DAVID FORT OF CUDDALORE HISTORY
DAVID FORT OF CUDDALORE HISTORY சிலர் அறிந்ததும்..பலர் அறியாததும்.. நீங்கள் கடலூரைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்திருந்தால், குண்டுஉப்பலவாடி, குண்டுசாவடி, நத்தவெளி குண்டுசாலை, செம்மண்டலம் குண்டுசாலை என நகரில் சில பகுதிகளின் பெயர்களுடன் 'குண்டு' ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கக் கூடும். அதென்ன ஏரியா பெயர்களுடன் 'குண்டு' ஒட்டிக் கொண்டிருக்கிறது..! தெரிந்து கொள்வோம்... அதற்கு, தற்போது கடலூரின் புகழ்மிக்க வெள்ளிக் கடற்கரையின் அருகே சிதிலமடைந்த நிலையில் இருக்கிற புனித டேவிட் கோட்டையின் வரலாற்றை அறிவது அவசியம். செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிறிய கோட்டையாக இருந்த இக்கோட்டை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1677-ல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் இக்கோட்டை மராத்தியரின் கைக்கு வந்தது. பின்னர் 1684-ம் ஆண்டு மராத்திய மன்னரும் வீர சிவாஜியின் மகனுமான சம்பாஜி ஆங்கிலேயர்களுக்கு இவ்விடத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். அதன்பிறகு இக்கோட்டைக்கு சென்னை ஆளுநரான எலிகு யேல் என்பவர், ...