KAMALINI SELVARAJAN , SRILANKA RADIO,FILM ACTRESS DIED 2015 APRIL 7
KAMALINI SELVARAJAN , SRILANKA RADIO,FILM ACTRESS DIED 2015 APRIL 7 கமலினி செல்வராஜன் (1954 - 7 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி ஒலிபரப்பாளரும் ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார் வாழ்க்கைக் குறிப்பு கமலினி இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார்.[1] களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.[2] செல்வராசனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஜெரல்டின் ஜெசி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகளும் இருந்தனர்.[2] வானொலியில் சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலி...