Tuesday 30 August 2016

ஏழாம் கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் ஆகஸ்ட் 12, 30 கி .மு


ஏழாம் கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் ஆகஸ்ட் 12, 30 கி .மு 


வாழ்க்கை வரலாறு[தொகு]

கிளியோபாட்ரா VII (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; கிமு 69 [1] – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் நபராவார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். பண்டைய எகிப்தின் ஹெலனிய அரசியான இவர் ஏழாம் கிளியோபாட்ரா என்றும் அழைக்கப்பெறுகிறார். 



வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன


எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா  தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை  எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.

கிளியோபட்ரா தன்னுடைய தந்தையான 12ம் தொலமியுடன் ஆட்சி செய்தவர், அவருடைய இறப்பிற்கு பின்பு சகோதரர்கள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை


இதில் இன்னொரு கூத்தும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்ல அப்போது தம்பியுடன் சேர்த்தும் ஆளமுடியாது! ஒரு வழி, யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம். ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த ஜூனியர் டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயசு ராணி, பத்து வயசு ராஜா. ஆட்சியெல்லாம் சூப்பராகத் தான் நடந்தது.


ஆனால் அந்தச் சின்னப் பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். அவனுக்கு இன்னும் நாலைந்து வயசுகள் கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சில வில்லன்கள், நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய, நீ சும்மா கையெழுத்துப்போடுவதில் என்ன பெருமை இருக்கிறது என்று தூண்டி விட்டார்கள்.


ஆகவே, அந்த ஜூனியர் டாலமியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு குட்டிப் புரட்சியைத் தூண்டி விட்டு, அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோபாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான். 

ஜூலியர் சீசர்

அடுத்தாக, ஜூலியஸ் சீசரை திருமணம் செய்துகொண்டவருக்கு தாலமி சீஸர் என்ற குழந்தையுண்டு. சீசரின் மரணத்திற்குப்பிறகு அவருடைய படைத்தளபதியான மார்க் ஆண்டனியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். எனவே கிளியோபட்ராவிற்கு நான்கு கணவன்மார்கள், நான்கு குழந்தைகள். அறிவு, செயல்திறன், அழகு கொண்டவராக கிளியோபட்ரா அறியப்பெறுகிறார். இவர் வெண்மைநிறம் வாய்ந்தவர் என்றும், பேரழகி என்ற கருத்தும் வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்படுகிறது. 


ஆண்டனியுனான வாழ்க்கை[தொகு]

நெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்கு சென்ற சீசர். ரோம் பாராளுமன்றத்தில் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரை கொலை செய்தான். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழந்தது. கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். 
அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதனையும் கிளியோபட்ராவே கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனது. ஆண்டனி கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார்.

சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பெற்றார்.

மரணம்[தொகு]

கிளியோபட்ராவின் மரணம் 
The Death of Cleopatra by Juan Luna, 1881.
ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப்பாம்புகளை தீண்டும் படி செய்து உயிர் துறந்தாள். கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் 



சிலர் வேறுவிதமாக கூறுவதுண்டு. கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

The Death of Cleopatra by Guido Cagnacci, 1658

கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கதிலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர். பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன.[2]
The Death of Cleopatra



 சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க  வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.

திறமை[தொகு]
கிளியோபாட்ராவை பேரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், சோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களை தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாக கூறப்படுகிறது.

எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வை தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காணப்படுகிறது.

கிளியோபட்ராவின் நம்பிக்கைகள்[தொகு]


தினம் பாலில் குளிப்பவள்
கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்
உடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்







No comments:

Post a Comment