Sunday 31 January 2021

DAVID FORT OF CUDDALORE HISTORY

 


DAVID FORT OF CUDDALORE HISTORY

சிலர் அறிந்ததும்..பலர் அறியாததும்..



நீங்கள் கடலூரைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்திருந்தால், குண்டுஉப்பலவாடி, குண்டுசாவடி, நத்தவெளி குண்டுசாலை, செம்மண்டலம் குண்டுசாலை என நகரில் சில பகுதிகளின் பெயர்களுடன் 'குண்டு' ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கக் கூடும்.


அதென்ன ஏரியா பெயர்களுடன் 'குண்டு' ஒட்டிக் கொண்டிருக்கிறது..! தெரிந்து கொள்வோம்... 


அதற்கு, தற்போது கடலூரின் புகழ்மிக்க வெள்ளிக் கடற்கரையின் அருகே சிதிலமடைந்த நிலையில் இருக்கிற புனித டேவிட் கோட்டையின் வரலாற்றை அறிவது அவசியம்.



செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிறிய கோட்டையாக இருந்த இக்கோட்டை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1677-ல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் இக்கோட்டை மராத்தியரின் கைக்கு வந்தது. பின்னர் 1684-ம் ஆண்டு மராத்திய மன்னரும் வீர சிவாஜியின் மகனுமான சம்பாஜி ஆங்கிலேயர்களுக்கு இவ்விடத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். 


அதன்பிறகு இக்கோட்டைக்கு சென்னை ஆளுநரான எலிகு யேல் என்பவர், 'புனித டேவிட் கோட்டை' என்று பெயரிட்டார்.


இந்தக் கோட்டையை ஆங்கிலேயர் வாங்கியபோது, கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக வினோதமான வழிமுறை கையாளப்பட்டது.



இக்கோட்டையில் இருந்து அனைத்துத் திசைகளிலும், வானை நோக்கி பீரங்கி குண்டுகள் சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டுகள் விழுந்த இடம் வரையிலான பகுதிகள் கோட்டைக்குச் சொந்தமான பகுதிகளாக கை கொள்ளப்பட்டன.


 அதன்படி, இக்கோட்டையிலிருந்து 6 முதல் 7 கி.மீ வரையிலான சுற்றளவுள்ள கடலூரின் பகுதிகள் ஆங்கிலேயர் வசமாயின. இன்றும் அந்தக் கிராமங்கள் மற்றும் பகுதிகள் 'குண்டுஉப்பலவாடி', 'குண்டுசாவடி' மற்றும் 'குண்டுசாலை' என்ற பெயர்களால் அழைக்கப்படுவது அந்த வரலாற்றை நமக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது என்கின்றார் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் நா. சேதுராமன்.



குறிப்பு; ஐரோப்பியர்கள் கி.பி.17ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் காலடி வைத்தபோது அவர்கள்  தங்கள் வணிகத்துக்கும், அரசியலுக்கும் கடற்கரை நகரங்களையே முக்கியத் தளமாக பயன்படுத்திக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியிலும், ஆங்கிலேயர்கள் கடலூரிலும் தங்கள் வணிகக் குடியேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டனர். கடலூரில் உள்ள இந்த புனித டேவிட் கோட்டையில் தான் ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டி ஆண்டனர். இங்கு ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அடிக்கல் நாட்டிய ராபர்ட் கிளைவ் கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை முக்கிய ராணுவ, வியாபார மையமாகப் பயன்படுத்தினான்.


 


 


 


top of page



 

No comments:

Post a Comment