Monday 30 April 2018

WATER DRINKING MINIMISES YOUR DISEASES





WATER DRINKING MINIMISES YOUR DISEASES



நமது உடலில் தட்ப-வெப்பநிலை, உணவு பழக்கம், மாசு உள்பட பல காரணங்களால் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, மூலம், சிறுநீரக பாதிப்பு, தோல் வியாதி உள்பட பல நோய்கள் தாக்கு கிறது. அந்த பாதிப்பில் இருந்து குணமாக மருத்துவரை தேடி செல்கிறோம். அவர்கள் கொடுக்கும் மருந்துகளை ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கி பயன்படுத்துகிறோம். ஒரு நோய் குணமாக பயன்படுத்தும் மருந்து மூலம் மற்றொரு நோய் உருவாகுவதும் தவிர்க்க முடியாததாகும்.இந்த நோய்கள் வராமல் தடுப்பதும், வந்திருந்தால், அதிகரிக்காமல் தடுக்கும் மாமருந்தாக தண் ணீர் உள்ளது. நாம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் சப்ளை செய்கிறோமோ அவ்வளவு ஆரோக்கிய மாக இருக்க முடியும். அதற்கு கீழ்காணும் வழிமுறைகள் தினமும் பின்பற்ற வேண்டும்.


காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாது. பின்காலை சிற்றுண்டி எடுத்து கொள்ளவேண்டும். சாப்பிட்ட பின் உடனடியாக தண்ணீர் குடிக்காமல், 2 மணிநேரம் கழிந்தபின் தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் உணவு எடுத்து கொள்வற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மீண்டும் 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்டபின் 2 மணிநேரம் கழித்து 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவு எடுத்து கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1.25 லிட்டர் தண் ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 4 லிட்டர் அதிக பட்சம் 6 லிட்டர் தண்ணீர் குடித்தால், எந்தநோயும் தாக்காமல் ஜீரோமெடிஷன் என்ற நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை அனுபவிக்கலாம்.

இப்படி தினமும் தவறாமல் பயன்படுத்துவதின் மூலம் இருதய பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுதிண றல், ரத்தஅழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம், கை, கால் வீக்கம், உடல் எடை கூடுதல், உடல் பருமன், நெஞ்சு எரிச்சல், கண் பாதிப்பு போன்ற மனி தரை வாட்டும் பல நோய்களில் இருந்து முழுமை யாக குணமடையலாம். மேலும் நமது உடலில் உள்ள கை, கால் மணி கட்டு, மூட்டு பகுதியில் ஒருவிதமான பசை உரு வாகிறது. அதுகெட்டியாக மாறினால், கை, கால்கள் மடக்க முடியாது. சிலருக்கு நடப்பது, கை, கால்கள் அசைக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி தினமும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டால் கெட்டியாக இருக்கும் பசைகள் மிருதுவாகும். அதன் மூலம் ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டமும், தசைப்பிடிப்பு, எலும்பு இருக்கம் உள்பட பல உபதை களில் இருந்து முழுமையாக விடுபடலாம். இதை உதவும் கரங்கள் சங்க ஆய்வின் மூலம் டாக் டர் வி.மணியும் உறுதி செய்துள்ளார்.

No comments:

Post a Comment