SRI VIDYA ,ACTRESS , DANCER BORN
1953 JULY 24 - 2006 OCTOBER 19
ஸ்ரீவித்யா.....
‘காரைக்கால் அம்மையார்’ படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடல் நினைவிருக்கிறதுதானே. அந்தப் பாட்டுக்கு பம்பரமென காற்றையே கிழித்துக்கொண்டு இந்தத் தாளகதிக்கு ஆடினார் அவர்.
பார்த்தவர்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். வியந்து புகழ்ந்தார்கள்.
எம்.எல்.வி. எனும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள், பாட்டுக்குயிலாக வருவார் என குடும்பம் நினைத்த போது, ஆட்டமயிலாக களமிறங்கிய அந்த நடிகை ... ஸ்ரீவித்யா.
அம்மாவின் அன்பு கிடைக்கவேண்டிய தருணத்தில், அம்மா கச்சேரி கச்சேரியாக மேடையேறினார்,
அப்பாவின் அரவணைப்பும் கிடைக்கவில்லை அப்பாவும் இறந்தார்.
பாட்டு ஈர்க்கவில்லை. நடனம் இழுத்தது. நாட்டிய சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி வீட்டுக்குப் பக்கத்துவீடு என்பதுதான் காரணமோ என்னவோ.
அவர்களின் பாராட்டும் ஊக்கமும் முயற்சியும் பயிற்சியும் ஸ்ரீவித்யாவை மெருகேற்றின.
பிறகுதான், ‘திருவருட்செல்வர்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்றெல்லாம் படங்கள் கிடைத்தன.
ஆனாலும் அடுத்தடுத்த கட்டத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் ஸ்ரீவித்யாவையும் அவர் லொட்டுலொட்டு என்று தட்டுகிற கரண்டியையும் எவராலும் மறக்கவே முடியாது.
கே.பாலசந்தர், ஸ்ரீவித்யாவுக்குக் கொடுத்த அருமையான கதாபாத்திரம். ஒரே நாயகனை, மூன்று சகோதரிகளும் காதலிக்க,
அதில் தோற்று நொந்துபோகிற பாத்திரத்தை, அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார் ஸ்ரீவித்யா.
அதையடுத்து வரிசையாக படங்கள். அவரின் நடிப்பையும் அவரின் கண்கள் பேசும் வசனங்களையும் ரொம்பவே ரசித்தார்கள் மக்கள்.
அநேகமாக, டி.ஆர்.ராஜகுமாரியின் கண்களுக்குப் பிறகு, பேசும் கண்களாக ஸ்ரீவித்யாவின் கண்கள் திகழ்ந்தன. அந்தக் கண்களைக் கொண்டும் சிறந்த நடிப்பைக் கொண்டும், பைரவி எனும் கதாபாத்திரத்தை அப்படியே தாங்கிப் பிடித்தார் ஸ்ரீவித்யா.
பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ பைரவியை யாரால்தான் மறக்கமுடியும்? நிஜத்தில் தன்னைவிட ஐந்து வயது அதிகம் கொண்ட ஜெயசுதாவுக்கு அன்னை.
படத்தில், தன்னை விட வயது குறைந்த கமலின் விருப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கும் மிகப்பெரிய பாடகி.
கைவிட்ட காதலன் ரஜினியால் உண்டான குழந்தையை, அனாதைக் குழந்தை என்று வளர்க்கும் கொடுமை...
என நடிப்பில் புதியதொரு பரிணாமும் உயரமும் அவதாரமும் காட்டினார் ஸ்ரீவித்யா.
’, ‘நூற்றூக்கு நூறு’, ’உணர்ச்சிகள்’, ‘ஆறு புஷ்பங்கள்’ என நடித்த படங்களிலெல்லாம் தனித்துத் தெரிந்தாலும்
ஒருகட்டத்தில், ‘இந்தாங்க அம்மா வேஷம்’ என்றது தமிழ்த் திரையுலகம். அதேசமயம், கேரளத் திரையுலகம் விதம்விதமான கதாபாத்திரங்களை வாரி வாரி வழங்கியது. இருநூற்றம்பது படங்களுக்கும் மேல் அங்கே நடித்தார்.
இங்கே... எந்த கமலுடன் நடித்தாரோ அவருக்கு அம்மாவாகவும் ரஜினியின் முதல் படத்து நாயகியான நிலையிலும் அவருக்கு அம்மா, அக்கா, மாமியார் என்றும் நடிக்கத் தொடங்கியதெல்லாம் தமிழ் சினிமாவில் இவருக்குக் கிடைத்த சோகப்பக்கங்கள்.
ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல், அட்டகாசமாக ஒளிர்ந்தார், குணச்சித்திர நாயகி என்று பேரெடுத்தார்.
‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலில் ஸ்ரீவித்யாவின் முகபாவங்கள் தனித்துவமிக்கவை. ஒவ்வொரு வரிகளையும் பாவங்களாலேயே சொல்லியிருப்பார்.
‘கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா’ பாடலிலும் அப்படித்தான். படத்தின் க்ளைமாக்ஸை பாடலைக் கொண்டே முடித்திருப்பார் கே.பி. அதை ஆரம்பித்து முடித்து வைப்பார் ஸ்ரீவித்யா.
‘நூற்றுக்கு நூறு’ படத்தில், ஆசிரியரையே காதலிக்கும் கேரக்டர். ஒருபக்கம் குற்ற உணர்ச்சியை ஒரு கண்ணும்,
இன்னொரு பக்கம் குறுகுறுப்பை இன்னொரு கண்ணும் கேரக்டராக மாறி எடுத்துச் சொல்லும்.
பின்னர், அஜித், விஜய், சூர்யா என எல்லா நடிகர்களுக்கும் அம்மா, அக்கா, அத்தை என வலம் வந்தார். எல்லோருக்கும் பிடித்த நடிகர், பிடித்த நடிகை என்று இருப்பது அரிது. அப்படி அரிதான நடிகை ஸ்ரீவித்யா.
ஸ்ரீவித்யாவை எல்லா இயக்குநர்களுக்கும் பிடிக்கும். பந்தா இல்லாமல், கெடுபிடிகள் செய்யாமல் நடித்துக் கொடுத்துவிட்டுப் போவார். எல்லா நடிகர் நடிகையருக்கும் பிடிக்கும்.
சீனியர் நடிகை, சிறந்த நடிகை என்கிற ஈகோ இல்லை. எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச்சிறந்த நடிப்பை வழங்குவார்.
‘இமயம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தவர்...
ஆஹா’ படத்தில் விஜயகுமார் மனைவியாக மடிசார் புடவையுடன் வெளுத்து வாங்கினார்.
பாலசந்தரின் ’புன்னகை மன்னன்’ டான்ஸ் பள்ளி டீச்சரையும்
வசந்தின் ‘கேளடி கண்மணி’யின் வாய் பேச முடியாத காது கேட்காத அன்னை கதாபாத்திரத்தையும்
மணிரத்னத்தின் ‘தளபதி’ அம்மா கதாபாத்திரத்தையும் வேறு எவரும் செய்யவே முடியாத கேரக்டர்களாக தன் நடிப்பால் இன்றளவும் நிற்கவைத்திருக்கிறார் ஸ்ரீவித்யா.
1953ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார் ஸ்ரீவித்யா. 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி புற்றுநோயால் காலமானார். 53ம் ஆண்டு பிறந்தவர், 53ம் வயதில் இறந்தார்.
ஆனாலும் ஸ்ரீவித்யாவும் அவரின் கண்களும் ரசிகர்களால் மறக்கவே மறக்கமுடியாது.
‘ஸ்ரீவித்யா...’ என்று சொல்லும்போதே ஏதொவொரு மென்சோகம் நமக்குள் சட்டென்று எழும். ஆனால் வாழ்க்கை முழுக்க சந்தோஷத்தையும் நிம்மதியையும் அனுபவிக்காமலே இறந்துவிட்டார் ஸ்ரீவித்யா.
கேரளத்தில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ததும் அவரை மொத்தத் திரையுலகமும் இன்றைக்கும் தனியிடத்தில் வைத்திருப்பதுமான பெருமையும்...
காலத்துக்கும் நினைவில் இருப்பார் ஸ்ரீவித்யா. அவரை போற்றிக்கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள்.
அதிசய ராகம்.. அழகிய ராகம்.. அபஸ்ருதி ராகம்.. மறக்க முடியாத நடிகை ஸ்ரீவித்யா
By Hemavandhana
| Updated: Saturday, October 20, 2018, 8:46 [IST]
மறக்க முடியாத நடிகை ஸ்ரீவித்யா- வீடியோ
சென்னை: பண்பட்ட, பக்குவப்பட்ட நடிப்பை தன் விழியழகால் வெளிப்படுத்தி தென்னிந்திய திரையுலகத்தையே ஈர்த்த நடிகை ஸ்ரீவித்யாவின் நினைவுநாள் இன்று.
கர்நாடக இசையின் தேவகானக்குயில் எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள். இசை, நாட்டியம், இரண்டையுமே சிறுவயதிலேயே கற்ற ஸ்ரீவித்யா சினிமா உலகினரால் வித்தி என அன்போடு அழைக்கப்பட்டார். கதாநாயகி வயதினில் இருக்கும்போதே அதாவது தன் 23 வயதிலேயே அம்மாவாக நடித்தவர்தான் ஸ்ரீவித்யா.
துல்லியமான நடிப்பு
துல்லியமான நடிப்பு
அதுவும் ஒரு கைகுழந்தைக்கோ, சிறுமிக்கா அல்ல, வயது வந்த ஜெயசுதாவிற்கு "அபூர்வராகங்க"ளில். சுமார் 30 ஆண்டுகள் மிகத் துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு, பேசும் விழிகளாலும், ரசிகர்களை தன் பிடியில் வைத்திருந்தார் ஸ்ரீவித்யா. சகல அம்சங்களும் பொருந்தி நாட்டியம், நடிப்பு, இசை என அசாத்திய திறமைகளை ஒருசேரப்பெற்று, திரைத்துறையில் கம்பீரமாக நடைபோட்டவர்கள் ஒரு சிலரே. அதில் முக்கிய இடம் ஸ்ரீவித்யாவுக்குத்தான் போய்சேரும்.
காலை சுற்றிய பாம்பு
காலை சுற்றிய பாம்பு
தங்கையாய், காதலியாய், மனைவியாய், தாயாய், அண்ணியாய், தோழியாய், பாட்டியாய் என்று ஒரு பெண்ணின் அனைத்து முக்கிய பரிணாமத்தையும் படங்களில் குறைவின்றி வெளிப்படுத்தியவர். மணவாழ்க்கையில் கசப்பு கபடமற்ற, எதையும் நல்லதாகவே நம்பும் குழந்தை மனமே அவரது வாழ்க்கையை புரட்டி போட வைத்தது. 35 வயதுக்கு பின்னர், மணவாழ்க்கையில் விதி விளையாட துவங்கியது. சறுக்கி விழுந்தார்... 9 வருட கால போராட்டத்துக்கு பின்னர் தனித்து வாழ்ந்தாலும், காலை சுற்றின பாம்பு கூடவே இருந்தது.
தலையெழுத்து.. விதி
தலையெழுத்து.. விதி
குழந்தையிலிருந்து ஸ்ரீவித்யாவுக்கு இருக்கும் ஆன்மீக ஈடுபாடு அவரை பண்படுத்தின. பக்குவப்படுத்தியன. நடிப்பில் கவனத்தை செலுத்தினார். பல படங்களில் அவரது சாந்தமான முகம்-கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், இயல்பான நடிப்பு, பக்குவமான உணர்வு போன்றவை மறக்க முடியாதது. ஆனால் காலம் கொடுத்த சம்மட்டி அடியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அழகிய ஓவியம் அலங்கோலமாக தொடங்கியது. வடித்து வைத்த சிலை ஒன்றினை கறையான் அரிக்க துவங்கியது. அழகிய மேனியையும் அற்புத குரலையும் சின்னாபின்னபடுத்தி சீரழித்து சிரித்தது தலையெழுத்து... லட்சக்கணக்கான ரசிகர்களை அழவைத்துப் பார்த்து ரசித்தது விதி..
சூன்யமான வாழ்க்கை
சூன்யமான வாழ்க்கை
பெற்றவர்கள் இன்றி, உற்றார் உறவுகளின்றி, தவித்தார். எல்லாமே சூன்யமாகி போனது. தனிமை, ஏகாந்தம் என்ற வட்டத்துக்குள் சூழ்நிலை கைதியின் நிலைக்கு ஆளானார். அனைத்து சொத்துக்களையும் என்ன செய்வது? வசதியும் ஆதரவும் அற்ற கலை ஆர்வம் கொண்ட ஏழை குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக கோடிக்கணக்கான சொத்துக்களை உயில் எழுதி கொடுத்தார். அதனை நம்பி ஒருவரிடமும் ஒப்படைத்தார். ஆனால் அதில் எள்ளளவும் அந்த குழந்தைகளுக்கு போய்ச் சேரவில்லை. சொத்துக்களின் கதி இதுவரை என்னவென்றும் தெரியவில்லை. அதில் ஊசி முனையளவும் நகரவில்லை என்பதே கொடுமையின் உச்சம்!!
கண்கலங்கிய கமல்
கண்கலங்கிய கமல்
நோயால் அவதிப்பட்ட ஸ்ரீவித்யாவை யாருமே சென்று பார்க்க அனுமதி இல்லை.. ஆனால் ஸ்ரீவித்யா கடைசி நாட்களில் பார்க்க விரும்பியது தனது நண்பர் கமலஹாசனைதான்!! இவர்கள் இருவரை பற்றியும் எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் திரையுலக காலில் சக்கரம் கட்டி பறந்தன. ஆனால் அதையும் தாண்டி, புரிதல் என்ற நட்பு பாதையில் பயணித்த ஸ்ரீவித்யாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார் கமல். பாசத்தையும், நட்பையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் இருவரும். ஸ்ரீவித்யாவின் தோற்றத்தை கண்டு கண்கலங்கி நின்றார் கமல். ஸ்ரீவித்யாவும்தான்!!
றவா நட்பு
அவரை சந்தித்துவிட்டு மருத்துவமனை விட்டு வெளியே கமலிடம், புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கமல், "உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம்" என்று சொன்னார். பிறகு விரைவிலேயே ஸ்ரீவித்யா மரணத்தை பற்றி சொன்ன கமல், " அவள் இறந்தாலும் இறவா நட்பு" என்றார். கமலின் மறக்கமுடியாத ஒரே தோழி ஸ்ரீவித்யாவாகத்தான் என்றென்றும் இருக்க முடியும்.
உயிலே சாட்சி
காலத்தின் கோலம் திரைத்துறையில் எப்பேர்பட்ட பிரபலங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் சிக்குண்டு போய்விடுகிறார்கள் என்பதும், காலம் அவர்களை ஒரு புரட்டு புரட்டியே போட்டு தன்னுடன் அழைத்து சென்றுவிடுகிறது என்பதற்கும் ஸ்ரீவித்யா சிறந்த உதாரணம். அவர் எந்த அளவிற்கு விசால மனம் படைத்தவர் என்பதற்கும், அவரது மாபெரும் மனித நேயத்திற்கும், நாட்டியக்கலை மீது இருந்த பற்றுக்கும் அவர் எழுதி வைத்த உயிலே சாட்சியாகும்.
துரதிர்ஷ்டமே
மரணப் படுக்கையிலும் வசதியற்றவர்களுக்கு உயில் எழுதிய உன்னதம் ஸ்ரீவித்யா தவிர வேறு யாருக்கும் வராது. இதமான இதயத்தை அது பிரதிபலித்தது. இதைக்கூட புரிந்து கொள்ளாத ஒருவர் அவருக்கு கணவராக இருந்தது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். தாய்மையடைந்த போதெல்லாம் அந்த வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்ட இந்த திரைத்தாயினால் கடைசிவரை நிஜத்தாயாக வாழமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே!
No comments:
Post a Comment