Sunday 24 January 2021

CHINNA ANNAMALAI , BROTHER OF KANNADASAN FIGHTER BORN ஜூன் 18 1920 - ஜூன் 18 1980

 

CHINNA ANNAMALAI , BROTHER OF 

KANNADASAN FIGHTER BORN  

ஜூன் 18 1920 - ஜூன் 18 1980



சின்ன அண்ணாமலை (Chinna Annamalaiஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர்திரைப்படத் தயாரிப்பாளர்[1


பெயர் காரணம்[தொகு]

1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5]

வாழ்க்கை வரலாறு[தொகு]

சிவகங்கை மாவட்டம்காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் போட்டதால் கைது செயபட்டார். திருவாடானை சிறையில் அடைக்கபட்ட இவரை பொதுமக்கள் சிறையை உடைத்து மீட்டனர். சிவாஜி கணேசனின் தீவிர இரசிகரான இவர் அவருக்கு இரசிகர் மன்றத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார். 18 சூன் 1980 அன்று இவரது அறுபதாம் ஆண்டு விழாவின்போது இவருக்கு நடந்த அபிசேக சடங்கின்போது ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்தினால் இறந்தார்.[6]

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

"ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர்.

இயற்றியுள்ள நூல்கள்[தொகு]

  1. கண்டறியாதன கண்டேன்
  2. கதைக்குள்ளே கதை
  3. சர்க்கரைப் பந்தல்
  4. சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
  5. சிரிப்புக்கதைகள், தொகுத்துப்பதிப்பித்தவர் சீனி. விசுவநாதன் 1961 ஏப்ரல், மேகலைப் பதிப்பகம், சென்னை.
  6. சுவை நானூறு
  7. சொன்னால் நம்ப மாட்டீர்கள் (நூல்)
  8. தலையெழுத்து
  9. ராஜாஜி உவமைகள்[7]

வெளியிட்ட நூல்கள்[தொகு]

சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:

  1. பாரதி பிறந்தார், கல்கி
  2. வ. உ. சிதம்பரனார், ம. பொ. சிவஞானம்


ஈவேரா, ராமரை செருப்பு கொண்டு அடித்ததை இந்துக்களுக்கு விளக்க போஸ்டர் அடித்து ..
அதை கருணாநிதி தடை செய்ய .. அதை சென்னை உயர்நீதி மன்றத்தில் எதிர்த்து வெற்றி கொண்டவர் பெயர்:-
சின்ன அண்ணாமலை .. (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) - கவிஞர் கண்ணதாசனின்
சகோதரர்
டேய் ஈவேரா .. மண்ணுடா .. கருணாநிதி யார் தெரியுமா ... திராவிடம் டா என்று பேசி திரிபவர்கள் இந்த சின்ன அண்ணாமலை யார் என்று தயவு செய்து படியுங்கள் ..
அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவருக்காக இருபதாயிரம் மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சப் ஜெயிலை உடைத்து அவரை வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். இப்போது அல்ல 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது...ராஜாஜியின் தொண்டர், 'சிறிய திருவடி' என்று அன்போடு அழைக்கப் பட்டவர்!!
விரிவாக இவரை பற்றி படிக்க
=========================
==========================
சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வு அதிகம். அப்படிப்பட்டவரைப் பற்றி பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜ் அவர்கள் சொன்னதைப் பார்க்கலாம்.
"நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.
இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்யம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று 'வந்தேமாதரம்' என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.
ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடனை சிறையில் அடைத்தது. 24 மணி நேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்து விட்டார்கள்.
இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்."

சுமார் 20,000 கூடி சிறையை உடைத்து இவரை வெளியில் அழைத்து வந்த பொது பல சுடப்பட்டு இறந்தனர் .. பலர் ஊனமாயினர் .. இவர் கையில் குண்டு காயம் ..
இவர தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து சுதந்திர தீயை வளர்த்தவர் ...
முக்கியமான விசயம் .. நாடு விடுதலை அடைந்து காங்கிரஸ் ஆட்சியிலும் கட்சிளும் எந்த பதவியும் ஏற்கவில்லை !!
அப்பேர்ப்பட்ட மா மனிதர்தான் பெரியாருக்கு ... திராவிட தீதுகளுக்கும் எதிராக .. ராம பிரான் அவமதிக்கப்பட்ட பொது சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கொண்ட மகான் ..
இவர் அன்று ஈவேராவின் கொடுமைக்கும் அதோடு கருணாநிதி அரசின் நேரடி உதவிக்கும் எதிராக சட்ட போர் நடத்தி .. யாரும் எதிர்த்து பேச முடியாத படி சரித்திரத்தில் பதிவு செய்ய வைத்து விட்டு சென்றதால் இன்று இவர்கள் நடக்கவே இல்லை என்று பேசுவதை ... மறுக்க முடிகிறது
வாழ்க இந்த மகான் ..
விஜயராகவன் கிருஷ்ணன்

No comments:

Post a Comment