Monday 30 April 2018

FIRST CORRUPTION CHARGES IN INDIA EAST INDIA COMPANY- ELIHU YALE





FIRST CORRUPTION CHARGES IN INDIA
EAST INDIA COMPANY- ELIHU YALE




முதல் கல்வித்தந்தையும்,முதல் சொத்துகுவிப்பு வழக்கும்.!


கிழக்கிந்திய கம்பெனியின் சென்னைப் பகுதியின் தலைவராக பதவியேற்ற யேல் கம்பெனிக்காக வாங்கிய, விற்ற அனைத்துப் பொருளிலும் உள்கை ஊழல் புரிந்து பணம் பார்த்து அன்றைய நிலையில் ஆயிரமாயிரமாக சம்பாதித்தார். கருப்புப் பணம், பெட்டியில் உறங்கிய வரை பிரச்னையில்லை. ஆசை யாரை விட்டது? கடலூர் கோட்டை என இன்று அழைக்கப்படும் தேவனப்பட்டண கோட்டையை வாங்கியது மூலமாக வம்பை விலைக்கு வாங்கினார். தகவல் மேலிடம் லண்டனுக்கு தட்டி விடப்பட்டது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததால், சென்னை ராஜதானியில் முதல் சொத்துக் குவிப்பு வழக்கு யேல் மீது பாய்ந்தது. 


1692-இல் யேல் பதவியை இழந்தார். தன் பணத்துடன் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். புது பணக்காரராக வந்து இறங்கிய யேலுக்கு அமெரிக்காவில் ஏக வரவேற்பு. அவர் பூர்வீக நகரில் இருந்த பல்கலைக்கழகம் பணமில்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்தது. பணத்துக்காக யேலிடம் பல்கலைக்கழகம் கையேந்தி நின்றது. கல்விச் சாலைக்குப் பணமும், புத்தகமும் தர பெருந்தன்மையாக ஒப்புக்கொண்ட யேலின் சார்பாக கலாசாலைக்கு யேல் யுனிவர்சிட்டி என்று பெயரிட வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது. 

ஒரு வியாபாரி ஆட்சியாளராகி, ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அளவில்லா பொருள் ஈட்டி, ஆட்சியாளர் கல்வித் தந்தையான முதல் கதை யேலுடையதுதான். யேலிடம் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அவர் சென்னையை விட்டு ஓடும்போது அவரது டைரியை சென்னை கோட்டையில் தவறவிட்டார். அந்த டைரி சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் அடைக்கலமானது. அதில் என்ன எழுதியிருந்தார் என்று தெரியாத நிலையில் அதை திரும்ப பெற யேல் பல்கலை கழகம் பல முயற்சிகளை செய்தது.

1967ல் அண்ணாதுரை முதல்வரான போது விசிட்டிங் பெல்லோஷிப்பாக அவரை அறிவித்தது.அதை டாக்டர் பட்டமாக மாற்றினார்கள் கழக கண்மணிகள்.அதற்கு ஈடாக யேலின் டைரியை திரும்ப தர வேண்டும் என்ற நிபந்தனைக்கு அண்ணா சம்மதித்தார்.யேலின் டைரி அண்ணாவுடன் அமெரிக்கா பயணமானது.இப்போது யேல் அருங்காட்சியகத்தில் அந்த டைரி உள்ளது.



டாக்டர் பட்டத்திற்காக டைரியை விற்றவர்கள்தான் நமக்கு வாய்த்த தலைவர்கள்.






ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிறது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.
கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது. அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக்  குறிப்பிட்டார்கள். !#வனவாசத்தில் கவிஞர் குறிப்பிடும் அந்த பகூத்தறிஞர் யாரா இருக்கும்.?
-
அவர் தான் காஞ்சித்தலைவன்

No comments:

Post a Comment