Monday 2 April 2018

M.SAROJA THANGAVELU , COMEDY ACTRESS DIED APRIL 2,2012





M.SAROJA THANGAVELU ,
COMEDY ACTRESS DIED APRIL 2,2012




பழம்பெரும் நகைச்சுவை நடிகர் டணால் கே.ஏ.தங்கவேலு, கடந்த 94 ஆம் ஆண்டு காலமானார். அவருடைய மனைவி நடிகை எம்.சரோஜா (வயது 79). பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக, சகோதரியாக நடித்த மறைந்த எம்.லட்சுமி பிரபாவின் தங்கை இவர்.

நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 ஆம் ஆண்டு முதல் 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் கே.ஏ.தங்கவேலுவும் சரோஜாவும் இணையாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் புரிந்தார்கள். தங்கவேலு ஏற்கெனவெ திருமணமானவர்.

தன் 14வது வயதில் நடிக்க வந்தவர், எம்.சரோஜா. இயக்குனர் கே.சுப்பிரமணியம் இவரை சினிமாவில் அறிமுகம் செய்தார். ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி .ஆரின் முறைப்பெண்ணாக நடித்துள்ள எம்.சரோஜா, பிறகு ‘மருதநாட்டு வீரன்’, ‘பூலோக ரம்பை’, ‘அரசிளங்குமரி’, ‘வண்ணக்கிளி’ , மாங்கல்ய பாக்கியம், மணப்பந்தல், தில்லானா மோகனாம்பாள், காவேரி, அறிவாளி, எங்கள் குல தேவி, திருடாதே, தெய்வப்பிறவி, கல்யாணப்பரிசு, பார்த்தால் பசிதீரும், முயலுக்கு மூணுகால் உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு சுமதி என்ற மகள் இருக்கிறார்.தமிழக அரசு இவரது கலையுலக சேவையைப் பாராட்டி, கலைமாமணி விருது கொடுத்துள்ளது. சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த எம்.சரோஜா 02.04..2012 அன்று காலமானார்.

நன்றி:-தினகரன்

எம். சரோஜா (இறப்பு: ஏப்ரல் 2, 2012) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நகைச்சுவை வேடங்களில் தமது கணவர் கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படத்துறை
தன்னுடைய 14-ம் வயதில் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் எம். ஜி. ஆருடன் சர்வாதிகாரி (திரைப்படம்) மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.[1]. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக கல்யாணப் பரிசு, அறிவாளி, வணங்காமுடி, மருதநாட்டு வீரன், பூலோக ரம்பை, அரசிளங்குமரி, வண்ணக்கிளி, தேன் நிலவு, திருடாதே உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இல்வாழ்க்கை

நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தார்.

மரணம்
சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த சரோஜா ஏப்ரல் 2, 2012 அன்று தமது 82வது அகவையில் மாரடைப்பால் காலமானார்[2].

No comments:

Post a Comment