Saturday 7 April 2018

KAMALINI SELVARAJAN , SRILANKA RADIO,FILM ACTRESS DIED 2015 APRIL 7






KAMALINI SELVARAJAN ,
SRILANKA RADIO,FILM ACTRESS
DIED 2015 APRIL 7





கமலினி செல்வராஜன் (1954 - 7 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ் நாடக, திரைப்பட நடிகையும், வானொலி ஒலிபரப்பாளரும் ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார்
வாழ்க்கைக் குறிப்பு
கமலினி இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார்.[1] களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். தந்தை மு. கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.[2] செல்வராசனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஜெரல்டின் ஜெசி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகளும் இருந்தனர்.[2]


வானொலியில்
சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக 'கமலி' பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் 'கலைக்கோலம்' முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.

தொலைக்காட்சியில்
ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ரூபவாகினியிலும், ஐ.ரி. என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.

திரைப்படங்களில்
இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆதர கதாவ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார் கமலினி செல்வராஜன்.[2]

விருதுகள்
நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது (1995)[1]

கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது (2008)[1]
நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது (2010)[1]
35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் விருது வழங்கி கெளரவித்தது.[1]
இறுதிக் காலம்
1995 ஆம் ஆண்டில் கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து கொழும்பில் தனது ஒரே மகன் அதிசயனுடன் வசித்து வந்த கமலினி[3] கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் 2015 ஏப்ரல் 7 அன்று கொழும்பில் காலமானார்.[4]

No comments:

Post a Comment