் பார்த்தீங்கன்னா எங்களோட அஞ்சலி பிக்சர்ஸ்ல தான். படம் பேரு "பூங்கோதை'. சிவாஜி முதன்முதலில் அட்வான்ஸ் வாங்கியது எங்களிடம்தான். அதன்  பிறகுதான் அவருக்கு "பராசக்தி' வாய்ப்பு வந்தது. ஆனால் "பராசக்தி' முதல்ல ரிலீஸ் ஆகிடுச்சி. எது முதல்ல ரிலீஸ் ஆகுதோ அதுதானே முதல்படம்? கமிட் ஆன படத்தை முதல்படம்னு சொல்ல முடியாது இல்லையா?

ஜெமினி கணேஷோட நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அதே போல அடுத்த வீட்டு பெண் படம் பார்த்தீங்கன்னா காமெடிப் படம். அந்தப் படம் வீனஸ் ஸ்டுடியோவில் எடுத்தாங்க. ஜெமினியோடு நடித்த "மணாளனே மங்கையின் பாக்கியம்' படத்தில் அழைக்காதே சாங் பார்த்தீங்கன்னா ரொம்ப வித்தியாசமா இருக்கும். அதே போல எம்.ஆர்.ராதாவோடு "மங்கயைர் உள்ளம் மங்காத செல்வம்', பாலைய்யா, தங்கவேலு, நம்பியார் என பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டோடு நடிச்சுட்டேன்.


அதன் பிறகு  எம்.ஆர்.ராதா, நம்பியார், எல்லாம் பார்த்தீங்கன்னா சினிமாவில் தான் வில்லனாக வருவாங்க. ஆனா உண்மையில் தங்கமான மனிதர்கள். அவ்வளவு சாப்ட், அவ்வளவு அன்பு. அவ்வளவு நல்லவங்க.
அப்பல்லாம் காமெடி எல்லாம் அவ்வளவு அழகா நீட்டா இருக்கும். அடுத்தவீட்டுப் பெண் பாருங்க தெரியும். இப்போ வருகிற மாதிரி வல்கரா, ரெட்டை அர்த்தம் எல்லாம் கிடையாது. தங்கவேலு சாதாரணமா பேசும்போதே காமெடியா இருக்கும். "என்னம்மா அஞ்சு எலி.. எப்படி இருக்கே'ம்பாரு. இப்படி சாதாரணமா பேசும்போதே கேட்டு சிரிச்சுக்கிட்டு இருக்கலாம்.



சினிமாவுல அவராவே அவர் பாணிக்கு டயலாகை மாத்திப் பேசுவாரு. நாம உஷாரா பதில் ரியாக்ஷன் கொடுக்கணும். அப்போதுதான் ஆக்ஷன் நல்லா இருக்கும். இல்லைன்னா பார்க்க நல்லா இருக்காது. இது தான் நான் அனுபவமா நினைக்கிறது.

சினிமா நிறைய மாறிப்போச்சு. இப்போ எல்லாம் ஷூட்டிங்கின் போது ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கு ஒவ்வொரு மேக்கப் மேன் தனித்தனியா இருக்காங்க. ஆனா நாங்க நடிக்கும் போது அப்படியில்லை. நாங்க நடிக்கும்போது எல்லாருக்கும் ஒரே மேக்கப் மேன்தான். அவரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரமாட்டாரு. நாங்கதான் அவரைத் தேடிப் போகணும். சமயத்தில அவரு பல படத்துக்கு மேக்கப் போடுவாரு. ஒரு கால்ஷீட் முடிஞ்சு அடுத்த கால்ஷீட் நடிக்கிற அந்த ஒரு மணி நேர கேப்புல பல நடிகைகங்க ஒரே நேரத்தில அவர்கிட்ட க்யூல நிப்போம்.

அவர் பேரு ஹரிபாபு. அவரோட வீடு மாம்பலத்தில இருந்தது.... மேக்கப் போட்டுக்கிட்டு மறுபடியும் வடபழனிக்கு அடிச்சு பிடிச்சு ஓடி வரணும். ஆனா அவர் நம்ம அவசரத்துக்கு பதற மாட்டார். படத்தோட கதையைச் சொல்லணும். நம்ம கேரக்டர் எப்படிப் பட்டதுன்னு விளக்கணும். 


அப்புறம்தான் பிரஸ்ûஸயே கையில எடுப்பாரு. புராண கதை... சீதை வேடம்ன்னா அதுக்கு கோல்டு கலர் மேக்கப். குடும்பப் பாங்கான கதைன்னா அதுக்கு வேற கலர் டோன். சரித்திர கதைன்னா அதுக்கு வேற... மேக்கப் போட்டுக்கிட்டு வர்ற வரைக்கும் ஷூட்டிங் நிக்கும். எல்லாரும் எங்களைத் திட்டிக்கிட்டு இருப்பாங்க.

Awards[edit]

Filmfare Awards South

Filmography[edit]

Actress[edit]

YearFilmLanguageCharacterCo-StarNotes
1947GollabhamaTeluguKrishnaveniSriranjani
Mahathma UdhangarTamilKothamangalam Seenu
1948BalarajuTeluguA. Nageswara RaoS. Varalakshmi
Aadhithan KanavuTamilT. R. Mahalingam
1949Keelu GurramTeluguMohiniA. Nageswara Rao
Maya KudhiraiTamilMohiniA. Nageswara Rao
MayavathiTamilT. R. Mahalingam
MangaiyarkarasiTamilP. U. ChinnappaP. Kannamba
1950Palleturi PillaTeluguSanthaN. T. Rama RaoA. Nageswara Rao
Swapna SundariTeluguSwapna SundariA. Nageswara RaoG. VaralakshmiS. Varalakshmi
Swapna SundariTamilSwapna SundariA. Nageswara RaoG. VaralakshmiS. Varalakshmi
Maaya RambaiTamilN. T. Rama Rao
Maya RambhaTeluguN. T. Rama Rao
1951NirdoshiTeluguNirmalaMukkamala Krishna MurthyG. Varalakshmi
NiraparadhiTamilMukkamala Krishna MurthyG. Varalakshmi
SarvadhigariTamilM. G. Ramachandran
SarvadhikariTeluguM. G. Ramachandran
MarmayogiTamilM. G. Ramachandran, Madhuri Devi
MarmayogiTeluguM. G. Ramachandran, Madhuri Devi
MayakkariTamilA. Nageswara Rao
MayalamaariTeluguA. Nageswara Rao
MayamalaiTamilA. Nageswara Rao
StrisahasamTeluguA. Nageswara Rao
StrisahasamTamilA. Nageswara Rao
1952Ezhai UzhavanTamil
1953Pakkinti AmmayiTeluguLeela DeviRelangi VenkataramaiahA. M. Rajah
InspectorTamilVeenai S. Balachander
PoongodhaiTamilA. Nageswara RaoSivaji GanesanPandari Bai
ParadesiTeluguA. Nageswara RaoSivaji GanesanPandari Bai
LadkiHindiKaminiKishore KumarBharat BhushanVyjayanthimala
1954RechukkaTeluguNanaN. T. Rama RaoDevika
Naattiya TharaTamilNanaN. T. Rama RaoDevika
PennTamilKaminiGemini GanesanVeenai S. BalachanderVyjayanthimala
SanghamTeluguKaminiN. T. Rama RaoVeenai S. BalachanderVyjayanthimala
Sorga VasalTamilThilagawathiS. S. RajendranK. R. RamaswamyPadmini
PonvayalTamilSembaT. R. Ramachandran
Rattha PasamTamilT. K. Shanmugam, T. K. Baghavathy
1955AnarkaliTeluguAnarkaliA. Nageswara Rao
AnarkaliTamilAnarkaliA. Nageswara Rao
Kanavaney Kankanda DeivamTamilPrincess NaliniGemini GanesanLalitha
Kalam MaripochuTamilGemini Ganesan
JayasimhaTeluguN. T. Rama RaoWaheeda Rehman
JayasimmanTamilN. T. Rama RaoWaheeda Rehman
Doctor SavithriTamilB. R. PanthuluVeenai S. Balachander
Mudhal ThedhiTamilSivaji Ganesan
Town BusTamilAmudhaM. N. Kannappa, M. N. Rajam, Thambaram Lalitha
1956DevtaHindiGemini GanesanVyjayanthimala
Mathar Kula ManickamTamilGemini GanesanA. Nageswara RaoK. Savithri
Kaalam Maari PochuTamilGemini GanesanT. S. Balaiah
1957Allauddin Adhbhuta DeepamTeluguYasmin, the PrincessA. Nageswara Rao
1957Alavudheenum Arputha VillakkumTamilYasmin, the PrincessA. Nageswara Rao
Panduranga MahatyamTeluguRamaN. T. Rama RaoSowcar JanakiB. Saroja Devi
Suvarna SundariTeluguA. Nageswara RaoRajasulochanaGirija
Manaalane Mangaiyin BaakkiyamTamilSundariGemini GanesanRajasulochanaGirija
Chakravarthi ThirumagalTamilKalamaliniM. G. RamachandranS. Varalakshmi
Neelamalai ThirudanTamilMaragathamRanjan
1958Chenchu LakshmiTeluguGoddess LakshmiA. Nageswara Rao
Chenchu LakshmiTamilGoddess LakshmiA. Nageswara Rao
Illarame NallaramTamilGemini GanesanB. Saroja Devi
Kanniyin SabadhamTamilK. R. RamaswamyRajasulochana
1959JayabheriTeluguManjulavaniA. Nageswara Rao
KalaivananTamilA. Nageswara Rao
Naan Sollum RagasiyamTamilSivaji Ganesan
1960Bhatti VikramarkaTeluguN. T. Rama RaoKanta Rao
Mannadhi MannanTamilPrincess KarpagavalliM. G. RamachandranPadmini
Aadavantha DeivamTamilKalyaniT. R. MahalingamE. V. Saroja
Adutha Veettu PennTamilT. R. Ramachandran
Engal SelviTamilA. Nageswara Rao
1961NaganandhiniTamilK. Balaji
PangaaligalTamilM. R. Radha
1962BhishmaTeluguAmbaN. T. Rama Rao
Mangaiyar Ullam Mangatha SelvamTamilGemini Ganesan
Naag DevtaHindiMohiniMahipal
1963Lava KushaTeluguSitaN. T. Rama RaoKanta Rao
1963Lava KushaTamilSitaN. T. Rama RaoGemini Ganesan
1965Sati SakkubaiTelugu
1966Chilaka GorinkaTeluguKrishnam RajuKrishna Kumari
Palnati YudhamTeluguN. T. Rama RaoP. BhanumathiJamuna
Rangula RatnamTeluguRam MohanChandra Mohan
1967Bhakta PrahladaTeluguLeelavatiS. V. Ranga Rao
RahasyamTeluguA. Nageswara RaoB. Saroja DeviG. Varalakshmi
1971Kalyana MandapamTeluguShobhan BabuKanchana
1971SabathamTamilRajeswariRavichandranK. R. Vijaya
1972Badi PanthuluTeluguN. T. Rama Rao
Bala BharatamTelugu
Tata ManavaduTeluguS. V. Ranga Rao
1973Bhakta TukaramTeluguAvali BaiA. Nageswara RaoKanchana
Jeevana TarangaluTeluguSobhan BabuKrishnam RajuVanisreeLakshmi
1974Urimai KuralTamilM. G. RamachandranLatha, S. V. Sahasranamam
1975SoggaduTeluguSobhan BabuJayasudhaJayachitra
1976Mahakavi KshetrayyaTeluguA. Nageswara Rao
1977Shri Ram VanvasHindi
KurukshetramTeluguKuntiKrishnaSobhan Babu
1979Annai Oru AlayamTamilRajinikanthSripriya
1980Ram Robert RahimTeluguKrishnaRajinikanthChandra Mohan, Sridevi
ChandipriyaTeluguChiranjeevi
Bhale KrishnuduTeluguMohan BabuKrishnaJaya Prada
1986Sri Shirdi Saibaba MahathyamTeluguVijayachanderJ. V. SomayajuluKanta Rao
1986Sri Seeradi SaibabaTamilVijayachanderJ. V. SomayajuluKanta Rao
1987SrutilayaluTeluguKaikala SatyanarayanaRajasekharSumalata
1987Kadhal ParisuTamilKamal HaasanAmbikaRadha
1993BrundavanamTeluguRajendra PrasadRamya KrishnaGummadi Venkateswara Rao

Producer[edit]

  • Paradesi
  • Suvarna Sundari
  • Swarnamanjari
  • Chandi Priya
  • Sati Sakkubai
  • Shirdi Sai Sathya Sai Divya Katha (television series)

No comments:

Post a Comment