Saturday 28 April 2018

SAMANTHA RUTH PRABHU , TAMIL,TELUGU ACTRESS BORN 1987 APRIL 28





SAMANTHA RUTH PRABHU ,
TAMIL,TELUGU ACTRESS
BORN 1987 APRIL 28
 


சமந்தா ருத் பிரபு (Samantha Ruth Prabhu, பிறப்பு: ஏப்ரல் 28, 1987) இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார்.[7] இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[7] ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்குப் பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார்.[8][5] 2007இல் இரவி வருமனுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசாவேயே முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.[9][10] இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார்.[11] இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் (2010), தூக்குடு (2011), சீத்தம்ம வாகிட்டிலோ சிரிமல்லி செட்டு (2012), அத்தாரிண்டிகி தாரேதி (2013), கத்தி (2014) போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற, தமிழ், தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெயர்பெற்ற, கூடிய சம்பளம் பெறும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.[12][

ஆரம்பகால வாழ்க்கை

 
சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு.[16] இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொழில் வாழ்க்கை

 

நான் ஈ திரைப்பட படப்பிடிப்பின் போது படக்குழுவினருடன்
கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது.[17] அத்திரைப்படத்திற்காக ஆகஸ்ட் 2009-தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார், அத்திரைப்படம் பிப்ரவரி 16, 2010-ல் வெளியானது.[18] இவர் ஜெஸ்ஸி என்னும் ஐதராபாத்தில் வசிக்கும் மலையாள கிருத்துவ பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியான பிறகு, சமந்தாவின் நடிப்பை பாராட்டி நாளிதழ்களில் வரத்துவங்கியது.[19] சிபி (Sify) உட்பட பல இணையத்தளத்தில் இவரை "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்"("scene-stealer") என்றும் அவருடைய அழகு, "கவர்ந்திழுப்பதாகவும்" ("is alluring"), என சிபியில் இவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தது.[19]

அதன்பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றினார்.

திருமண வாழ்க்கை



 
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது. [20







திரைப்படங்கள்[தொகு]

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2010விண்ணைத்தாண்டி வருவாயாநந்தினிதமிழ்சிறப்புத் தோற்றம்
2010ஏ மாய சேசாவேஜெஸ்ஸிதெலுங்குசிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது
நந்தி சிறப்பு நடுவர் விருது
2010பாணா காத்தாடிபிரியாதமிழ்பரிந்துரை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது
2010மாஸ்கோவின் காவிரிகாவேரி தங்கவேலுதமிழ்
2010பிருந்தாவனம்இந்துதெலுங்கு
2011நடுநிசி நாய்கள்
தமிழ்சிறப்புத் தோற்றம்
2011தூக்குடுபிரசாந்திதெலுங்கு
2012ஏக் தீவானா தாசமந்தாஇந்திசிறப்புத் தோற்றம்
2012ஈகாபிந்துதெலுங்கு
2012நான் ஈதமிழ்
2012நீ தானே என் பொன்வசந்தம்நித்யா வாசுதேவன்தமிழ்
2012யேடோ வெல்லிப்போயிந்தி மனசுதெலுங்கு
2012அஸ்ஸி நப்பே பூரே சாவ்இந்திபடப்பிடிப்பில்
2012ஆட்டோநகர் சூர்யாசிரிசாதெலுங்குபடப்பிடிப்பில்
2012சீதம்மா வகித்லோ சிரிமல்லே சேத்துகீதாதெலுங்கு
2012யெவடு
தெலுங்குபடப்பிடிப்பில்
2014கத்தி
தமிழ்
201510 எண்றதுக்குள்ள
தமிழ்
2015தங்கமகன்
தமிழ்
2015தெறிமித்ராதமிழ்

விருதுகள்[தொகு]

ஆண்டுவிருதுவிருது பெற்றதுதிரைப்படம்முடிவு
2011சினிமா விருதுகள் (CineMAA Awards)சிறந்த அறிமுக நடிகைஏ மாய சேசாவேவெற்றி
தென்னிந்திய பிலிம்பேர் விருதுசிறந்த நடிகை (தெலுங்கு)பரிந்துரை
சிறந்த அறிமுக நடிகைவெற்றி
நந்தி விருதுநந்தி சிறப்பு நடுவர் விருதுவெற்றி
டி. எஸ். ஆர் தொலைக்காட்சி-9 திரைப்பட விருதுடி. எஸ். ஆர் தொலைக்காட்சி-9 சிறந்த கதாநாயகி விருதுவெற்றி
விஜய் விருதுகள்சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுபாணா காத்தாடிபரிந்துரை

No comments:

Post a Comment