Wednesday 18 April 2018

VIJAYANAGARA DYNASTY BEGAN 1336 APRIL 18







VIJAYANAGARA DYNASTY BEGAN 1336 APRIL 18




விஜயநகரப் பேரரசு இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந் நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ் (Domingo Paes), பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.


தர்மேஷ்வரர் கோயில், ஹோஸ்கோட்டை (பெங்களூர் அருகே) செப்புத் தகடுகள், விஜயநகரப் இராச்சியம்

தர்மேஷ்வரர் கோயில் கல்வெட்டுகள், ஹோஸ்கோட்டை, (பெங்களூர் அருகே), செப்புத் தகடுகள், விஜயநகரப் இராச்சியம்[1]
இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் [[தக்காணத்துச் சுல்தானகங்கள்|வட தக்காணத்துச் சுல்தா கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.
ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்கி புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப் பட்டிருக்கும் நகரமாக இருந்த போதிலும் 13ம் நூற்றாண்டு மற்றும் 14 ம் நூற்றாண்டுகளில் இது விஜய நகர அரசர்களின் தலைநகரமாக சிறந்து விளங்கியது.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[2]

வித்யாரண்ய தீர்த்தர்
விஜயநகரப் பேரரசுக்கு, ஹரிஹரர் மற்றும் புக்கராயர், ஆச்சாரியர் வித்யாரண்ய தீர்த்தர் பெயரை வைக்க விரும்பி வித்யாரண்ய நகரம் என்று பெயர் சூட்ட, துறவியான வித்யாரண்யரோ அதனை விஜய நகரம் என மாற்றியமைத்தார். 1336 ஆம் ஆண்டின் தாமிர பட்டயம் விஜயநகர சாம்ராஜ்யம் அமைந்ததில் வித்யாரண்ய தீர்த்தரின் முக்கிய பங்கைக் கூறுகின்றது.[3]

இந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. நான்கு மரபுகள் - சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு - கி.பி. 1336 முதல் 1672 வரை விஐய நகரை ஆட்சிபுரிந்தன. இலக்கியம், தொல்லியல், நாணயம் என விஜய நகர வரலாற்றுக்கான சான்றுகள் பல்வகைப்படும். கிருஷ்ண தேவராயரின் ஆமுக்த மால்யதம், கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்றவை விஜயநகர சமகால நூல்களாகும்.
விஜய நகரப் பேரரசுக்கு பல்வேறு அயல்நாட்டு பயணிகள் வருகைபுரிந்தனர். அவர்களது குறிப்புகளும் பயனுள்ள சான்றுகளாகும். மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இபன் பதூதா, வெனிஷியப் பயணி நிக்கோலோ டி கோன்டி, பாரசீகப்பயணி அப்துல் ரசாக், போர்ச்சுகீசியப் பயணி டோமிங்கோ பயஸ் போன்ற பயணிகள் விஜய நகர கால சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி தங்களது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளனர்.
இரண்டாம் தேவராயரின் ஸ்ரீரங்கம் செப்பேடுகள் போன்ற செப்பேடுகள் விஜயநகர அரச வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களது சாதனைகளைக் கூறுகின்றன. ஹம்பி இடிபாடுகளும் பிற சின்னங்களும் விஜய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள எண்ணற்ற நாணயங்களில் காணப்படும் உருவங்கள் மற்றும் சொற்றொடர்கள் விருதுகளையும் சாதனைகளையும் எடுத்துக்கூறுகின்றன.




வரலாறு:
விஜயநகர சாம்ராஜ்யம்
தோற்றுவிக்கப்பட்டது
குறித்து மாறுபட்ட விவரங்கள்
சொல்லப் படுகின்றன. கன்னட
தேசத்து வரலாற்று அறிஞர்கள்
விஜயநகர சாம்ராஜ்யத்தை
ஸ்தாபித்த ஹரிஹரர் புக்கர்
சகோதரர்கள் ஹொய்சாள
தேசத்துப் படையில் தளபதியாக
இருந்தவர்கள் என்றும்
துங்கபத்ரா நதிக்கரையில் வட
இந்தியாவிலிருந்து வந்த
இஸ்லாமிய படையெடுப்பு
களைத் தடுத்து நிறுத்த
நியமிக்கப்பட்டவர்கள் என்றும்
கூறுகிறார்கள். இவர்கள்
கன்னட மொழி பேசுபவர்கள்
என்பது இவர்களின் கருத்து.
ஆனால் வேறு சில
வரலாற்றாசிரியர்கள்
இவர்களைத் தெலுங்கு மொழி
பேசுவோர் என்றும் காகாத்திய
வம்சத்தைச் சேர்ந்த இவர்கள்
ஹொய்சாளர் களின் வடக்குப்
பிரதேசங்களைப் போரிட்டு
வென்று ஆக்கிரமித்துக்
கொண்டவர்கள் என்றும்
சொல்கிறார்கள். இவ்விரு
பிரிவினரின் கருத்து
எத்தகையதாக இருப்பினும்
ஒரு விஷயத்தில் இவ்விரு
தரப்பாரும் ஒப்புக்கொள்ளும்
செய்தி இவர்களை
ஊக்குவித்து ஆதரவு
கொடுத்தவர் சிருங்கேரி
ஆச்சார்ய பீடத்தில் குருவாக
இருந்த வித்யாரண்யர் என்பார்
என்பதுதான். சிருங்கேரி
ஆச்சார்யார் வடதேசத்து அந்நிய
படையெடுப்பை தடுத்து
நிறுத்த இவ்விரு வீரர்களையும்
பயன்படுத்தியதாக இவர்கள்
நம்புகிறார்கள். தற்காலத்தில்
அகழாராச்சித் துறையினர்
இந்தப் பகுதிகளில்
கண்டுபிடித்திருக்கும்
சான்றுகளிலிருந்து பல அரிய
செய்திகள் இந்த ஹரிஹர
புக்கர் ஸ்தாபித்த புதிய
சாம்ராஜ்யம் பற்றி நமக்குத்
தெரியக் கிடைக்கின்றன.


சுதந்திர தினம் திங்கட்கிழமை, மூனு நாள் லீவு – வீட்டுல திருச்செந்தூர் முருகன பாக்க போலாம்னு சொன்னாங்க. கடைசில பல காரணங்களால அங்க போற திட்டத்தை கை விட்டாச்சு.

மூனு நாள் லீவ என்ன பன்னலாம்னு மண்டைய குடஞ்சப்ப வந்த எண்ணம் தான் ஹம்பி. ஹம்பினு சொன்ன உடனே நம்ம எல்லாருக்கும் நியாபகம் வர்ற விஷயம் அங்க இருக்குற அசாத்தியமான கற்கோயில்களும் கற்சிற்பங்களும் தான். அதையெல்லாம் நேர்ல பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை.

உடனே நம்ம IRCTC website ல டிக்கெட் தேடுனா, என் ஆசைல யாரோ ஒரு வாளி மண்ண எடுத்து கொட்டுன மாதிரி ஆயிடுச்சு. போறதா வேண்டாமானு யோசிச்சு யோசிச்சு என்ன ஆனாலும் சரி கிளம்புடா ராசானு முடிவு செஞ்சாச்சு. வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு போட்டா பெங்களூரு வரைக்கும் டிக்கெட் இருந்துச்சு. சரி பாதி தூரம் நிம்மதியா போலாமேனு அத புக் பன்னிட்டேன். மத்த எந்த விஷயமும் பிளான் பன்னல.

வெள்ளிக்கிழமை காலைல நேரமே கிளம்பி (கொச்சின்ல இருந்து) வீட்டுக்கு பக்கத்துல இருக்குற சரவண பவண்ல [ஜீவ ஜோதி கடை அல்ல ;)] ஒரு பிளேட் இட்லியும், காபியும் சாப்பிட்டு என்னோட ஹம்பி பயணத்த தொடங்கினேன். வெளிய வந்தா ரமனிச்சந்திரன் நாவல் ல வர்ற மாதிரி ஒரு ரம்மியமான சாரல் மழை. அதை அனுபவிச்சுகிட்டே ரயில்வே ஸ்டேஷன்க்கு பஸ் ஏறினேன்.

ரயில் பயணம்

Trainல ஜன்னல் ஓர சீட்டு. கொஞச நேரம் புத்தகத்த படிச்சிட்டு இருந்தவன், அதை மூடி வெச்சுட்டு வெளிய வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன். கேரள பருவ மழைல ஊரு முழுக்க பச்சை பசேல்னு இருந்துச்சு. ஆத்துல அவ்ளோ தண்ணி ஓடுது. சும்மாவா சொல்றாங்க “God’s Own Country” னு. ரயில் எப்போ தமிழ்நாட்டு பார்டர்ற தொட்டுச்சோ அவ்வளவு வித்தியாசம். அனல் காற்றும், சீமைக் கருவேல மரக்காடுகளும் அந்த இடத்த ரொம்ப மோசமாக்கிடுச்சு. இப்படியே இருட்டுற வரைக்கும் வேடிக்கை பாத்துட்டு பெங்களூரூ போய் சேர்ந்தாச்சு.

பெங்களூருல இருந்து ஹோஸ்பேட் போறதுக்கு ரிசர்வேஷன் இல்ல அதனால முதல்ல போய் ஒரு ஓபன் டிக்கெட் எடுத்துட்டு சாப்பிட போனேன். சாப்பிட்டு என்னோட train வர்ற பிளாட்ஃபார்ம்ல போய் நின்னேன். Train வர்ற நேரம் ஆனதும் அந்த இடமே பயங்கர பரபரப்பாச்சு. இதாங்க என்னோட முதல் ஜெனரல் கம்பார்ட்மெண்ட் பயணம்.

வண்டி வந்த உடனே அடிச்சு தள்ளி ஏறி லக்கேஜ் வைக்குற சீட்ட பிடிச்சு என்னோட Bag, செருப்பு அதோட என்னையும் ஏத்திகிட்டேன். என்னோட எதிர் சீட்டுக்கு மூனு பேருக்குள்ள பெரிய சண்டை… என்ன பேசிகிட்டாங்கனு புரியலைனாலும் சண்டைய ரசிச்சுட்டு இருந்தேன். கடைசில ஏதோ உடன்பாட்டுக்கு வந்து ரெண்டு பேரும் இடத்த பகிர்ந்துகிட்டாங்க. கொஞ்ச நேரத்துல ஒரு தாய் புள்ளைகளாட்டம் ஒரே சீட்டுல தூங்க ஆரம்பிச்சுட்டாங்க. என் சீட்டுல உட்காந்திருந்த ஆளு கொஞ்ச நேரத்துல படுத்து, நெளிஞ்சு என்னைய விரட்டி விட்டுட்டாரு. பக்கத்துல ஒரு வெளிநாட்டுக்காரர்  நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் கூட ரொம்ப சகஜமா நாட்டு நிலவரம், அவரோட கேர்ள்ஃப்ரெண்ட பத்திலாம் பேசிட்டு வந்தாரு. இப்படியே  சுற்றி நடக்குறத பாத்துகிட்டே அடுத்த நாள் காலைல ஹோஸ்பேட் போய் சேர்ந்தாச்சு.

அப்படியே கையோட கையா லாட்ஜ்ல ஒரு ரூம போட்டு குளிச்சு கிளம்பி பக்கத்துல இருந்த உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல்ல டிபனையும் முடிச்சுட்டு, ஹம்பிக்கு டவுன் பஸ் ஏறினேன். போற வழியெல்லாம் சின்ன சின்னதா நிறைய Ruins னு சொல்லபடுற இடிபாடுகள நிறைய பாக்கலாம். ஒரு காலத்துல ஹம்பி தலைநகரமா இருந்தாலும், இப்போ அந்த சிதிலமடைந்த கட்டிடங்கள் தவிர ஊரும், மக்களும், மக்களின் பொருளாதார நிலமையும் ரொம்ப சாதாரணமாதான் இருக்கு. பஸ் ஒரு இருபது நிமிஷத்துல ஹம்பிக்கு போய் சேர்ந்துடுச்சு.

நீங்க பஸ்ச விட்டு இறங்கும்போது ரெண்டு படை உங்கள தாக்குதல் நடத்தும், ஒன்னு ஆட்டோகாரங்க இன்னொன்னு மேப், guide book விக்குறவங்க. இந்த படைகள கடந்து போனாதான் மற்ற இடங்கள பாக்க முடியும்.
நேரா போய் விருப்பாக்‌ஷி கோவில்ல தரிசனம் பாத்தேன். இந்த ஒரு கோவில்ல தான் சாமியும் இருக்கு, பூஜைகளும் நடக்குது. இங்க தரிசனம் முடிச்சுட்டு வெளிய வந்தா ஹம்பி பஜார். இங்க நிறைய வாடகை சைக்கிள் கடைகள் இருக்கு. அதுல ஒரு கடைல வாடகைக்கு சைக்கிள எடுத்துட்டு, முன்னாடி தாக்குதல நடத்துன படைகள்ல ஒருத்தர் கிட்ட Guide book ஒன்னு வாங்கிட்டு ஹம்பிய சுத்தி பாக்க கிளம்பிட்டேன்.



Virupakshi Temple PC: Krishna
Virupakshi Temple PC: Krishna
முதல்ல கடலேக்களு (Kadalekalu) கணபதிய பாத்துட்டு, அப்புறம் துங்கபத்ரா ஆற்றோரமா இருக்குற கோதண்டராமர் கோவில், அதையும் தாண்டி போனா இன்னொரு ராமர் கோவில் (குகை கோவில்) ராமர் சுக்ரீவரோட காட்சி தர்ற சின்ன கோவில் ஆனா அங்க போன உடனே மனசு ரொம்ப அமைதியாச்சு. இங்கையும் பூஜைகள் இன்னும் நடக்குது. இந்த கோவில்லயும் கடந்து போனா வர்றதுதான் நாம நிறையா படத்துல பாத்திருக்கிற விஜய விட்டலா கோவில். இந்த கோவிலோட கட்டிடக்கலையும், சிற்பக்கலையும் நம்மள வாய் பிளக்க வைக்கும். இங்க இருக்குற கல் ரதமும் இசைத் தூண்களும் உலக பிரசித்தி. வருத்தமான விஷயம் என்னனா இந்த கோவில்ல பாதி முன்னாடியே சேதமடஞ்சிருக்கு. இதுல நம்ம மக்களும் அது மேல ஏறிகிட்டு செல்ஃபி எடுக்குறாங்க. பகவானுக்குதான் வெளிச்சம். இதெல்லாம் பாத்து முடிக்குறப்போ ஒரு அலாரம் அடிச்சுது, அது வேறொன்னுமில்ல என்னோட வயிறுதான் 😉 உடனே சைக்கிள எடுத்துகிட்டு பஜார் பக்கம் போனேன்.



Ruined Entrance Tower
Ruined Entrance Tower PC: Krishna
Vittala Temple Campus
Vittala Temple Campus
அங்க தான் ஹம்பி போன நிறைய பேர் பரிந்துரை பன்னின Mango Tree Restaurant இருக்கு. நல்ல கூட்டம், நான் ஒரு ஆளுங்கிறதால சுலபமா இடம் பிடிச்சு உக்காந்துட்டேன். இந்த ஹோட்டல் முன்னாடி ஆத்தோரமா மாமரத்துக்கு கீழ இருந்திருக்கு அதான் பெயர்க் காரணம். ஆனா ஏதோ காரணத்தால அங்க இருந்து பஜாருக்கு கடைய மாதிட்டாங்க. ஓலை வேய்ந்த கூரை, ஆடம்பரம் இல்லாத ஆனா அழகான உள் அலங்காரம், தரைல போட்ட திண்டுகள்னு நல்லா இருந்துச்சு. மெனுல அமெரிக்க, ஐரோப்ப, ஆசிய உணவு வகைகள் எல்லாம் இருக்கு. அங்க வர்ற வெளிநாட்டவர்களுக்காக!

Mango Tree Restaurant
Mango Tree Restaurant


நல்லா சாப்பிட்டுட்டு மற்ற இடங்கள பாக்க கிளம்பிட்டேன். படவி லிங்கம் (Badavi Linga), லக்‌ஷ்மி நரசிம்மர் (அ) உக்ர நரசிம்மர், பாதாள சிவன் கோவில், ஹஷ்ஷர ராமர் கோவில், மஹா நவமி திப்பா, புஷ்கரனி இதெல்லாம் பாத்து முடிக்குறப்போ மணி 6 ஆயிடுச்சு. இதுல ஹஷ்ஷர ராமர் கோவிலும் புஷ்கரனி குளமும் மிகவும் பிரசித்தி. கிளம்பி ஹம்பி டவுனுக்குள்ள போய் சைக்கிள திருப்பி கொடுத்துட்டு, திரும்பவும் Mango Tree Restaurant போய் ஒரு டீ குடிச்சிட்டு ஹோஸ்பேட் கிளம்பிட்டேன். முதல் நாள் இனிதே நிறைவேறிய்து 🙂

அடுத்த நாள் கிளம்பி ஹம்பிக்கு போய், அங்க சைக்கிள வாடகைக்கு எடுத்துகிட்டு, ஒரு சின்ன மோட்டார் படக பிடிச்சு ஆத்துக்கு அந்த பக்கம் போனேன். பரிசல் சவாரியும் இருக்கு ஆனா நான் சைக்கிள எடுத்துட்டு போனதால அதுல போகல. அற்றுக்கு அந்த பக்கம் பாத்த காட்சி ஹம்பிக்கு எதிர்மறையா இருந்துச்சு. ஹம்பி ல மொத்தமும் கல் மேடுகளும் மலையும் தான் இருந்துச்சு. இங்க மொத்தமும் நெல் வயலும் வாழைத்தோப்புமா பாக்கவே அம்சமா இருந்துச்சு.



Other Side of Hampi - Way to Anengondi
Other Side of Hampi – Way to Anengondi PC: Krishna
முதல்ல அஞ்சநாத்ரி மலை! நான் படக விட்டு இறங்குன இடத்துல இருந்து 8KM போகனும். சைக்கிள மிதிக்க ஆரம்பிச்சேன், போற வழில ஒரு மாடு மேய்க்கிற ஆளு என்ன பாத்து “யு வாண்ட் வீட்?”னு கேட்டார். எனக்கு சரியா புரியல முதல்ல பதில் கொடுக்காம கிளம்பிட்டேன். கொஞச தூரம் போயிருப்பேன் இன்னொருத்தர் அதே கேள்விய கேட்டாரு ஆக்‌ஷனோட! இப்போ புரிஞ்சுது என் மர மண்டைக்கு அவங்க கஞ்சா வேணுமா னு கேட்டிருக்காங்க 🙂 இவர் இன்னொன்னும் இருக்குனார். அது பேரு Magic Mushroom. சுவாரஷ்யமா விலையெல்லாம் கேட்டுட்டு வேண்டாம் பழக்கமில்லைனு சொல்லிட்டு வந்துட்டேன் 🙂 . ”அவ்வளவு நல்லவனா நீ?” னு கேட்டா “ஆமாம்”னு ஒரே பதில்தான் 😉

அவர அனுப்பிட்டு என் வண்டிய கிளப்பினேன் கொஞ்ச தூரத்துல ரெண்டு பசங்க TVS Super XL அ ஒரு மேட்டுல தள்ளிட்டு இருந்தாங்க, சரி வண்டி ரிப்பேரோ என்னவோனு பேச்சு கொடுத்தேன். பாத்தா கேரளா பசங்க. அவங்களும் அந்த மலைக்குதான் போறாங்க. அவங்க வாடகைக்கு எடுத்த TVS 30 KMPH மேல போகல. நானும் அவங்களும் அங்கிருந்து ஒன்னா போனோம் நான் சைக்கிள்ல அவங்க அந்த 30 KMPH Harley Davidson ல.



PC: Krishna
PC: Krishna
[குறிப்பு: வண்டி வாடகைக்கு எடுத்தா ஓட்டி பாத்து வாங்குங்க, Petrol 1 Ltr மட்டும் வாங்கி ஊத்திட்டு இன்னொரு பாட்டில்ல வாங்கி வெச்சுகுங்க. வேண்டாம்னா திருப்பி கொடுதுக்கலாம். நிறையா ஏமாத்து வேலை நடக்கும்].

சரி கதைக்கு வர்றேன். நாங்க பேசிகிட்டே மெதுவா மலை அடிவாரம் போய் சேந்தோம். கீழ எங்க வண்டிய விட்டுட்டு மேல ஏறினோம். கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு ஆனா ஏறிட்டோம். மேல போனதுமே படி ஏறின கஷ்டமெல்லாம் போயிடுச்சு. என்ன ஒரு அற்புதமான காட்சி. ஆத்துக்கு ஒரு பக்கம் முழுசா பாறையும் மலையும் இன்னொரு பக்கம் பசுமையான வயக்காடு. மொத்த ஊரையும் அங்க இருந்து பாக்க முடியும். வார்த்தைகளால வர்ணிக்க முடியாதுனு சொல்லுவாங்கல்ல அப்படிப்பட்ட காட்சி அது. கொஞச நேரம் அத ரசிச்சுட்டுதான் ஆஞ்சநேயர பாக்க போனோம்.

View of Hampi from Anjanadri Hill PC: Krishna
View of Hampi from Anjanadri Hill PC: Krishna
Aerial View From Anjnadri Hill PC: Krishna
Aerial View From Anjnadri Hill PC: Krishna


பாத்துட்டு கிளம்பி நேரா அனேகொண்டி கிராமத்துக்கு ஒரு விசிட். போற வழில 10, 12 வயசு இருக்குற நாலஞ்சு பசங்க வண்டிய மறிச்சு காசு வசூல் பன்னிகிட்டு இருந்தாங்க, டோல் கேட் மாதிரி! கேட்டா கணபதிக்குனு ஏதோ கேட்டாங்க. “கூளு குடிக்க வேனா வர்றோம் குடுக்குறதுக்கு ஒன்னும் இல்லனு சொல்லிட்டு” அங்க இருந்து திரும்ப வந்த வழியே ஹம்பிக்கு ரிட்டர்ன். ஹம்பிக்கு போய் திரும்பவும் Mango Tree ல மதிய உணவ முடிச்சுட்டு ஹம்பில விட்டுப்போன சில இடங்களையும் பாத்துட்டு ஹோஸ்பேட்டுக்கு கிளம்பியாச்சு. ராத்திரியே பெங்களூருக்கு பஸ் இருந்துச்சு, சாப்பிட்டு கிளம்பியாச்சு. பெங்களூர்ல ஒரு நாள். ஆனந்தும், அவன் நட்புக்களும் Pyramid Valley கூட்டிகிட்டு போனாங்க. நல்லா சுத்திட்டு ராத்திரி கொச்சிக்கு Train ஏறியாச்சு.

அடுத்த நாள் ஆபிஸ் போகனும்ங்கர நினைப்பு, ரெண்டு நாள் கவலையில்லாம சுத்தின நினைப்பு, இத எல்லாத்தையும் அசை போட்டுகிட்டே ஊரு வந்து சேந்தாச்சு. இந்த பயணம் ரொம்ப முழுமையா இருந்துச்சு

No comments:

Post a Comment