Monday 25 January 2021

TIRUVILAIYADAL MOVIE SHOOTING -SIVAJI GANESAN

 

TIRUVILAIYADAL MOVIE SHOOTING -SIVAJI GANESAN



`ஒரு நாள் போதுமா’ படப்பிடிப்பு துவங்குமுன் படப்பிடிப்பு தளத்தில் ஏன் திடீர் பரபரப்பு.........

காரணமிருந்தது.

அன்று அங்கே வேலையேயில்லாத சிவாஜி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து பாலையாவின் காலைத் தொட்டு வணங்கினார். காரணம் பாலையா சிவாஜிக்கு தொழிலில் மூத்தவர்.

சாதாரண உடையில் சிவாஜி அங்கே வந்தார்

இயக்குனர் ஏ.பி. நாகராஜன் உட்பட எல்லோருக்கும் ஏன் திடீரென்று சிவாஜி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார் என்பதில் ஒரு சந்தேகம்! ஒரு பதட்டம்

சிவாஜியிடம் கேட்டபோது ` வீட்டிலே சும்மா இருந்தேன். அதனால் சும்மா படப்பிடிப்பை பார்க்க வந்தேன்’ என்றார்.

ஆனால் உண்மையில் சிவாஜி வந்த காரணம் அதுவல்ல!


படத்தின் காட்சியின்படி ஹேமநாத பாகவதரை, பாண்டிய நாட்டை விட்டு சிவபெருமானாகிய சிவாஜி கணேசன் அடுத்து அவர் வீட்டில் பாடி அவரை பாடி விரட்ட வேண்டும்

அதற்கான பாடல், பாட்டும் நானே பாவமும் நானே பாடல் ஏற்கெனவே பதிவாகிவிட்டது.

இந்தப் பாடலில் பாலையா எப்படி நடிக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால்தான் அடுத்து தான் அவரை விரட்டியடித்து பாடுகிற காட்சியில் அதற்கு இணையாக நடிக்க முடியும்.

அதற்காகவே பாலையா எப்படி நடிக்கிறார் என்பதை பார்க்கவே சிவாஜி அங்கே அங்கே வந்திருக்கிறார்.

சிவாஜியின் தொழில் பக்தி என்பது அளப்பரியது.

அந்தப் படத்தில் சிவாஜி எப்படி நடித்திருந்தாலுமே ரசிகர்கள் என்ன அவரை வெறுத்து விடப்போகிறார்களா என்ன ?

இல்லை. படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்கிற ஈடுபாடு. இந்த ஈடுபாடு சிவாஜி நடித்த கடைசி படம் வரை இருந்தது.

இப்போது திருவிளையாடல் படத்திற்கு வருவோம்.

இப்போது பாண்டிய மன்னன் சபையில் ஹேமநாத பாகவதர் ` ஒரு நாள் போதுமா’ பாடலை பாடிவிட்டு பாண்டிய நாட்டுக்கு சவாலும் விட்டுவிட்டார்.

பாண்டியனுக்கு ஒரே குழப்பம். இத்தனை பெரிய பாண்டிய நாட்டில் இந்த ஹேமநாத பாகவதரை பாட்டில் வெல்ல ஒருவரும் இல்லையா ? என்று பாண்டியன் குழம்பினான்.

ஆலோசகர்கள் ஹேமநாத பாகவதரோடு போட்டி போட பாண்டிய நாட்டில் ஒரே ஒருவர் தான் உண்டு. அவர் தான் பாணபட்டர்.


பாணபட்டரை அழைத்து `நீர்தான் பாண்டிய நாட்டு மானத்தையும், நாட்டையும் காக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டான்.

பாணபட்டருக்கோ குலை நடுக்கம். தன்னால் ஹேமநாத பாகவதரை பாட்டில் வெல்ல முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

புலம்பித் தவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போய் அங்கேயிருந்த சுந்தரேஸ்வரர் முன் பாடுவார்.

இந்தக் காட்சிக்கு என்ன எழுதுவது?

கவிஞர்கள் திணறுவார்கள். கண்ணதாசன் அங்கே நின்றார்.

படத்தில் பாணபட்டராக நடித்தவர் டி.ஆர். மகாலிங்கம். அவருடைய குரல் வளம் நாடறிந்தது.

அவர் சிவம் முன் பாடுகிறார்.

பாடல் இதுதான்

இந்தப் பாடலில்தான் கண்ணதாசனின் சர்வவல்லமை ஞானப் புலமையை கவனிக்க வேண்டும்.

இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை – நீ

இருக்கையிலே எனக்கேன் பெருஞ்சோதனை

அதாவது இசைத்தமிழை படைத்தவன் சிவன். அவன் சன்னதியில் டி.ஆர். மகாலிங்கம் பாணபட்டராக பாடுகிறார்.

நீ இருக்கிற போது அதுவும் இந்த மதுரையில் இருக்கும்போது எனக்கேன் பெருஞ்சோதனை.

அடுத்தவரியைக் கவனியுங்கள்

வசை வருமே பாண்டி நாட்டினிலே – குழலி

மணவாளனே உனது வீட்டினிலே – வெற்றி

ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ?

அதாவது மதுரைதான் தமிழுக்கான தலைநகரம். மீனாட்சி கோயில் கொண்டிருக்கும் நகரம். இங்கேதான் சிவபெருமான் தமிழை வளர்க்க தமிழ்ச் சங்கத்தை பாண்டியன் மூலமாக நிர்மாணித்தார்.

இந்த தமிழ்ச் சங்கத்தில் பல புலவர்கள் இருந்தார்கள்.

அதில் தலையாய கவிஞர் நக்கீரர். இங்கே தான் தமிழை வளர்க்க பல விவாதங்கள் நடக்கும்.

இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை கண்ணதான் எப்படி பாட்டில் கொண்டு வந்தார் பாருங்கள்.

பாணபட்டர் சிவபெருமான் முன்பு பாடுகிறார்

சிவனிடம் முறையிடுகிறார்.

நான் இந்த பாட்டில் தோற்றுவிட்டால் இந்த பாண்டிய நாட்டிற்கே ஒரு பழி வருமே. குழலி மணவாளனே உனது வீட்டினிலே. பார்வதியில் பல பெயர்களில் ஒன்று குழலி.

குழலியின் கணவனாகிய மணவாளனே வெற்றி ஒருவனுக்கோ- மதுரை தமிழனுக்கோ அதாவது இந்தப் பாடல் போட்டியில் எங்கிருந்தோ ஒருவனுக்கா அல்லது உன் மண்ணில் பிறந்த மதுரை தமிழுனுக்கா?

இந்தப் போட்டியை பார்த்துக் கொண்டு நீ சும்மா இருக்க போகிறாயா? என்று பாணபட்டர் சிவனிடம் பாடல் மூலமாக முறையிடுவதாக அமைந்தது கண்ணதாசன் வரிகள்.

No comments:

Post a Comment