Saint Petersburg named as lenin grad
1924 january 24
உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.1924 JANUARY 24
லெனின்கிராட் முற்றுகை (Siege of Leningrad) அல்லது லெனின்கிராட் அடைப்பு (Leningrad Blockade, உருசியம்: блокада Ленинграда) 1941-44 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகத் தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான லெனின்கிராடை நாசி ஜெர்மனியின் படைகள் மூன்றாண்டுகள் முற்றுகையிட்டுக் கைப்பற்ற முயன்று தோற்றன. 872 நாட்கள் நீடித்த இம்முற்றுகை உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாகக் கருதப்படுகிறது.
லெனின்கிராட் நகரம் சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான நகரங்களுள் ஒன்றாக இருந்தது. வலிமை வாய்ந்த சோவியத் பால்டிக் கப்பற்படையின் தளமாகவும், பெரும் தொழில்மையமாகவும் விளங்கியது. சோவியத் ஒன்றியத்தின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் 11 சதவிகிதத்திற்கு லெனின்கிராடே மூலம். எனவே
ஜெர்மானியப் படைகள் இதனைக் கைப்பற்றுவதில் முனைப்பு காட்டின. ஃபீல்டு மார்சல் வான் லீப் தலைமையிலான ஆர்மி குரூப் வடக்கு, செப்டம்பர் 1941 இல் லெனின்கிராடை அடைந்து நகரை முற்றுகையிட்டது. தெற்கில் ஜெர்மானியப் படைகளும் வடக்கில் ஃபின்னியப் படைகளும் லெனின்கிராட் நகரையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் சுற்றி வளைத்தன. அடுத்த மூன்றாண்டுகள் அச்சு முற்றுகைப் படைகளுக்கும் நகரை விடுவிக்க முயன்ற சோவியத் படைகளுக்கும் இடையறாச் சண்டை நிகழ்ந்தது. மூன்று ஆண்டுகளில் மூன்று முறை லெனினிகிராடை விடுவிக்க சோவியத் படைகள் பெரும் தாக்குதல்களை மேற்கொண்டன.
முற்றுகையிடப்பட்ட லெனின்கிராடுக்கு உணவு மற்றும் தளவாடங்கள் வழங்க சோவியத் படைகள் உறைபனி வழியாக ஒரு சாலையை உருவாக்கின. “உயிர்ச் சாலை” என்றழைக்கப்பட்ட இச்சாலை மூலம், இடைவிடாத ஜெர்மானிய குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கிடையே உணவும் தளவாடங்களும் லெனின்கிராடுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கிழக்குப் போர்முனையில் சோவியத் தரப்பு வெற்றி பெறத் தொடங்கிய பின்னர் ஜனவரி 1943 இல் முற்றுகை சிறிதே தளர்ந்தது; நிலம் வழியாக லெனின்கிராட் நகரை அடைய சோவியத் படைகள் வழி ஒன்றை உருவாக்கின. லெனின்கிராட் ஜனவரி 1944 இல் மேற்கு நோக்கி முன்னேறி வந்த சோவியத் படைகளால் விடுவிக்கப்பட்டு முற்றுகை முடிவுக்கு வந்தது.
872 நாட்கள் நடைபெற்ற இம்முற்றுகையினால் ஏற்பட்ட உயிரிழப்பு உலக வரலாற்றில் ஒரு நகரத்தில் ஏற்பட்ட மாபெரும் உயிரிழப்பாக அமைந்தது. நகரத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு மையங்கள் ஜெர்மானியப் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு பின் அழிக்கப்பட்டன. முற்றுகையினால் லெனின்கிராட் பகுதியில் பெரும் பஞ்சம் உண்டாகியது. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் லெனின்கிராட் பகுதியில் இருந்து காலி செய்யப்பட்டனர். அவர்களில் மிகப்பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர். காலி செய்தலின் விளைவாக இக்குடிமக்களிடையே பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இது தவிர மூன்றாண்டுகள் போரில் 15 லட்சம் சோவியத் வீரர்கள் உயிரிழந்தனர். முற்றுகையின் போது அச்சு தரப்பில் ஏற்ப்பட்ட இழப்புகள் பற்றி தரவுகள் கிட்டவில்லை. நகரில் எஞ்சியிருந்த குடிமக்கள் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். பட்டினிச்சாவுகள் மிகுந்து மாந்தர் ஒருவரையொருவர் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். லெனின்கிராட் முற்றுகை உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாகக் கருதப்படுகிறது.
உருசியாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.1924 JANUARY 24
லெனின்கிராட் முற்றுகை (Siege of Leningrad) அல்லது லெனின்கிராட் அடைப்பு (Leningrad Blockade, உருசியம்: блокада Ленинграда) 1941-44 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகத் தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான லெனின்கிராடை நாசி ஜெர்மனியின் படைகள் மூன்றாண்டுகள் முற்றுகையிட்டுக் கைப்பற்ற முயன்று தோற்றன. 872 நாட்கள் நீடித்த இம்முற்றுகை உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாகக் கருதப்படுகிறது.
லெனின்கிராட் நகரம் சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான நகரங்களுள் ஒன்றாக இருந்தது. வலிமை வாய்ந்த சோவியத் பால்டிக் கப்பற்படையின் தளமாகவும், பெரும் தொழில்மையமாகவும் விளங்கியது. சோவியத் ஒன்றியத்தின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் 11 சதவிகிதத்திற்கு லெனின்கிராடே மூலம். எனவே ஜெர்மானியப் படைகள் இதனைக் கைப்பற்றுவதில் முனைப்பு காட்டின. ஃபீல்டு மார்சல் வான் லீப் தலைமையிலான ஆர்மி குரூப் வடக்கு, செப்டம்பர் 1941 இல் லெனின்கிராடை அடைந்து நகரை முற்றுகையிட்டது. தெற்கில் ஜெர்மானியப் படைகளும் வடக்கில் ஃபின்னியப் படைகளும் லெனின்கிராட் நகரையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் சுற்றி வளைத்தன. அடுத்த மூன்றாண்டுகள் அச்சு முற்றுகைப் படைகளுக்கும் நகரை விடுவிக்க முயன்ற சோவியத் படைகளுக்கும் இடையறாச் சண்டை நிகழ்ந்தது. மூன்று ஆண்டுகளில் மூன்று முறை லெனினிகிராடை விடுவிக்க சோவியத் படைகள் பெரும் தாக்குதல்களை மேற்கொண்டன.
முற்றுகையிடப்பட்ட லெனின்கிராடுக்கு உணவு மற்றும் தளவாடங்கள் வழங்க சோவியத் படைகள் உறைபனி வழியாக ஒரு சாலையை உருவாக்கின. “உயிர்ச் சாலை” என்றழைக்கப்பட்ட இச்சாலை மூலம், இடைவிடாத ஜெர்மானிய குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கிடையே உணவும் தளவாடங்களும் லெனின்கிராடுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கிழக்குப் போர்முனையில் சோவியத் தரப்பு வெற்றி பெறத் தொடங்கிய பின்னர் ஜனவரி 1943 இல் முற்றுகை சிறிதே தளர்ந்தது; நிலம் வழியாக லெனின்கிராட் நகரை அடைய சோவியத் படைகள் வழி ஒன்றை உருவாக்கின. லெனின்கிராட் ஜனவரி 1944 இல் மேற்கு நோக்கி முன்னேறி வந்த சோவியத் படைகளால் விடுவிக்கப்பட்டு முற்றுகை முடிவுக்கு வந்தது.
872 நாட்கள் நடைபெற்ற இம்முற்றுகையினால் ஏற்பட்ட உயிரிழப்பு உலக வரலாற்றில் ஒரு நகரத்தில் ஏற்பட்ட மாபெரும் உயிரிழப்பாக அமைந்தது. நகரத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு மையங்கள் ஜெர்மானியப் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு பின் அழிக்கப்பட்டன. முற்றுகையினால் லெனின்கிராட் பகுதியில் பெரும் பஞ்சம் உண்டாகியது. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் லெனின்கிராட் பகுதியில் இருந்து காலி செய்யப்பட்டனர். அவர்களில் மிகப்பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர். காலி செய்தலின் விளைவாக இக்குடிமக்களிடையே பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இது தவிர மூன்றாண்டுகள் போரில் 15 லட்சம் சோவியத் வீரர்கள் உயிரிழந்தனர். முற்றுகையின் போது அச்சு தரப்பில் ஏற்ப்பட்ட இழப்புகள் பற்றி தரவுகள் கிட்டவில்லை. நகரில் எஞ்சியிருந்த குடிமக்கள் கடும் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். பட்டினிச்சாவுகள் மிகுந்து மாந்தர் ஒருவரையொருவர் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். லெனின்கிராட் முற்றுகை உலக வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய முற்றுகையாகக் கருதப்படுகிறது.
2ம் உலகப் போரின் போது, நாசி படைகளை கொன்று குவித்து வெற்றி கொண்டது ரஷ்யா. இந்த யுத்தகம் நடந்தது 75 ஆண்டுகள் கடந்தாலும், அதை சிறப்பாக கொண்டாடியது ரஷ்யா.இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாப்பட்டது. இதற்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தலைமை தாங்கினார். இதையொட்டி செயிண்ட் பீட்டர்ஸ்பார்க் அரண்மனை சதுக்கத்தில் ராணுவ அணிவகுப்பு நடந்தது.லெனின்கிராட் முற்றுகை: லெனின்கிராட் முற்றுகை 1941 செப்டம்பர் 8ம் துவங்கி 1943 ஜனவரி 27ம் தேதி வரை என 872 நாட்கள் நடந்தது. இந்த முற்றுகையின் போது, 1.2 மில்லியன் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதா கூறப்படுகின்றது.
27 மில்லியன் மரணம்: சோவியத் யூனியன் 2ம் உலகப்போரின் போது 27 மில்லியன் மரணங்களை சந்திதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்கினர்.அணி வகுப்பு: 2,500க்கும் அதிகமான ராணுவ வீரர்கள், 80 யூனிட் ராணுவ உபகரணங்களுடன் அணி வகுப்பு நடந்தது. இதில் அப்போது, வெற்றி கொண்ட போது, நாசி படைகளின் டி-34 டாங்கி, ஜெர்மின ராக்கெட் அமைப்புகள், காலால் படை போர் தளவாட கருவிகள் உள்ளிட்டவை இடம் பெற்றன.புதிய அருங்காட்சியகம்: ஜெர்மினியை வெற்றி கொண்டதின் நினைவாக புதிய அருங்காட்சியம் அமைக்கப்படுகின்றது. இதற்காக 2.3 டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிட்டரின் படைகள்: போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஸி படையினர் ரஷ்யாவின் ஸ்டாலின்கிரேடு பகுதி வரை முன்னேறினர். அதன் பின்னர் அவர்களைத் தடுத்த ரஷ்ய ராணுவம் கொடுத்த பதிலடியால் ஜெர்மனிப் படையினர் தோல்வியைத் தழுவினர்.அஞ்சலி செலுத்தினார்: இந்த வெற்றியில் 75வது கொண்டாட்டத்தின் போது ரஷ்ய அதிபர் புதின், உயிரிழந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இறுதியில் 2ம் உலகப் போர் எப்படி நடந்தது என்பதை அந்தக் காலத்திய ஆயுதங்கள். டேங்குகள் கொண்டு ரஷ்ய ராணுவத்தினர் நடித்துக் காட்டினர்.
கோலாகலமாக கொண்டாடப்பட்டது: ராணுவத்தினர் 75ம் ஆண்டு நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர். ஏராளமான ராணுவ வாகனங்களும் அணி வகுத்து வந்து நின்றன.
No comments:
Post a Comment