POLPOT,DICTATOR OF COMBODIA
DIED 1998 APRIL 15
போல் பாட் ஒரு வாழ்க்கை வரலாறு.
போல் போட் (Pol Pot, போல் பாட், பிறப்பு சலோத் சார், மே 19, 1928[1][2] - ஏப்ரல் 15, 1998) முன்னாள் கம்போடிய பொதுவுடமை சர்வாதிகாரி ஆவார். 1970களில் தொடங்கப்பட்ட சிவப்பு கெமர் இயக்கத்தின் தலைவராக இருந்து 1976 முதல் 1979 வரை கம்போடியாவின் பிரதமராக இருந்தார். இவர் பிரதமராக இருக்கும் பொழுது அதிகாரபூர்வமாக பல கம்போடிய மக்களால் கூட்டு வேளாண்மையிலும் வதை முகாம்களிலும் வேலை செய்யவேண்டியுள்ளது. இந்த நிகழ்வில் கம்போடிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 26% உயிரிழந்தனர்.
1979 இல் வியட்நாம் படையெடுத்து சிவப்பு கெமர் அரசு முடிந்துவிட்டது. போல் போட் அகற்றி தென்மேற்கு கம்போடியக் காட்டுக்கு தப்பிவிட்டார். 1989இல் வியட்நாம் கம்போடியாவிலிருந்து பின்வாங்கி போல் போட் திரும்பவும் கம்போடியா சென்று புதிய கம்போடிய அரசுக்கு எதிராக போராட்டம் செய்துள்ளார். 1997 இல் இவர் கைது செய்யப்பட்டு இறக்கும் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.
20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெறுப்புக்குள்ளான கொடுங்கோலர்களில் ஒருவரான போல் போட் (டோல் சவுட் என்றும் போல் போர்த் என்றும் அழைக்கப்பட்டவர்). இவர் கம்போடியாவில் இருக்கும் க்மெர் ரூஜ் என்ற அரசியல் வன்முறைக் கட்சியின் தலைவர். இவர் 1928 இல் பிறந்து 1998இல் இறந்தார். கம்போடியாவில் இவர் ஆட்சி செய்த 1975இலிருந்து 1979வரைக்குள் சுமார் 20 லட்சம் மக்கள் இறப்புக்கு காரணமாக இருந்தார்.
1925இல் கம்போடியாவின் கோம்போங் தோம் மாநிலத்தில் ஸலோத் ஸார் என்ற பெயரில் பிறந்த இவர் பின்னர் பொல் போட் என்ற பெயரில் கம்போடியாவின் புரட்சிகர க்மெர் ரூஜ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். ப்ரெஞ்ச் இந்தோசீனா என்று அப்போது அழைக்கப்பட்ட இந்த பிரதேசத்தில் ஹோ சி மிங் என்ற வியத்நாமியத் தலைவரின் கீழ் ப்ரான்சுக்கு எதிராக போரிட்டு தன் அரசியல் வாழ்க்கையை துவங்கினார்.
1949இல் தன் 20ஆவது வயதில் ஸலோத் ஸார் கம்போடியாவை விட்டு பாரீசுக்குச் சென்று ரேடியோ தொழில் நுட்பத்தை கற்க முயன்றார். அங்கு பாரீசில் படிப்பை விட்டு விட்டு, புரட்சிகர மாணவ சங்கங்களில் இணைந்து கம்யூனிஸ்ட்டாக மாறி, பிரான்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராளிகளோடு இணைந்தார். வியத்நாமிய ஹோ சி மிங் அவர்களோடும், சீன மாவோ சே துங் அவர்களோடும் இணைந்து அவர்களது கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். இந்தக் கொள்கைகள் கிராமிய, விவசாய அடிப்படையில், மார்க்ஸிஸத்தையும், தேசீயத்தையும் கலந்து செய்யப்பட்ட புரட்சிகர அரசியல் கொள்கைகள்.
1953இல் போல் பாட் கம்போடியாவுக்குத் திரும்பி வந்தார். கம்போடியாவில் இருந்த பிரஞ்ச் அரசாங்கம் உருக்குலைந்து விட்டது. கம்போடியாவுக்கு பிரெஞ்ச் அதிகாரத்தின் கீழ் ஒரு தன்னாட்சி வழங்கப்பட்டிருந்தது. அடுத்த வருடம், இந்தோ சீனப் போரின் முடிவில், கம்போடியா முழுச் சுதந்திரத்தை பெற்றது. கம்போடியாவில் நரோத்தம் சிஹனோக் என்ற அரசரின் கீழ் முடியாட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
அரசர் நரோத்தம் சிகனோக்குக்கு எதிராகவும் முடியாட்சிக்கு எதிராகவும் தொடர்ந்த புரட்சிகர அரசியல் குழுக்களுடன் தன்னை இணைத்துக்கொண்ட ஸலோத் ஸார், 1960இல் மற்ற கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தார். அரசர் சிகனோக் இந்த குழுவை ‘க்மெர் ரூஜ் ‘ என்று அழைத்தார். க்மெர் ரூஜ் என்றால், சிவப்பு கம்போடியர்கள் என்று பிரெஞ்ச் மொழியில் அர்த்தம். இந்தப் பெயரே பின்னர் இந்தக் குழுவின் பெயரானது. இந்தக் குழுவின் தலைவரான ஸலோத் ஸார், தன்னுடைய பெயராக போல் போட் என்ற புனை பெயரைச் சூட்டிக்கொண்டார். 1967இல் முழு கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போல் பாட், கம்போடிய அரசாங்கத்துக்கு எதிராக கொரில்லா போர் முறைகளையும் மாவோ சேதுங், ஹோ சி மிங் கற்றுத்தந்த போர் முறைகளையும் பயன் படுத்தி தனது ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
அடுத்த 15 வருடங்கள், க்மெர் ரூஜ் கம்போடிய அரசாங்கத்துக்கு எதிராக நீண்ட போரை நடத்தியது. 1970இல் நரோத்தம் சிகனோக் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். அமெரிக்க அரசாங்கம், கம்போடிய ராணுவத்தளபதியான லோன் நோல் என்ற ராணுவத்தளபதியை ஆதரித்தது. 1975இல் பக்கத்தில் இருந்த வியத்நாமிலிருந்து அமெரிக்க ராணுவம் பின்வாங்கியபோது, கெமெர் ரூஜ் அந்தக் குழப்பத்தை பயன்படுத்துக்கொண்டு, கம்போடியத் தலைநகரமான ஃப்னாம் ஃபெங் நகரத்தை தாக்கியது. தலைநகரம் வீழ்ந்ததும் முழு தேசத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
1975இலிருந்து 1979வரை க்மெர் ரூஜ் கட்சி, கம்போடியத் தேசத்தை இரக்கமின்றி ஆண்டது. விவசாய கம்யுனிஸத்தை பரிசோதனை செய்து பார்க்கிறேன் என்று சுமார் 20 லட்சம் கம்போடியர்கள் கொல்லப்பட்டார்கள். பலர் பசி பட்டினியாலும், வியாதிகளாலும் இறந்தார்கள். அரசாங்கம் விவசாயத்தை பொது கூட்டமைப்பு ( collectivize agricultural production) ஆக உருவாக்க முனைந்தது. இதைவிடவும் நேரடியாகவே க்மெர் ரூஜ் கட்சிக்குள் எதிர்ப்பாளர்களை கொல்வதிலும் பலர் இறந்தார்கள். வர்க்க எதிரிகள் என அடையாளம் காணப்பட்ட, மருத்துவர்கள், என்ஜினியர்கள், சிறுதொழில் செய்பவர்கள், கடைகள் வைத்திருந்தவர்கள், வியாபாரிகள் என்று விவசாயிகளைத் தவிர மற்ற அனைவரும் வர்க்க எதிரிகளாகப் பார்க்கப்பட்டார்கள். எனவே இவர்கள் கொல்லப்பட்டார்கள். விவசாயம் பொதுக் கூட்டு அமைப்புக்குள் வருவதை எதிர்த்த சிறு விவசாயிகளும் வர்க்க எதிரிகளாகப் பார்க்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். பொதுக்கூட்டமைப்புக்குள்ளும் கட்டாய வேலை வாங்கப்பட்டதால் உடல்நலம் குன்றியவர்கள் பாரம் என்று கொல்லப்பட்டார்கள்.
1979இல் கம்போடியாவுக்கும் வியந்நாமுக்கும் இடையே நடந்த போர்களின் காரணமாக வியத்நாம் கம்போடியாவை ஆக்கிரமித்தது. வியத்நாம் போல் பாட்டை துரத்திவிட்டு அங்கு தனது பொம்மை அரசை நிறுவியது. க்மெர் ரூஜ், அருகே இருந்த தாய்லாந்து நாட்டுக்கு ஓடியது. தெற்கு தாய்லாந்து எல்லைக்குள்ளாக தனது போர்த்தளங்களை அமைத்துக்கொண்டு தன் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்தது.
அடுத்த 17 வருடங்களுக்கு க்மெர் ரூஜ் பல கம்போடிய அரசாங்கங்களை இவ்வாறு போரிட்டு வந்திருந்தது. 1991இல் பல போராளிக்கட்சிகள் சமாதான ஒப்பந்தம் எழுதியும் அமைதி வரவில்லை. 1993இல் நடந்த தேர்தலை கெமெர் ரூஜ் பகிஷ்கரித்தது. அந்தத் தேர்தலில் அரசர் நரோத்தம் சிகனோக் அவர்களின் மகன் நரோத்தம் ராணாரித் அவர்கள் ஒரு கூட்டணியோடு ஆட்சியைக் கைப்பற்றினார்கள். 1996இல் இந்த அரசாங்கம், போல் பாட்டின் கெமெர் ரூஜ் கட்சியை விட்டு வெளியே வரும் எல்லா போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. சுமார் 4000 போராளிகள், போல்பாட்டின் மச்சானின் தலைமையில் இவ்வாறு வெளிவந்து அரசாங்கத்தின் ராணுவத்தில் இணைந்தார்கள். இதன் பின்னர், போல் பாட்டின் தலைமையின் கீழ் சுமார் 4000க்கும் குறைவாகவே போராளிகள் இருந்தார்கள்.
1997இல் இவ்வாறு சிதறடிக்கப்பட்ட க்மெர் ரூஜ் தன் வலிமையை இழந்து பிளவுபடத்தொடங்கியது. போல் பாட் தலைமைப் பதவியை இழந்தார். போல் போட்டுக்கும், முந்தைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சோன் சென்னுக்கும் இடையே நடந்த உள்கட்சிப் போராட்டத்தில், போல் பாட், சோன் சென்னுக்கும் அவரது 11 குடும்பத்தாருக்கும் மரணதண்டனை விதித்தார். இந்தப் படுகொலைக்குப் பிறகு, சோன் சென்னுக்கு விசுவாசமாக இருந்த 1000 பேர் போல் பாட்டுக்கு எதிராக திரும்பி அவரையும் அவரது விசுவாசிகளான 300 போராளிகளையும் கம்போடியக் காட்டுக்குள் துரத்தினார்கள். போல் பாட்டும் அவரது மிகுந்த விசுவாசிகளாக இருந்த 15 போராளிகளும் மட்டும் அவரது முன்னாள் தோழர்களால் கைது செய்யப்பட்டார்கள்.
போல் பாட் கைது செய்யப்பட்ட பின்னர், ஐக்கிய நாடுகளும் எல்லா நாடுகளும் இணைந்து அவரை விசாரணை செய்ய வேண்டும் என்று கம்போடிய அரசாங்கம் கேட்டுக்கொண்டது. அமெரிக்க அரசாங்கமும் அதற்கு ஆதரவு தெரிவித்தது. போல் பாட்டுக்கும் அவரது க்மெர் ரூஜ் கட்சிக்கும் வெகுவாக உதவிய சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1998, ஏப்ரல் 15ஆம் தேதி மாரடைப்பில் உலக நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்படாமலேயே மரணமடைந்தார் போல் போட்.
க்மெர் ரூஜ் கட்சியின் சில கொள்கைகளும் முழக்கங்களும்
Strengthen and expand the absolute stance of proletarianism while absolutely sweeping out non-proletarian stances. (Notebook 135 KNH)
பாட்டாளி வர்க்க உணர்வை கூர்மைப்படுத்துவதிலும், வலிமைப்படுத்துவதிலும், பரப்புவதிலும் பாட்டாளிவர்க்க எதிரி சிந்தனையை தூக்கி எறிவதிலும் தீவிரமாக இரு
Keeping you is no gain, losing you is no loss.
உன்னை வைத்திருப்பதில் பிரயோசனமில்லை, உன்னை இழப்பதிலும் எந்த இழப்பும் இல்லை
Destroy communication networks! (KR notebook 194 KNH)
தொலைத்தொடர்பு இணைப்புகளை உடைப்போம்
Only the people can build world history.
மக்களால் மட்டுமே உலக வரலாற்றைக் கட்ட முடியும்
Reject no-good cadre who refuse to make changes in their attitude; abolish authoritarianism, bureaucracy, feudalism, and opportunism. (KR notebook 076 KNH)
தன் போக்கை மாற்றிக்கொள்ளாத போராளிகளை உதறி எறி. எதேச்சதிகாரம், அதிகார வர்க்கம், நிலப்பிரபுத்துவம், சந்தர்ப்பவாதத்தை அழி.
Constantly strengthen patriotism, revolution, and be proud of our revolution, nation, people, revolutionary army and our party. Make them become as hard as iron. (Quoted from KR notebook Number 076 KNH)
தேசபக்தியையும், புரட்சியையும் வலிமைப்படுத்து. நம் புரட்சிக்காகவும், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், புரட்சி ராணுவத்துக்காகவும், நம் கட்சிக்காகவும் பெருமைப்படு. அவைகளை இரும்பு போல வலிமைப்படுத்து.
Nothing harmful to the nation, the revolution, or the party must be thought of or created.
நாட்டுக்கோ, புரட்சிக்கோ, கட்சிக்கோ பாதகமானதை சிந்திக்கவோ உருவாக்கவோ கூடாது.
Be committed to weakening and smashing feudalists, conservatives, and imperialists who are ‘reactionaries ‘.
நிலப்பிரபுக்களையும், பிற்போக்கு வாதிகளையும், ஏகாதிபத்தியவாதிகளையும் பலவீனப்படுத்துவதிலும், அவர்களை உடைப்பதிலும் தீர்மானமாக இரு.
Be committed to smashing hidden enemies burrowing inside–CIA and KGB agents!
நமக்குள் ஊடுருவும் சிஐஏ ஏஜெண்டுகளையும் கேஜிபி ஏஜெண்டுகளையும் தீர்த்துக்கட்டுவதில் தீவிரமாக இரு
Be committed to sacrificing our lives in fulfilling Angkar ‘s labor tasks!
அங்கோருக்கான வேலைகளைச் செய்வதில் உயிரை தியாகம் செய்யத் தயாராக இரு
The worms inside the meat of fish paste will not show up if boiling water is poured down.
கொதிக்கும் நீரை ஊற்றினால், மீன் கலவைக்குள் இருக்கும் புழுக்கள் வெளியே வந்துவிடும்
A child is a clean-cut individual.
ஒரு குழந்தை சுத்தமான மனிதன்
Individualism is to collectivism as capitalism is to socialism. (KNH079, p. 11)
தனித்துவத்துக்கும் பொதுத்துவத்துவத்துக்கும் உள்ள வித்தியாசம், முதலாளித்துவத்துக்கும் சோஷலிஸத்துக்கும் உள்ள வித்தியாசம்
Cut off the ownership regime and the old commerce and create a new one.
பழைய சொத்துமுறைகளைகளையும், வியாபாரத்தையும் ஒழித்துவிட்டு புதியதை உருவாக்குவோம்.
Those who have never labored must be made to do so in agricultural production. (KHN179)
முன்பு என்றும் உழைக்காதவர்களை விவசாய உற்பத்தியில் உழைக்கக் கட்டாயப்படுத்துவோம்
We expel all people and enemies. (KNH179)
எல்லா மக்களையும் எதிரிகளையும் நாடுகடத்துவோம்
To win over enemies, we must destroy the internal ones.
எதிரிகளை வெற்றிகொள்ள நாம் உள் எதிரிகளை அழிக்க வேண்டும்.
Loss of life is a simple thing for a man of war.
போரிடும் மனிதனுக்கு உயிரிழப்பு சாதாரணமானது.
Life devoted to battle is one honored in value.
போருக்கு அர்ப்பணித்த வாழ்வே மாண்பு பொருந்திய வாழ்வு.
For the people and the army, to live or to die must be for the greatness of the revolution.
புரட்சியின் பெருமைக்காக மட்டுமே மக்களும், ராணுவமும் வாழவும் சாகவும் செய்ய வேண்டும்.
Communists are best known by the sacrifices they make for their country. (Excerpts from Comrade Iv ‘s notebook)
தங்கள் தேசத்துக்காக செய்யும் தியாகங்களாலேயே கம்யூனிஸ்ட்கள் பெயர் பெறுகிறார்கள்.
Absolutely get rid of the Vietnamese invaders wishing to swallow our territory from Cambodia forever. (Excerpts from notebook 076KNH)
நமது நிலத்தை அபகரிக்க விரும்பும் வியத்நாமிய ஆக்கிரமிப்பாளர்களை நிரந்தரமாக தீர்த்துக்கட்டு
ஆதாரம்:
http://www.bigpond.com.kh/users/dccam.genocide/khmer_rough_solgan.htm
No comments:
Post a Comment