Posts

Showing posts with the label பெர்னாட்சா

தமிழகத்தின் பெர்னாட்சா அறிஞர் அண்ணா சி .என் .அண்ணாதுரை பிறந்த நாள் 15 செப்டம்பர் 1909

Image
தமிழகத்தின் பெர்னாட்சா  அறிஞர் அண்ணா  சி .என் .அண்ணாதுரை பிறந்த நாள்  15 செப்டம்பர் 1909 காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார்.  முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர் இளமைப் பருவம்[தொகு] அறிஞர் அண்ணா பிறந்தது பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சி. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து சமயத் தொண்டாற்றியிருக்கிறார். காஞ்சிபுரத்துக்கு யுவான் சுவாங் சீனயாத்ரிகன் அசோகன் மணிமேகலை ஆகியோர் வந்து சமயத் தொண்டாற்றிருக்கிறார்கள். மிகப்பெரிய வடமொழி பல்கலைக்கழகம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு இருந...