Posts

Showing posts with the label SRI

CORONO SRI MARIAMMAN BIOGRAPHY

Image
  CORONO SRI MARIAMMAN BIOGRAPHY இந்தப் படத்தைப் போட்டு ஒரு சில மக்கள் பரவசம் அடைகிறார்கள் இது நேற்று இன்று வந்த வழக்கமல்ல தொன்றுதொட்டு வந்த வழக்கம். அந்த காலத்தில் ஒரு நோய்த்தொற்று ஒரு ஊரில் பரவினால் அந்த கிருமியை உருவம் செய்து அம்மனை வழிபட்டால் அந்த நோய் அந்த ஊரை விட்டு விலகும் என்பது ஐதீகம் இப்படி வந்தவர்கள்தான் சின்னம்மை மாரியம்மன் ( சின்னம்மை ) பெரியம்மை மாரியம்மன் ( பெரியம்மை ) குஞ்சு மாரியம்மன் ( ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட பருக்கள் போன்ற கொப்பளங்கள் ) முண்டக்கண்ணி அம்மன் ( மெட்ராஸ் ஐ போன்ற கண் வீங்கியது ஒருகாலத்தில் ஒரு வைரஸ் நோய் ) கண்ணாத்தா ( ஒருவித வைரஸ் ஆல் கன் பாதிப்படைந்தது ) பிளேக் மாரியம்மன் ( பிளேக் நோயால் மக்கள் அவதிப்பட்ட போது உருவான மாரியம்மன் ) கருமைநிற மாரியம்மன் ( தொழுநோயால் கருமை நிறமானது ஒரு காலத்தில் ) இப்படி அந்த காலத்தில் நோய்களை அந்த ஊர் எல்லையில் தடுப்பதற்காக அந்த நோய் பெயரிலேயே வைத்து அம்மன்கள் இன்னும் ஏராளம் ஒரே நேரத்தில் ஒரே நோய் பலருக்கும் தாக்கப்பட்டு கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்த்திக்கொண்டே செல்லும் நோய்களுக்கு கொள்ளை நோய்கள் என்ற...

TANJORE SRI PRAGATHEESWAR TEMPLE

Image
TANJORE  SRI PRAGATHEESWAR TEMPLE சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில் கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்.. கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்.. கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள். பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல். இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன். ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்.. இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்.. இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..? நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்.. பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்.. இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் ...

SRI VIKKIRAMA RAJA SINGHAN 1798-1832

Image
SRI VIKKIRAMA RAJA SINGHAN 1798-1832 ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1798 -1816-1832 கண்டி அரச மரபினர் மதுரை நாயக்கர் அல்லது தஞ்சை நாயக்கர் மரபிலிருந்து பெண் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கண்டி அரசன்  ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு  (1782 - 1798) ஐந்து மனைவிமார் இருந்தும் ஒருவருக்கும் பட்டத்துக்குரிய வாரிசு இருக்கவில்லை. இந்த நிலைமையை சாதகமாக்கிக்கொள்ள அதிகாரிகளும், பிரதானிகளும், திசாவமார்களும் தருணம் பார்த்துகொண்டிருந்தனர். மன்னர் வாரிசின்றி இறக்க நேரிட்டது. தனக்குப் பின் அரசாட்சியை மேற்கொள்ளவென மூத்த மனைவியின் தம்பி முத்துசாமியையே இறப்பதற்கு முன் முடிக்குரிய இளவரசனாக நியமனம் செய்திருந்தார் மன்னார். ஆனால் மன்னரின் மரணத்திற்குப் பின்னர் அரசாட்சியில் கண் வைத்துக்கொண்டிருந்த கண்டி மந்திரிகளில் ஒருவரான பிலிமத்தலாவ அரசாட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் மன்னரின் மரணத்திற்குப் பின் முத்துசாமியை நியமிக்க விடவில்லை. மன்னரின் இரண்டாவது மனைவியின் சகோதரனான கண்ணுசாமியை மதுரையில் இருந்து அழைத்து வந்து அரசனாக்கினான். கண்ணுசாமி “ஸ்ரீ விக்ரமசிங்க” என்கிற பெயரில் 1798இல...