Monday 30 April 2018

MALINI FONSEHAA ,SRILANKA ACTRESS BORN 1947 APRIL 30






MALINI FONSEHAA ,SRILANKA ACTRESS
BORN 1947 APRIL 30



மாலினி பொன்சேகா

இலங்கை, கெலனிய, பெலியகொட என்ற இடத்தைச் சேர்ந்த கில்பெர்ட்-சீல்வத்தியே ஃபொன்சேகா தம்பதியரின் மூன்றாவது மகளாக 30.4.1947 அன்று பிறந்தவர். இவரது பிறப்புக்குப் பின் இவரது குடும்பம், நுகையெகொட என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்தது. இவரது 5-ஆவது வயதில் நுகையெகொட புனித ஜோன்ஸ் கல்லூரியில் ஐந்தாம் தரம் வரை கல்வி பயின்ற பின் குடும்பம் மீண்டும் வேத முல்லே என்ற பகுதிக்குக் குடி பெயர்ந்தது. பின்னர் கெலனிய, குருகுல மகாவித்யாலயாவில் கல்வியைப் பூர்த்தி செய்தார்.

12.6.1986 அன்று லக்கி டயஸ் என்பவரைத் திருமணம் செய்தார்.

1963-இல் இவர் மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பிரதான கதாபாத்திரத்தில் 14 நாடகங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆனந்த பொன்சேகா தான் இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார். 1968-இல் புஞ்சி பாபா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல சிங்களப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இந்திய-இலங்கை கூட்டுத்தயாரிப்பான ‘பைலட் பிரேம்நாத்’ என்ற ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்துள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மாலினி பொன்சேகா (Malini Fonseka, பிறப்பு: ஏப்ரல் 30, 1947), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். இவர் இலங்கையில் சிங்களத் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு
520/9, சுசிலாராம வீதி, மாலபேயில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,


இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான மாலினி பொன்சேகாவின் உறவினரின் மகள் ஒருவர் பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்றுள்ளார்.

நடிகையான செனாலி பொன்சேகா என்பவரே இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அவர் வைத்திய பட்டதாரியாக பட்டம் பெற்றுள்ளார்.

சிறுவயது முதலே பிரித்தானியாவில் வாழும் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கற்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் வைத்திய பட்டதாரியாக பட்டம் பெற்றவருக்கு இலங்கை நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.









No comments:

Post a Comment