Saturday 21 April 2018

DOWN FALL -GERMAN MOVIE சர்வாதிகாரம் வீழ்ந்த கதை







DOWN FALL GERMAN MOVIE- சர்வாதிகாரம் வீழ்ந்த கதை




DOWN FALL - சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்...
DOWN FALL  படத்தின் கதை:


      ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.. ஹிட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்.... ஹிட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன் தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி(Fourth Army) என்ன செய்து கொண்டு இருக்கின்றது? என்று கேட்டு கத்துவதில் இருந்து... தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு, புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..



     எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் ஹிட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது....
சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம்(End of Life) எப்படி இருந்து இருக்கும்? அது நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்....
தீவிரவாதி, ஒய்பெர்ஸ் சண்டயில் 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி,ஓவியன்,அரசியல்வாதி,மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ்(Non-Veg ) சாப்பிடாதவன் என்ற பன்முக தன்மை கொண்ட ஹிட்லரின் கடைசி காலத்தை பற்றி அறிய இந்த படத்தை பார்க்கவும்....

வாழ்வில் இந்த படத்தை தவறாமல் பார்ககவேண்டிய படம் இது....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...



     ஒரு வரலாற்று படத்தை எடுக்க போகின்றோம் என்றால் அதுக்கு நிரம்ப பொறுமையும், ஆராய்ந்து உண்மைகனை தெரிந்து கொள்ள வேண்டும்... பட்ஜெட் இல்லை என்று எந்த சப்பை காரணமும் சொல்லாமல் ஷாட் வைக்க வேண்டும்... எங்கேயும் காம்பரமைஸ் ஆக கூடாது... இந்த படம் முழுவதும் இதனை நாம் உணரலாம்.


எனென்றால் ரஷ்ய படைகள் நெருங்கிய போது அவர்கள் கைக்கு எந்த ஆதாரமும் கிடைத்துவிடாமல் இருக்க எல்லாத்தையும் தீயிட்டு கொளுத்த சொன்னவன்... அந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு ஹிட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும், அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை(No Change)... 

அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்(Brilliant Screenplay)..
ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல்  கொடுத்து பதுங்கு குழியில் இருக்கும் போது கூட மெடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்... அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே???...
தளபதிகள் போர் நிலவரத்தை சொல்ல பரபரப்பாய் கேமரா அவர்களோடு கேமரா டிராவல் ஆவது, நம்மையும் அந்த கூட்டத்தில் ஒருவனாக உணரவைக்க செய்த முயற்சிகள்.


      ஹிட்லர் இறக்கும் வரை சிம்ம செப்பனம்தான்....
ஹிட்லருக்கு பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம்னு இருக்கற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும், அந்த ஒருத்தன் சாகும் போது கூட  ஜெர்மனி யும் ஹிட்லரையும்(ஹிட்லர் மேல் உள்ள பக்தி) வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....
கேமராமேன் Rainer Klausmann யை கோவில் கட்டி கும்பிட வேண்டும்.. பதுங்கு அறை செட்டில் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவது, நிற்பது நடப்பது என பல செய்கின்றது... எந்த இடத்திலும் பிரேமில் வைத்த லைட் கூட தெரியாமல் எடுத்தது அருமை...


அதே போல் எல்லா காட்சிகளும் ஹேன்ட்ஹெல்ட் ஷர்ட்டுகள்தான்... பதுங்கு அறையில் டிராலி(Movable Machine Camera ) உபயோகபடுத்தியது போல் எனக்கு நியாபகம் இல்லை...
செட் போட்ட ஆர்ட் டைரக்டர் சம்மா சொல்ல ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்....நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது ரகசிய அறையில் உட்கார்ந்து கொண்டு...  "அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது" என்று வியாகியானம் பேசுவது ஹிட்லரின் சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும்(Survivel of  Fittest) காட்டுகின்றது....



     ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல் தந்து அவர்களை ஊக்கு விப்பதும் அவர்கள் பெருமை அடைவதும் அந்த கால நிகழ்வை அப்பட்டமாக காட்டக்கூடிய காட்சிகள்...எந்த உதவியும் இல்லாமல் எந்த கம்யூனிகேஷனும் இல்லாமல் பல வீரர்ர்கள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...


இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்து பதுங்கு மாளிகையில் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை ஆடவிட்டு வேடிடிக்கை பார்பது - போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....
இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.... ஒரு வரலாற்று ஆவணம் இந்த படம்....Bruno Ganz ஹிட்லராக வாழ்ந்து இருக்கின்றார்...  ஹிட்லர் மற்றவர்கள் மீது   எரிந்து விழும் கோபத்தை(What an acting that...)  நீங்கள் ரசிக்கலாம், அவர் சாப்பிடும் போது கை ஆடிக்கொண்டே இருக்கும் மேனாரிசத்தை நீங்கள் பார்க்கலாம்... 

முன் பக்கம் விழும் முடியை கோதி விடுவதை ரசிக்கலாம்... அதிலும் "இந்த உலகத்தை தூய்மை படுத்த வேண்டும் என்று தான் நினைதேன். அதை ஏன் இந்த மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" என்று இறக்கும் முன் அப்பாவியாக ஹிட்லர் கேட்கும் போது பாராட்டுகளை அள்ளுகிறார்.
இறக்கும் முன் எல்லோருக்கும் கை கொடுத்து விட்டு சிலநிமிடங்கள் அந்த மிடுக்கு குறையாமல் பேசுவது அற்புதம்....

     இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்துகொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்துகொள்ள அந்த ஒரு காட்சி போதும்...

     இன்னும் சில மணி நேரத்தில் ரஷ்ய படையினர் வந்து விடுவார்கள் என்பதை யார் ஹிட்லரிடம் சொல்வது என்று பயந்து கொண்டு இருக்குங்ம தளபதிகள்... அதே போல் எல்லலா இடத்திலும் இருக்கும் அல்லக்கைகள் போல் ஹிட்லர் பக்கத்தில் இருந்ததும் கொடுமை....



     கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது... ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக ஹிட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது எந்த அளவுக்கு ஒரு தலைவனாக தனது பேச்சால் கட்டி போட்டு இருக்கின்றான் என்று நினைக்கும் போது ஆச்சர்யம் மேலோங்கி இருக்கின்றது...
ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாள் கழித்து கூட பல படைதளபதிகள் தற்கொலை செய்து கொள்வதும், ஜெர்மனிக்காக உயிர்விட்டு விசுவாசத்தை காட்டுவதும் கொடுமை...

      இந்த படம் பெஸ்ட் பாரின் பிலிமுக்கான ஆஸ்கார் அவார்டு வாங்கியது... இந்த படம் ஜெர்மன் படம்...



     ஹிட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது...

     இந்த படம் பார்த்த பின்பு ஹிட்லரை ரசிப்பீர்கள்.. அதுதான் இந்த படத்தின் பலம்



Directed by Oliver Hirschbiegel
Produced by Bernd Eichinger
Written by Joachim Fest
Bernd Eichinger
Traudl Junge
Melissa Müller
Starring Bruno Ganz
Alexandra Maria Lara
Corinna Harfouch
Ulrich Matthes
Juliane Köhler
and
Thomas Kretschmann
Music by Stephan Zacharias
Cinematography Rainer Klausmann
Editing by Hans Funck
Distributed by Constantin Film
Newmarket Films (English subtitles)
Release date(s) September 16, 2004 (Germany)
February 18, 2005 (USA)
Running time Theatrical cut:
155 minutes
Extended cut:
178 minutes
Country Germany


Italy
Austria
Language German
Russian
Budget €13.5 million[1]
Gross revenue $92,180,910[1]



No comments:

Post a Comment