Sunday 29 April 2018

IN SEARCH OF MALAYSIAN AEROPLANE




IN SEARCH OF MALAYSIAN AEROPLANE


“என்ன பண்றீங்க சீப்? கதவை திறங்க! “என்ற ஜார்ஜின் குரல் கேட்டது.”உலகத்தில் எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்க? என்னை தவிர! சாவுங்கடா!


விண்ணில் பறக்க அந்த விமானம் காத்திருந்தது.

அதில் பயணிக்க இருந்த 239 பயணிகளுக்கு இன்னும் நான்கு மணி நேரத்திற்கு அதுதான் தற்காலிக இருப்பிடம். அதன் காக் பிட்டில் நகம் கடித்தபடி உட்கார்ந்திருந்தார் ரேகன்.கமர்சியல் பைலட்டாக 2000மணி நேரங்களுக்கு மேல் பறந்து பயிற்சி எடுத்து பாசெண்சர் பிளைட்டில் தன்னுடைய 500 வது மணித்துளிகளை கடக்கப் போகிறவர்.

காக்பிட்டின் கதவு தட்டப்பட்டதும் தன்னிடமிருந்த சாவியால் அதன் கதவை திறந்தார்.புன்னகையுடன் உள்ளே வந்த பணிப்பெண் “எதாவது சாப்பிடுகிறீர்களா? “என்றாள்.”ஒரு பெக் விஸ்கி! “என்று வாயை மூடும் போது “ஹேய் ஹனி! “என்றபடி காக்பிட்டினுள் பிரவேசித்தான் ஜார்ஜ்

”ஸாரி சீப்! பையனுக்கு பர்த்டே! அதான் லேட்டு! லண்டன் போனதும் உங்களுக்கெல்லாம் டிரிட் வைக்கிறேன்.!”என்றான்.”உங்களுக்கு எதாவது வேணுமா? “என்றவளிடம் “சீப் சொன்னதே எனக்கும்! “என்றான்.

“எத்தனாவது பர்த்டே இது? “
“ஆறாவது பர்த்டே சீப்! “
“வாழ்த்துகள் பையா! இன்னும் கண்ட்ரோல் ரூமிலிருந்து அழைப்பு வரலை.அதை கவனி.!நான் பாத்ரூம் போயிட்டு வந்திடறேன்! “

ரேகன் காக்பிட்டின் கதவை திறந்து நடைபாதை வழியே பயணிகளை கடந்து நடந்தார்.முதல் பயண பயத்துடன் சிலரும், பயண அனுபவமுள்ளவர்கள் அலட்சியத்துடன் இருப்பதை கவனித்து நடந்தார்.ஒரு வேட்டி “யாரு இவரு? “என்றதற்கு “இவருதான் பிளைனை ஓட்ட போறார்! “என்ற பதில் வந்ததையும், “ஓ! பிளைன் டிரைவரா இவரு! “என்ற அறியாமையை யும் கவனிக்காது நடந்தார்.

பிஸ்னஸ்கிளாஸில் ஒரு வெள்ளையன் தன் செக்ரட்டரியை முத்தமிட்டு பிரசவத்திற்கான முன்னேற்பாடுகளை துவங்கியிருந்தான்.பாத்ரூம் கதவை சாத்தி விட்டு உட்கார்ந்தவருக்கு உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக தோன்றியது.அவரும் சந்தோஷமாகவே இருந்தார்.இரண்டு வாரம் முன்பு வரை.

அந்த லண்டன் பிளைன் பாம் வதந்தியால் நிறுத்தப்படாமல் இருந்திருந்தால்? அந்த அகால வேளையில் வீட்டிற்கு போகாமல் இருந்திருந்தால்? அவரின் சந்தோஷம் பறி போயிருக்காது.அவர் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்து கொண்டார்.ஏமாளி! ஏமாளி என்றது


கண்ணாடி.பொங்கிய கண்ணீரை துடைத்து கொண்டு காக்பிட்டை நோக்கி நடந்தார்.காக்பிட் சாவியை மறந்து விட்டதை உணர்ந்தவர் கதவை தட்டினார். டெரரிஸ்டுகள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக காக்பிட்டை உள்ளே பூட்டி கொள்ளும் பாதுகாப்பு முறை.பைலட்டுகள் மட்டுமே திறக்க முடியும்.

ஜார்ஜ் கதவை திறந்தான்.உள்ளே நுழைந்தவுடன் கதவை பூட்டியவன் “என்னாச்சு? அப் நார்மலா இருக்கீங்க? இந்தாங்க உங்க ட்ரிங்ஸ்? “என்று விஸ்கி கிளாஸை நீட்டினான்.வாங்கி கொண்டவர் “நத்திங்! கொஞ்சம் குழப்பம்! “என்றபடி ஒரே கல்ப்பில் விஸ்கியை காலி செய்தார்.

“டைமாயிருச்சு! கிளம்பலாம்! “

இருவரும் பிளைனை கிளப்பும் முயற்சியில் இறங்கினர்.மீட்டர்களின் முட்கள் மேலும் கீழும் அலைய ரன்வேயில் ஓட ஆரம்பித்தது பிளைன்.”சீப்! நீங்க சேப்டி பெல்ட் போடலை! “என்ற ஜார்ஜிடம் “ஸாரி! “என்றபடி தேடி அணிந்தார்.காற்றை கிழித்தபடி விமானம் விண்ணில் ஏறியது.3000ஆயிரம் அடிகளைதாண்டி மேக கூட்டங்களின் குலுக்கல்களை கடந்து நிலையாக விமானம் பயணிக்க ஆரம்பித்தது.

ஆட்டோ பைலட் மோடில் மாற்றிய ஜார்ஜ் “என்ன பிரச்சனை? ஏன் குழப்பமாக இருக்கிறீர்கள்? “என்றான்.

“ஒன்னுமில்லை! ஏதோ குருட்டு யோசனையில் இருந்திருப்பேன் போலும்! “


“சீப்! நீங்க தெளிவா யோசிக்கிறவரு.இந்த காரணம் நம்புற மாதிரி இல்லை.!நீங்களும் சொல்ல மாட்டிங்க! அழுத்தமான ஆளு.!பாருங்க பாத்ரூம் போயிட்டு வந்துடரேன்.!”

ஜார்ஜ் அவசரமாக காக்பிட் சாவியை எடுத்து கொண்டு வெளியேறி னான்.திரும்ப தட்டினால் ரோகன்தான் திறக்க வேண்டும்.உள்ளிருந்து மட்டுமே திறக்கும் விசேஷ பூட்டு.ஆள் வெளியேறியதும் தானாகவே ஆட்டோ லாக் ஆகும் நவீன டெக்னாலாஜி.கண்ணாடி வழியே தெரிந்த பரந்த வானத்தையும் அதில் உருண்டோடும் மேகங்களையும் பார்த்து கொண்டிருந்தவருக்கு அன்றைய இரவு நினைவுக்கு வந்தது.

பிளைட் கேன்ஸலாகி குஷியாக வீட்டிற்கு வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.காதலித்து மணந்த மனைவியை வேறோருவனுடன் பார்க்கும் அதிர்ச்சி அவருக்கு வாய்த்தது.அதிர்ச்சியோடு பாருக்குள் அடைக்கலமானார்.என்ன குறை வைத்தோம் என்ற கேள்வி குடைந்தது.


அவர் விமானத்தின் பாதையை மாற்றினார்.
தகவல் தொடர்புகளை துண்டித்தார்.
அந்த துவக்க காதல் எங்கே போனது? 
என்னிடம் என்ன தப்பை கண்டாள்? 
ஏன் இந்த துரோகம்.?
விமானம் திசை மாறி விரைந்தது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? 
யாருக்கும் எந்த பாவமும் பண்ணலையே?

நீலக்கடலின் மேல் பறந்த போது த்ரட்டிலை கீழ் நோக்கி இழுத்தார்.விமானம் தன் உயரத்தை இழந்து சரியலாயிற்று.வெளியே காக்பிட் கதவு தட்டப்பட்டது.


“என்ன பண்றீங்க சீப்? கதவை திறங்க! “என்ற ஜார்ஜின் குரல் கேட்டது.”உலகத்தில் எல்லோரும் சந்தோஷமா இருக்கீங்க? என்னை தவிர! சாவுங்கடா! “என்றபடி த்ரட்டிலை கீழ் நோக்கி முழுதாக இழுத்து விட்டு கண்களை இறுக மூடினார்.

விமானம் ஆக்ரோசத்தோடு நீலக்கடலை நோக்கி பாய்ந்தது. மறுநாள் மீடியாக்கள் அலறிக் கொண்டிருந்தன.மலேசிய விமானம் மாயம் என்று.!

#உண்மைசம்பவம்!

239 people on board and was en route from Kuala Lumpur to Beijing on 8 March 2014 when air traffic control staff lost contact with it.

he plane eventually focused on a 120,000 sq km area of seabed about 2,000km off the coast of Perth in the southern Indian Ocean. It has now been suspended with no trace of the aircraft found there, and is likely to remain the world's greatest aviation mystery.

00:41, 8 March 2014 (16:41 GMT, 7 March): Malaysia Airlines flight MH370 departed from Kuala Lumpur International Airport and was due to arrive in Beijing at 06:30 (22:30 GMT).


Malaysia Airlines says the plane lost contact less than an hour after take-off. No distress signal or message was sent.
01:07: The plane sent its last ACARS transmission - a service that allows computers aboard the plane to "talk" to computers on the ground. Some time afterwards, it was silenced and the expected 01:37 transmission was not sent.

01:19: The last communication between the plane and Malaysian air traffic control took place about 12 minutes later. At first, the airline said initial investigations revealed the co-pilot had said "All right, good night".

However, Malaysian authorities later confirmed the last words heard from the plane, spoken either by the pilot or co-pilot, were in fact "Good night Malaysian three seven zero".

A few minutes later, the plane's transponder, which communicates with ground radar, was shut down as the aircraft crossed from Malaysian air traffic control into Vietnamese airspace over the South China Sea.

01:21: The Civil Aviation Authority of Vietnam said the plane failed to check in as scheduled with air traffic control in Ho Chi Minh City.


02:15: Malaysian military radar plotted Flight MH370 at a point south of Phuket island in the Strait of Malacca, west of its last known location. Thai military radar logs also confirmed that the plane turned west and then north over the Andaman sea.
In maps accompanying its 1 May report, the Malaysian government revised the time to be 02:22 and put the position further west.

02:28 (18:28 GMT, 7 March): After the loss of radar, a satellite above the Indian Ocean picked up data from the plane in the form of seven automatic "handshakes" between the aircraft and a ground station. The first was at 02:28 local time.

08:11: (00:11 GMT, 8 March) The last full handshake was at 08:11. This information, disclosed a week after the plane's disappearance, suggested the jet was in one of two flight corridors, one stretching north between Thailand and Kazakhstan, the other south between Indonesia and the southern Indian Ocean.



08:19: However, there is some evidence of a further "partial handshake" at this time between the plane and a ground station. This was a request from the aircraft to log on. Investigators say this is consistent with the plane's satellite communication equipment powering up after an outage - such as after an interruption to its electrical supply.

09:15: This would have been the next scheduled automatic contact between the ground station and the plane, but there was no response from the aircraft.

There were 227 passengers, including 153 Chinese and 38 Malaysians, according to the manifest. Seven were children.

Other passengers came from Iran, the US, Canada, Indonesia, Australia, India, France, New Zealand, Ukraine, Russia, Taiwan and the Netherlands.

No comments:

Post a Comment