Sunday 29 April 2018

SWARNALATHA ,TAMIL PLAYBACK SINGER BORN 1973 APRIL 29- 2010 SEPTEMBER 12





SWARNALATHA ,TAMIL PLAYBACK SINGER
BORN 1973 APRIL 29- 2010 SEPTEMBER 12




சுவர்ணலதா (Swarnalatha, இறப்பு: செப்டம்பர் 12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.


வாழ்க்கைக் குறிப்பு

கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்ட ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார்.[1][2] சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உயர் கல்வியையும் கற்றர்.

பின்னணிப் பாடகியாக
சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உயர்ந்த மண் படத்தில் பி. சுசீலா பாடிய பால் போலவே என்கிற பாடலைப் பாடிக்காண்பித்தார். சொர்ணலதாவின் குரலில் தனித்துவம் தெரிய அதே ஆண்டில் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14வயது மட்டுமே. பின் இவர் 1988இல் வெளியான குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானு என்னும் பாடலை இளையராஜாவின் இசையமைப்பில் பாடினார்.

பின் தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.

சிறப்புக் குறிப்பு
புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்" படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது. இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். இப்போட்டிப் பாடலை இரு வெவ்வேறு குரல்களிலும் சொர்ணலதா, சங்கர் கணேசின் இசையமைப்பில் பாடினார். சொர்ணலதாவின் திறமையை நவ்ஷாத் அலி பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மோதிரத்தையும் சொர்ணலதாவுக்கு விருதுபோல வழங்கினார்.

விருதுகள்
தேசிய விருது



1994 - இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
தமிழக அரசு விருது

1991 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
தமிழக அரசு சிறப்பு விருது

1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான கலைமாமணி விருது
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க , மாயா மச்சிந்ரா
1999 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : முதல்வன் , பாடல் : உழுந்து விதைக்கையில
2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
ஃபிலிம்பேர் விருதுகள்

1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க
2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
2002 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : பூவெல்லாம் உன் வாசம் , பாடல் : திருமண மலர்கள்
மறைவு

நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா 2010, செப்டம்பர் 12 தனது 37வது அகவையில் காலமானார்[3].

கேட்ட உடன் தெரிந்துகொள்ளக் கூடிய வித்யாசமான குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா. அவரை பற்றிய சில தகவல்கள்.

அறிமுகம் :
1973 -இல் கேரளா மாநிலம் பாலகோடில் பிறந்தவர். இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதா சிறு வயதிலேயே ஆர்மோனியம், கீ போர்டு வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

1982 ல் வெளிவந்த நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடவைத்து அறிமுகபடுத்தப்பட்டவர். 

P.சுசிலா அம்மாவுக்கு அடுத்தபடி ஜீவனுள்ள குரல் ஸ்வர்ணலதா என்பது என் கருத்து. ரொம்ப அமைதியானவர்.
பாடிய மொழிகள் :

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது மற்றும் படகா மொழிகளில் பாடிய பெருமை இவரை சாரும். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். 

இளையராஜா, ரஹ்மான், தேவா, சிற்பி, பரத்வாஜ், வித்யாசாகர் & ஹாரிஸ் ஜெயராஜ் என்று முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையமைப்பில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

முதல் ஹிட் பாடல் :

"கேப்டன் பிரபாகரன்" படத்தில் இவர் பாடிய "ஆட்டமா தேரோட்டமா" பாடல் தான் இவரை பிரபலபடுத்தியதென்றால் மிகையாகாது.

விருதுகள் : 

"சின்னத்தம்பி" படத்தின் "போவோமா ஊர்கோலத்திற்காக" தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்று தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் பல படங்களுக்கு பாடும் வாய்ப்பை பெற்றுவந்தார்.

"கருத்தம்மா" படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருது பெற்று தொடர்ந்து ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றுவந்தார். ஆஸ்த்தான பாடகி என்று சொல்லுமளவிற்கு அவரின் இசையில் தொடர்ந்து பல படங்களில் பாடியிருக்கிறார்.
பிடித்த பாடல்கள் :
இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.

அலைபாயுதே படத்தில் பாடிய 'எவனோ ஒருவன்", பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய 'உசிலம் பட்டி பெண்குட்டி' காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதங்கம் :

ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா & ரஹ்மான் இவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குறை என்னை போற்ற பலருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. 

காற்றில் கலந்த பாடகி :

இன்று (12-SEP-2010) மரணம் தழுவிய செய்தியை கேட்ட போது மனம் நம்ப மறுத்தது. அவர் நம்மை விட்டு சென்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. இருக்கும். 

'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் 'விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணமிது...' அவர் பாடிய பாடலே நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment