ஏழாம் கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் ஆகஸ்ட் 12, 30 கி .மு
ஏழாம் கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் ஆகஸ்ட் 12, 30 கி .மு வாழ்க்கை வரலாறு[தொகு] கிளியோபாட்ரா VII (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; கிமு 69 [1] – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் நபராவார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். பண்டைய எகிப்தின் ஹெலனிய அரசியான இவர் ஏழாம் கிளியோபாட்ரா என்றும் அழைக்கப்பெறுகிறார். வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாம...