EASTER CELEBRATIONS
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமே `ஈஸ்டர்' பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கி.பி. 29-ம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. இயேசுகிறிஸ்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்த்தெழுந்த நிகழ்வை கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி பிற கிறிஸ்தவச் சபைகளால் `பாஸ்கா திருவிழிப்பு' என்ற பெயரில் நினைவுகூரும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை அல்லது முன் இரவில் (நள்ளிரவுக்கு முன்) தொடங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்விதமாக இந்த நிகழ்ச்சி அமையும்.
பாஸ்கா திருவிழிப்பு
பாஸ்கா திருவிழிப்பு சடங்கானது ஒளி வழிபாடு, இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் நற்கருணை வழிபாடு என நான்காகப் பிரிக்கப்பட்டு நடைபெறும். இதில் ஒளி வழிபாட்டின்போது ஆலயத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுக் கோவிலின் வெளியே ஓர் இடத்தில் தீ மூட்டப்பட்டு அதில் பாஸ்கா மெழுகுதிரி ஏற்றப்படும். உயரமான கனமான அந்த மெழுகுதிரியை மதகுரு கையில் தூக்கிக்கொண்டு ஆலயம் நோக்கி வருவார். அப்போது, `மகிமையுடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளி அக இருள் அகற்றி, அருள் ஒளி தருவதாக' என்ற முன்னுரையுடன் `கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று பாடுவார். மேலும் அப்போது, `நெருப்புத் தூணின் வெளிச்சத்தால் பாவத்தின் இருளை அகற்றிய இரவும் இதுவே...' `சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து, கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும் இந்த இரவிலேதான்...' என்ற வரிகள் அடங்கிய புகழுரைப்பாடல் பாடப்படும்.
திருமுழுக்கு
இதையடுத்து நடைபெறும் இறைவாக்கு வழிபாட்டின்போது, `உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக...' என்ற பாடல் பாடப்பட்டு இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வு நடைபெறும். இதைத்தொடர்ந்து நடைபெறும் இறைவாக்கு வழிபாட்டை அடுத்து திருமுழுக்கு வழிபாடு நடைபெறும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குத் திருமுழுக்கு வழங்கும் பழக்கம் கிறிஸ்தவ மதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரக்கூடிய ஒன்றே. இருந்தாலும், இந்தப் பாஸ்கா திருவிழிப்பின்போது நினைவுகூரப்படும் திருமுழுக்கு சற்று வித்தியாசமானது. இறைமக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மெழுகுதிரிகளைப் பிடித்திருக்க மதகுரு பாஸ்கா மெழுகுதிரியை தண்ணீர் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெரிய பாத்திரத்தில் அமிழ்த்தி இறைவனை வேண்டி அந்த நீரை மந்திரிப்பார். அந்த நீரைக்கொண்டே மக்களுக்குத் திருமுழுக்கு எனப்படும் ஞானஸ்நானம் (Baptism) வழங்கப்படும்.
இதைத்தொடர்ந்து நடைபெறும் நற்கருணை வழிபாட்டின்போது, அப்பமும் ரசமும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்படும். இது கடவுளின் வல்லமையின் காரணமாக 'அப்பமும் ரசமும் இயேசுகிறிஸ்துவின் உடலும் ரத்தமுமாக மாற்றம் பெறுகின்றன' என்று கிறிஸ்தவர்கள் நம்பும் ஒரு சடங்காகும். இந்த நிகழ்வுடன் பாஸ்கா முப்பெரும் விழா நிறைவுபெறும்.
ஈஸ்டர் பாடல்கள்
ஈஸ்டர் விழாவின்போது,`இரு விழிகள் மூடியபோது
இதயமே அழுததுஒரு கல்லறை திறந்தபோது
உலகமே மகிழ்ந்தது...'`இருளினைப் போக்கும் கதிரவன் போல்
சாவினை வென்றிங்கு உயிர்த்தெழுந்தார்...'
`கல்லறை திறந்தது காரிருள் மறைந்தது
கிறிஸ்து உயிர்த்தார் அல்லேலூயா...' - என்பது போன்ற பாடல்கள் பாடப்படும்.
ஈஸ்டர் முட்டை
ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்தகாலத்தைக் கொண்டாடும்விதமாக வழங்கப்படும் அலங்கரிக்கப்பட்ட முட்டைகளை ஈஸ்டர் முட்டைகள் என்று சொல்கிறார்கள். பூமியின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டை நம்பப்படுகிறது. இதன் பின்னணியிலேயே தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டைகளை ஏற்றார்களாம்.
ஈஸ்டர் லில்லி
ஆண்டுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய அதிசய பூ ஈஸ்டர் லில்லி. இந்தப் பூ கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே பூக்கக்கூடியது. இந்தப் பூ பூத்த நாள் தொடங்கி 15 நாள்கள்வரை வாடாமல் அப்படியே இருக்குமாம். கிழங்கு வகையைச் சேர்ந்த இந்தப் பூ ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பூப்பதால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வெள்ளை நிற லில்லி மலர் உயிர்த்தெழுதலின் சின்னமாகக் கருதப்படுவதாலும் அது ஈஸ்டர் சிறப்பு மலராகப் போற்றப்படுகிறது.
ஈஸ்டர் லில்லி
ஒறுத்தல்
சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கும் 40 நாள்கள் நோன்பு ஈஸ்டர் பண்டிகையுடன் முடிவுபெறும். தவக்காலம் என்று சொல்லப்படும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஒறுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதாவது உபவாசம், தர்ம காரியங்களில் ஈடுபடுதல். சிலுவைப்பாதை செய்தல் மற்றும் பல காரியங்களை அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு செய்வார்கள். (உபவாசம் என்பது ஒருவர் சிறிதளவு உணவுண்டோ அல்லது உணவே இல்லாமலோ இருக்கக்கூடியது. இது அவர்கள் விரும்பியோ அல்லது அவசிய தேவைக்காகவோ இருக்கக்கூடிய ஒரு செயலாகும்). சிலர் தினமும் ஒருவேளை அல்லது இருவேளை சாப்பாடு மட்டுமே சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் இறைச்சி உணவுகளைத் தவிர்ப்பார்கள். 40 நாட்களும் சில பெண்கள் தலையில் பூ வைக்காமல் இருப்பார்கள். வேறு சிலர் சினிமா மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பார்கள்.
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது.
எனினும் கி.பி. 325இல் அப்போதைய ரோம சாம்ராஜ்யத்தை ஆண்ட மாமன்னர் கான்ஸ்டைன் காலத்தில் இருந்துதான் ஈஸ்டர் பிரபலமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
ரோம இதிகாசங்களில் ஈஸ்டர் என்ற பெண் கடவுள் விடியலுக்கான தேவதையாக சித்தரிக்கப்படுகிறார். இந்த தேவதையின் பெயர்தான் ஈஸ்டர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதாக மொழியாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு 'வசந்த காலம்' என்ற அர்த்தமும் உண்டு.
இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பற்றி விரிவாக அறிய கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உலகையும் அதன் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கினார். ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு உலாவித் திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் விழுந்தார்.
உலகின் மீட்பிற்காக அனுப்பி வைத்தார்!
தன்னுடைய சாயலாக ஆசை, ஆசையாக படைத்த மனிதன், பாவத்திற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் சில தண்டனைகளை விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரத்தி விட்டார் தேவன்.
அதன்பின் ஆதாமும், ஏவாளும் ஆணும், பெண்ணுமாக ஏராளமான பிள்ளைகளை பெற்றார்கள். மனித குலம் பல்கிப் பெருகி கடற்கரை மணல் போல் பன்மங்கானது. அதைவிட வேகமாக பாவம் பல்கிப் பெருகியது. பாவத்தின் சாபத்தால் மனிதர்கள் மூப்படைந்து மறித்தார்கள். அவர்களின் ஆத்மாக்கள் வீணாய் அழிந்தன.
ஆதாமும், ஏவாளும் தன்னை விட்டு விலகினாலும் மனிதகுலத்தின் மீது இறைவன் கருணையுடனே இருந்தார். நோவா, ஆபிரகாம் என சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார். ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவத்திற்குள் சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள்.
அவர்களுக்காக பரிதவித்த பரம பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை உலகின் மீட்பிற்காக மண்ணுலகிற்கு அனுப்பி வைத்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.
உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஏழை தச்சரான ஜோசப்- மரியாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். 30 வயது வரை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அதன் பின் உலக மீட்பிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார்.
பின்னர் உடனிருந்த சீடர்களினால் காட்டி கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார். தேவவாக்கியம் நிறைவேறும் படியாக மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார்.
உலகத்தில் உள்ள மனிதர்களின் பாவத்திற்காக இயேசு கிறிஸ்து தம் ஜீவனை கொடுத்து நீதிக்காக உயிர்தெழுதலை போற்றும் விதமாக கிறிஸ்தவர்களால் இந்த தினம் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
( ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை aPRIL மாதம் 16ஆம் திகதி வருகிறது. அதற்கு முன்னதாக வரும் 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக (விரதம்) கடைபிடித்து வருகிறார்கள்.
.ஒவ்வொரு ஆண்டும் புதன்கிழமை அன்று தவக்காலம் தொடங்கும் என்பதால், அந்த புதன்கிழமையை சாம்பல் புதனாக அழைக்கிறார்கள். )
No comments:
Post a Comment