SRI VIDYA ,ACTRESS , DANCER BORN 1953 JULY 24 - 2006 OCTOBER 19
SRI VIDYA ,ACTRESS , DANCER BORN 1953 JULY 24 - 2006 OCTOBER 19 ஸ்ரீவித்யா..... ‘காரைக்கால் அம்மையார்’ படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடல் நினைவிருக்கிறதுதானே. அந்தப் பாட்டுக்கு பம்பரமென காற்றையே கிழித்துக்கொண்டு இந்தத் தாளகதிக்கு ஆடினார் அவர். பார்த்தவர்கள் எல்லோரும் மிரண்டுபோனார்கள். வியந்து புகழ்ந்தார்கள். எம்.எல்.வி. எனும் எம்.எல்.வசந்தகுமாரியின் மகள், பாட்டுக்குயிலாக வருவார் என குடும்பம் நினைத்த போது, ஆட்டமயிலாக களமிறங்கிய அந்த நடிகை ... ஸ்ரீவித்யா. அம்மாவின் அன்பு கிடைக்கவேண்டிய தருணத்தில், அம்மா கச்சேரி கச்சேரியாக மேடையேறினார், அப்பாவின் அரவணைப்பும் கிடைக்கவில்லை அப்பாவும் இறந்தார். பாட்டு ஈர்க்கவில்லை. நடனம் இழுத்தது. நாட்டிய சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி வீட்டுக்குப் பக்கத்துவீடு என்பதுதான் காரணமோ என்னவோ. அவர்களின் பாராட்டும் ஊக்கமும் முயற்சியும் பயிற்சியும் ஸ்ரீவித்யாவை மெருகேற்றின. பிறகுதான், ‘திருவருட்செல்வர்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்றெல்லாம் படங்கள் கிடைத்தன. ஆனாலும் அடுத்தடுத்த கட்டத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்...