Showing posts with label srilanka. Show all posts
Showing posts with label srilanka. Show all posts

Wednesday, 25 May 2022

ANU.VAI.NAGARAJAN, WRITER OF SRILANKA 1933 MAY 25 -2012 AUGUST 2

 


ANU.VAI.NAGARAJAN,

WRITER OF SRILANKA 

1933 MAY 25 -2012 AUGUST 2



அநு. வை. நாகராஜன் (மே 251933 - ஆகத்து 02,2012வானொலிப் பேச்சு, மேடைப் பேச்சு, மேடை நாடக இயக்கம், நடிப்பு, திறனாய்வு, கதை, கவிதை, ஆக்கம், சிறுவர் இலக்கியம் என ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையில் பல பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டவர்.


வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் பிறந்தவர். பெற்றோர் வைரமுத்து, இராசம்மாள். அநுராதபுரத்திலும், பின்னர் இறுதிக் காலத்தில் வெள்ளவத்தையிலும் வாழ்ந்தவர். தொடக்கக் கல்வியை, அநுராதபுரம் திருக்குடும்பக் கன்னியர் தமிழ் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை அநுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியிலும் கற்றார்.

மூன்று ஆண்டு காலம் தற்காலிக எழுதுவினைஞராக அநுராதபுரம் இரயில்வே திணைக்களத்திலும், சுகாதாரத் திணைக்களத்திலும் பணியாற்றிய பின்னர் சமூகசேவைக் கல்வியில் "டிப்ளோமா" கற்கைக்காக தமிழ்நாடு சென்றார். பட்டம் பெற்று மீண்டும் இலங்கை திரும்பி அநுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயத்தில் 1956 ஆம் ஆண்டில் தொண்டராசிரியராகப் பணியாற்றினார்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் இடைநிலை கலைமாணி, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதனிலைமாணி, தமிழ்நாடுசென்னை சைவ சித்தாந்த சமாஜத்தின் சைவப் புலவர் பட்டம் போன்றவற்றையும் பெற்றார்.

பதவிகள்[தொகு]

உதவி ஆசிரியராக இருந்தவர், பின்னர் அதிபராக (தரம் 1) இருந்து பல பாடசாலைகளை முன்னேற்றி, இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (2 ஆம் வகுப்பு) இருந்து கல்வி அதிகாரியாக பணியாற்றினார்.

இலக்கியப்பணி[தொகு]

வானொலிப் பேச்சு, மேடைப் பேச்சு, மேடை நாடக இயக்கம், நடிப்பு, திறனாய்வு, கதை, கவிதை, ஆக்கம் என இவர் கைபடாத துறையே இல்லை. தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர். வீரகேசரிதினகரன்சிந்தாமணிதினபதி, ஒப்சேவர் போன்ற பல பத்திரிகைகளின் செய்தி நிருபராகவும், புகைப்பட நிருபராகவும் செயற்பட்டவர். பின்னர் சுதந்திரன், அறிவுக்களஞ்சியம், விளக்கு, மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் எழுதினார். ஆரம்பகாலத்தில் அநுராதபுரத்தில் அன்னை என்ற முத்திங்கள் கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு பெற்ற ஆரம்ப அனுபவமே இவருக்கு நல்லதோர் அத்திவாரம் ஆகியது. இவரது பல வெளியீடுகள் சிறுவர் இலக்கியமாகவும் சமய இலக்கியமாகவும் வெளிவந்தன.

சமூக சேவை[தொகு]

யாழ். இலக்கிய வட்டம், தெல்லிப்பழை கலை இலக்கியக் களம் போன்ற இலக்கிய அமைப்புகளிலும், தெல்லிப்பழை விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம், வலிகாமம் பிரஜைகள் குழு ஒன்றியம். வலி. வடக்கு புனர்வாழ்வுக் கழகம் போன்ற பொது அமைப்புகள் ஊடாக சமூகசேவை அங்கத்தவராக மக்கள் மத்தியில் மதிப்பும் பெற்றவர்.

இவரது நூற்கள்[தொகு]

சமய இலக்கியம்[தொகு]

  • மார்கழி மங்கையர் (1971) - இசைப்பாடல்- விளக்கவுரையாக வெளிவந்தது.
  • விநாயகர் மகத்துவம் (1986) - தென் மயிலை வீரபத்திரர் ஊஞ்சல் (கவிதை)
  • பட்டரின் அபிராமி மாண்மியம் (2000)
  • விநாயகர் திருவருள் (1992)

சிறுவர் இலக்கியம்[தொகு]

  • மாணவர் நல்லுரைக்கோவை (1976)
  • காட்டில் ஒரு வாரம் (1988)
  • தேடலும் பதித்தலும் (1992) - சிறுவர் அறிவியல் நூல்.
  • அவன் பெரியவன் (1993) - சிறுவர் குறும் நவீனம், 1998 இல் திருத்திய பதிப்பாகவும் வெளிவந்தது.
  • சிறுவர் சிந்தனைக் கதைகள் (2002)
  • அறிவியல் பேழையில் ஒருசில மணிகள் (2004)
  • சிறுவர் கவிதையில் புதிய சிந்தனைகள் (2005)
  • சிறுவரும் அவர் தம் அறிவுசார் சாதனங்களும் (2005)
  • நோருவல் இருந்து கவிதை அமிழ்தம் (2006)
  • அநு.வை.நா.வின் ஒரு காலத்துச் சிறுகதைகள் (2003) - தொகுப்பு.
  • சிறுவர் பழமொழிக் கதைகள் (வர இருப்பது)

விருதுகள்[தொகு]

  • இதற்கு சாகித்திய மண்டலப் பரிசும் இந்து கலாசார அமைச்சினால் இலக்கிய வித்தகர் விருது (காட்டில் ஒருவாரம் - 1988)
  • வட, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் விருதும் பாராட்டும் (சிறுவர் சிந்தனைக் கதைகள் - 2002)
  • கண்ணதாசன் மன்றத்தால் 2004 இல் " இலக்கிய வேந்தர்" விருது வழங்கப்பட்டது.



Saturday, 20 March 2021

SRILANKA -GENOCIDES - LOTS OF MISSING 1983- 2009

 


SRILANKA -GENOCIDES -

LOTS OF MISSING 1983- 2009 



பிறப்பு, இறப்பு உயிரினங்களுக்கு பொதுவானது. பிறப்பு இருந்தால் இறப்பு நியதியானது. தமது பிறப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் உயிரினங்கள் இறப்பை சில வேளைகளில் அவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இது ஆறு அறிவு பொருந்திய மனித உயிரினத்திற்கும் பொருந்தும். இதற்கான முக்கிய காரணம் மனித வாழ்வின் இடையில் ஏற்படும் தான் வாழும் சூழலிலிருந்து காணமல் போதல் என்ற நிகழ்வுகளே காரணம் ஆகும். மனிதர்; காணமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. இயற்கையினால் எற்படும் அழிவுகள் இதனைத் தொடர்ந்த இடம்பெயர்வுகள், யுத்தம், இயற்கை அழிவுகளின் போது தாய், தந்தையரை உள்ளிட்ட உறவுகளை இழங்கும் குழந்தைகள், புத்தி சுவாதீனம் அற்ற நிலையில் இடம் பெயர்ந்து தன்னையாரேன்ற அறியாது இருத்தல் என்று பலவற்றை அடிக்கிக்கொண்டே போகலாம்.



மாவீரர் நாள் ஒரு நாள் கொண்டாட்டமாக 1990 களில் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் முதலில் பிரேமதாஸ வழங்கிய வானூர்தியை பாவித்து பாலசிங்கமும், புலிகளின் இன்னொரு முக்கியஸ்தரும் மட்டக்களப்பு பயணம் செய்து முதலில் ஆரம்பிக்கப்பட்டதே இந்த மாவீரர் கொண்டாட்டம் ஆகும். பிற்காலத்தில் புலம் பெயர் தேசங்களில் இது ஒரு பெரும் பணம் வசூல் செய்யும் கேளிக்கை நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது. ஒரு நாள் கலக்சனில் திருப்தி அடையாத மாவீரர் நடத்துனர் கூட்டங்கள் ஓரு நாள் கொண்டாட்டத்தை ஒரு வாரக் கொண்டாட்டம் ஆக்கி மாவீரர் கிழமை என்பதை அங்குரார்பணம் செய்து வைத்தனர்.  2009ம் ஆண்டு மே மாத்தின் பின்பு இந்த கிழமைக் கொண்டாட்டம் ஒரு மாதக் கொண்டாட்டம் என்றாகி விட்டது.


ஆரம்ப காலங்களில் புலம் பெயர் தேசங்களில் சரியோ பிழையோ ஈழத் தமிழர்களின் ஒரு பிரிவினர் மாவீரர் தினத்தை மாவீரர் நினைவு நாட்களாக கொண்டாடினர் என்பதே உண்மை நிலை. கூடவே பணமும் சேகரித்தனர், பிரச்சாரமும் பண்ணிணர். தற்போது மாவீரர் நிகழ்வு ஈழத் தமிழர் வசம் இருந்து தமிழ்  நாட்டுத் தமிழன் சீமான் வசம் கை மாறிவிட்டது. இவர்தான் இந்த மாவீரர் மாதம் என்றும், மே மாதம் என்றும் பிரகடப்படுத்தி இவ்விரு மாதங்களிலும் பண்டிகைகளை நடத்த விடாமல் தடுத்து வருகின்றார். இந்த பண்டிகைத் தடையெல்லாம் புலம் பெயர் தேசங்களில் மட்டுமே அமுல்படுத்த கட்டாயப்படுதப்படுகின்றது. இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இந்த பாட்சா எல்லாம் பலிக்கவில்லை, பலிக்காது. இவ்வருடம் நவம்பர் மாதம் 'துப்பாக்கி' வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது.யாரும் கொண்டாட்டங்களை காரணம் காட்டி இதை ஓட விடாமல் தடுக்கவில்லை. இலங்கையில் கேட்கவே வேண்டாம். கூடவே விநாகயம் என்றும் நெடியவன் என்றும் நாடு கடந்த தமிழ் ஈழம் என்றும் தேசியப் பேரவை என்றும் பல பிரிவுகள் தலைவர் மாவீரர் உரை இல்லாத மாவீரர் தினக் கொண்டாட்டங்களை போட்டிபோட்டு நடாத்த முண்டியடிக்கின்றன. கூடவே கொலைகளையும் செய்கின்றன தங்களுக்குள்ளேயே. ஏன் எனில் 'தலைவர் வருவார் ஆனால் வரமாட்டார்' என்ற நிலை நிலவுவதே காரணம். தலைவர் வரமாட்டார் என்பதை பகிரங்கப் படுத்த தலைவரை தேசியத் தலைவராக அங்கீகரித்த யாருக்கும் துணிச்சல் இதுவரை வரவில்லை.



வரலாற்றில் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பாசிச ஹிட்லர் நாடுகளுக்கு எதிரான தனது போரின் தோல்விக் காலகட்டத்தில் காணாமல் போனார். இன்று வரை இவரின் காணாமல் போதல் பற்றி எந்த உறுதியான தகவல்களும் இல்லை. யுத்தத்தின் தோல்விக் கட்டத்தில் தனது காதலியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதில் ஆரம்பித்து ஆஜன்ரீனாவிற்கு விஷேட நீர்மூழ்கி கப்பலில் தப்பி சென்று அங்கு தலை மறைவாக வாழ்ந்து பின்னாளில் இயற்கை மரணம் அடைந்தார் என்ற அண்மை செய்திகள் வரை இருந்தாலும் எச் செய்திகளையும் உறுதிப் படுத்த முடியவில்லை. அவருடன் கடைசிவரை கூட இருந்த யாராவது வாயை திறந்தால் ஒழிய உண்மையை உறுதிப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் அதற்குரிய சாத்தியப்பாடுகள் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. காரணம் காலம் போய்விட்டதால் வயோதிபத்தின் காரணமாக  இவருடன் கூட இருந்தவர்கள் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் தற்போது மிகக் குறைவு. ஆனால் இவரையும் பலர் விரும்பியோ விரும்பாமலோ மீண்டு(ம்) வருவீரோ....? என்ற எண்ண அலையுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் ஒரு பாசிச கொலைஞன் மீண்டும் வரக் கூடாது என்பதே மனித நேயமிக்க மனிதர்களின் பிரார்த்தனையாகும்.


இதேபோல் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை தனது வழிமுறையாக கொண்ட சுபாஸ் சந்திரபோஸ் உம் தனது படையணி ஒன்றுடன் கடைசியாக சிங்கப்பூரில் காணப்பட்டார் என்பதே செய்திகள், நம்பிக்கைகள். இதன் பின்பு இவர் பற்றிய தகவல் ஏதும் இதுவரை இல்லை. இவரையும் பல கோடி இந்திய மக்கள் மீண்டு(ம்) வருவீரோ.....? என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இன்று வரை எந்த உறுதியான தகவல்களும் இன்றி மீண்டும் வரமாட்டார் என்ற சோகமான விடையை தாக்கியே இவரின் வரலாறு நகர்ந்து கொண்டு இருக்கின்றது.



ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈழத்திலிருந்து இந்தியா நோக்கி வள்ளத்தில் பயணம் செய்த இடதுசாரித் போராளி விசுவானந்ததேவன் காணாமல் போய்விட்டார். இவர் கடலில் வைத்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகின்றது. அதுவும் புலிகளினால். ஆனால் கொலை செய்தவர்கள் வாய் திறந்தால் ஒழிய இவர் வழி வந்தவர்களின் மீண்டு(ம்) வருவீரோ.....? என்ற கேள்வி குறி பதிலின்றி தொக்கு நிற்றுகொண்டே இருக்கும்.


2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் தேசியத் தலைவர் என்று பலராலும் அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் காணாமல் போய்விட்டார். இவரின் காணாமல் போதல் சம்மந்தமாக பல செய்திகள் உலாவுகின்றன. இலங்கை இராணுவத்துடனான சண்டையில் வீர மரணம் அடைந்துவிட்டார். இல்லை....இல்லை.... இலங்கை இராணுவத்திடம் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக சரணடைந்த நிலையில் இரகசிய விசாரணைகளின் பின்பு இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்டுவிட்டார். இல்லை....இல்லை....இறுதிக்கட்ட போர் இற்கு முன்பாகவே நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். இல்லை....இல்லை.... இறுதிகட்ட போரின் போது இலங்கை இராணுவத்தின் போர் வியூக சுற்றி வளைப்பை உடைத்துக் கொண்டு தப்பிவிடார். தற்போது ஆபிரிக்க நாடு ஒன்றில் தலை மறைவாக இருக்கின்றார். மீண்டும் வருவார் தலைவர் என்கின்றது இன்னொரு செய்தி. பிரபாகரனை நேசிக்கும் மக்கள் இவரை மீண்டு(ம்) வருவாரோ....? என்று எதிர்பார்த்து ஏக்கத்தில் இருக்கின்றனர் இவரால் பாதிப்படைந்த பல இலட்சம் மக்கள் இவர் மீண்டு(ம்) வருவாரோ.....? என்ற பயத்துடன்? இருக்கின்றனர். யாராறிவார் இந்த மாயாவிக் கதைகளுக்கான முடிச்சுக்களை. ஆனால் வடிவேலுவின் 'வருவார் ஆனால் வரமாட்டார்' என்பதே தேசியத் தலைவரின் பக்த கூட்டங்களும் 'ஞான திருஷ்டி' மூலம் அறிந்த உண்மை. ஆனால் சூரியத் தேவனுக்கு இறப்பு இல்லை என்ற வாதங்களே மேலோங்கி நிற்கும் நிலமைகள் பிழைப்புக்களை தொடர்ந்து நடத்த உதவும் என்பதால் தேசியத் தலைவரை தெய்வம் (சாகா வரம் பெற்ற) ஆக்கிவிட்டார்கள் பக்த கோடிகள்.


1983 ஆண்டு ஜேஆர் ஜெயவரத்தனா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பில் சிங்கள் மக்கள் செறிந்து வாழும் பல பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பலர் காணமல் போய்விட்டனர். இதில் சிறப்பாக அக்கால கட்டத்தில் செட்டிகுளம் புகையிர நிலைய அதிபராக வேலை செய்த தமிழரும் அவரின் ஆண்பிள்களும் காணமல் போய் விட்டனர். எஞ்சி தப்பிய அக் குடும்பத்தவர் இன்றும், இன்னமும் எங்கள் அண்ணா திரும்பிவருவார் என்ற நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகின்றனர் மீண்டு(ம்) வருவாரோ.....? என்பது இவர்களைப் பொறுத்தவரையில் விடாப்பிடியான நம்பிக்கைகளாகவே இருந்து வருகின்றது. இவர்களைப் போல் பல ஆயிரம்; மக்களை நாம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அல்ல உலகம் பூராவும் காணலாம். இவர்களின் மீண்டு(ம்) வருவீரோ......? ஏன்பது ஆம் என்று உண்மை பெறவேண்டும் என்பதே இந்த வலியை உணர்ந்த எங்கள் யாபேரதும் பிரார்த்தனையாக அமைகின்றது. நிறைவேறுமா...?


1983 ம் ஆண்டு வெலிக்கடைப் படுகொலை, 1987 ம் ஆண்டு கந்தன்கருணைப் படுகொலை பற்றிய முழுமையான விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எமக்கு தெரிய இவ்விரு சிறைகளிலும் இருந்தவர்களின் உறவினர்கள் காணாமல் போன தமது உறவுகள் மீண்டு(ம்) விருவீரோ.....?  என்ற சோக கீதங்களை மாவீரர் மாதத்தில் இசைக்கலாமா? ஏன்றே இருப்பார்கள் என்றே நம்ப முடிகின்றது. கூடவே ஆனைக்கோட்டை வதைமுகாங்களின் அனுபவங்களை கூறும் யாழ் மணியங்களும், துணக்காய் வதை முகாங்களின் அனுபவங்களை வெளிக் கொணர்ந்த அருள்பேட்டுக்களும், நவாந்துறை கிறேசியன் போன்றவர்களின் வாக்கு மூலம்களும் இவ் வதை முகாங்களில் அடைக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மீண்டு(ம்) வருவீரோ......? என்ற ஏக்க கீதங்கள் நிறைவேறமுடியாத எதிர்பார்ப்பாகத்தான் இருக்கும் என்பதை கட்டியம் காட்டி நிற்கின்றன. இந்த துன்பியல்களை எத்தனை எத்தனை குடும்பங்கள் கொண்டிருக்கின்றன. இவையல்லாம் எமக்கு ஈழப் போர் விட்டுச் சென்ற வடுகள் அல்லவா...?


இன்று அவுஸ்திரேலியாவிற்கு படகுப்பயணம் செய்யும் பலரில் சில படகுகள் கடலில் மூழ்கி இல்லாமல் போய்கின்றன. திரை கடல் ஓடியும் திரவியம் தேட அவுஸ்திரேலியாவிற்கு பயணம் அனுப்பிவிட்டு எங்கள் குல பெண்டிரும் இதே போலவே 'சென்றடைந்தோம்.....' என்ற செய்திகள் கிடைக்காமல் மீண்டு(ம்) வருவீரோ......? என்ற எதிர்பார்ப்பு, ஏக்கத்துடனேயே இருக்கின்றனர். இவர்கள் மீண்டு.... மீண்டும் வரவேண்டும் என்பதே எல்லோருடைய பிராத்தனையாக இருக்கின்றது.


ஒரு புறத்தில் சிரியா ஊடாக ஈரானுக்கான போர்பாதையை திறக்க ஒபமா தேர்தலுக்கு முன்பும் பின்பும் சூழுரைத்து தீவிரவாதிகளுக்கு ஆயுதம் பணம், ஆலாசனை, உதவிகளை வழங்கி வருகின்றார். இதனால் பல ஆயிரம் சிரிய அப்பாவி மக்கள் மடிந்த வண்ணம் உள்ளனர். தமது உறவுகளை தொலைத்த வண்ணம் உள்ளனர். இவர்கள் தற்போது தமது காணமல் போன உறவுகளைத் தேடி பாடும் சோக கீதமும் மீண்டு(ம்) வருவீரோ......? தான். மறுபுறத்தில் தனது நண்பன் இஸ்ரேல் ஊடாக காசா வழியே ஈரானுடனான போர்ப் பாதையை திறக்க தினம் தினம் வகை தொகையில்லாமல் பாலஸ்தீன குடியிருப்புக்கள் மீது இஸ்ரேல் குண்டுக்களை பொழிந்த வண்ணம் உள்ளனர். இதில் காசாவிலுள்ள பல்லாயிரம் பாலஸ்தீன மக்கள் தமது உறவுகளை தொலைத்துக் கொண்டு இருக்கின்றனர். இது நடைபெறுவதுவும் இந்த நவம்பர் மாதத்தில் தான். இவர்களும் இன்னும் சில தினங்களில்; தொலைந்த தமது உறவுகளை எண்ணி மீண்டு(ம்) வருவீரொ......?  என்று முகாரி ராகம்தான் பாட முடியும.; 50 வருடங்களுக்கு மேலான அகதி முகாம் வாழ்க்கை பாலஸ்தீன மக்களுக்கு கொடுத்த சொத்து இது ஒன்றுதான்


Sunday, 21 February 2021

REINCARNATION OF CEYLON BOY OF KALPANA CHAWLA

 

REINCARNATION OF CEYLON BOY 

OF KALPANA CHAWLA


இலங்கையில் மறு பிறவி எடுத்துள்ள சிறுவன் கூறும் ஆச்சரியமான விபரங்கள்!! இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சவ்லாவின் மறுபிறவியாக இருக்கலாம் என நம்ப்படுகின்றது


கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் தனது முற்பிறவி குறித்த தகவல்களை வெளியிடும் சிறுவன் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது. 7 வயதான இந்த சிறுவன் மினுவாங்கொடை – மாராபொல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.இந்த சிறுவனின் கருத்துக்கள் ஆச்சரியமானவை. அவை கற்பனையாக தெரிந்தாலும் அந்த சிறுவன் விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஓடம் மற்றும் சூரியனை கடந்து செல்லும் விதத்தை விபரிக்கின்றார்.அத்துடன் விண்வெளி ஓடம் தீ பிடித்து பாலைவனத்தில் விழுந்தது குறித்தும் விபரிக்கின்றார்.மேலும் வாகனத்தில் தியாகம் செய்துக்கொண்டிருந்ததாகவும் கூறுகின்றார். இதனைவிட ஆச்சரியம் அந்த சிறுவன் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை சரளமாக பேசுகிறார். சிங்களத்தில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றார்.அழிந்து போன டைனோசர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த விலங்கினத்தின் இனங்கள் பற்றியும் சிறுவன் கூறுகிறார்.





2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கொலம்பியாவின் விண்வெளி ஓடம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பாலைவன பிரதேசத்தில் எரிந்து விழுந்தது.இந்த சிறுவனும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சவ்லாவின் மறுபிறவியாக இருக்கலாம் என இந்த துறை சம்பந்தமான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பிற்காலத்தில் இந்த சிறுவனிடம் தற்போதுள்ள நினைவுகள் மறந்து போகக் கூடும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Wednesday, 30 September 2020

PIUMI HANSAMALLI SEXUAL STORM DUTY, SRILANKA ACTRESS BORN 1992 ,NOVEMBER 22

 

PIUMI HANSAMALLI  SEXUAL STORM  DUTY,

SRILANKA ACTRESS BORN 1992 ,NOVEMBER 22



Piumi Hansamali (born November 22, 1992) is a Sri Lankan Actress, Model, Television Personality, Presenter, and Host from Sri Lanka. She won many national and international beauty contests like Mrs. Nobel Queen (2016) and Best Model of Asia (2017). In fact, her first film is “Waasanaye Sada” (2018). The Sri Lankan movie is a romantic drama Piumi played Mihiri’s role in the movie. Furthermore, it is 1305th Sinhala film in Sri Lanka. She gets a good start in her acting career. In fact, Hansamali appeared in the next film “Luck Now”. Primarily, she focuses on her modeling. She is performing various ramp shows for different brands. Additionally, her target to become an international mode.Piumi posts her photos on her official Instagram, Facebook, and Twitter handles. Actually, her fans on Instagram account are more than 802K. Recently, she shares a post on her official Facebook account. It is regarding the assault faced by her.However, her ex-partner is responsible for torturing her. She is angry with the police for not taking accurate actions. Meanwhile, the Colombo Telegraph published the detail report on the 2018s incident. She even circulated a viral video online. Currently, Facebook deleted the video from their network.

.



கட்டிப்பிடித்து கண்டமேனிக்கு போஸ் கொடுத்த இலங்கை அழகி.. என்னா அழகு என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்!

By Kalaimathi| Updated: Wednesday, September 30, 2020, 15:23 [IST]


சென்னை: நடிகை பியூமி ஹன்சமாலி நிகழ்ச்சி ஒன்றில் பிரஸ்க்கு முன்னாள் ஆண் நண்பர்களுடன் போஸ் கொடுத்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.


நடிகை பியூமி ஹன்சமாலி வாசனயே சண்டா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.பிரபல மாடலாக வலம் வரும் பியூமி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளம்பர படங்கள் என பட்டைய கிளப்பி வருகிறார்.செல்பிக்கள் கடந்த 27 ஆம் தேதி இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் வளைத்து வளைத்து செல்பி வீடியோக்களையும் போட்டோக்களையும் எடுத்தார். அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்தார்.எல்லை மீறிய பார்ட்டி அந்த நிகழ்ச்சியில் முன்னழகு மொத்தமும் தெரியும் படியான உடையை அணிந்து ஒரு ராணியை போல் வலம் வந்தார். அதோடு கையில் சரக்குடன் பலருடன் ஆட்டம் போட்டார். மேலும் பலரையும் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என எல்லை மீறியது அந்த பார்ட்டி.


மீண்டும் வீடியோ இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது எடுத்த போது எடுத்த மேலும் பல போட்டோக்களையும் வீடியோக்களையும் இன்று ஷேர் செய்துள்ளார் பியூமி. அதில் இன்னும் சில நண்பர்களுடன் நெருக்கமாய் இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது.


ஏராளமான கேமராக்கள் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் என தனது நண்பர்களுடன் நெருக்கமாய் இருந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதேபோல் ஆண் ஒருவரை கட்டியணைத்தப்படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பியூமி. ஏராளமான கேமரா மேன்கள் கையில் கேமராக்களுடன் அவரை ஃபோகஸ் செய்ய விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பியூமி


கட்டியணைத்து.. முன்னால் பின்னால் என நினைத்தப்படி நண்பரை அணைத்து போஸ் கொடுத்துள்ளார். இதேபோல் சூப்பர் மேன் போல் உடையணிந்த மற்றொரு நபருடனும் க்ளோஸாய் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோகக்களும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறதுமிஸ் 2020? இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் இதில் யார் உங்கள் கணவர்? உங்கள் கணவரை பார்க்க வேண்டும் அவரை கொஞ்சம் காட்டுங்களேன் என கெஞ்சியுள்ளனர். பலரும் நீங்கள்தான் மிஸ் 2020யா என்றும் கேட்டுள்ளனர்.


ரொம்ப அழகு பியூமி ஹன்சமாலி சில போட்டோக்களில் குயின் 2020 என்ற டேக்குடன் போஸ் கொடுத்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இது ஏதோ அழகி அழகன்களுக்கான போட்டிதான் என கூறியுள்ளனர். இன்னும் சிலர் இந்த உடையில் நீங்கள் ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள் பியூமி என புகழ்ந்துள்ளனர்.


.


.

.

.

Thursday, 20 August 2020

SRILANKA CITIZENSHIP ACT 1948 AUGUST 20



SRILANKA CITIZENSHIP ACT 
1948 AUGUST 20

.இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை 1948 august 20 

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்

இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948 என்பது 1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இது புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான தொழிலாளர்களின்

வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். நாடு விடுதலை பெற்றதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றுவந்த இன முரண்பாடுகளின் தொடக்க வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தச் சட்டம் அமைந்தது எனலாம். இச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.


இலங்கைக் குடியுரிமைச் சட்ட அம்சங்கள்[தொகு]
1948 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இரண்டு விதமான இலங்கைக் குடியுரிமைகளை வரையறுக்கிறது. இவை:

வம்சாவழிக் குடியுரிமை
பதிவுக் குடியுரிமை

Saturday, 25 July 2020

SRILANKA ,VELIKADAI JAIL MURDERS 1983 JULY 25 - 28



SRILANKA ,VELIKADAI JAIL MURDERS 1983 JULY 25 - 28




வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.[1]. இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.[2]
வரலாறு
இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.[3].

வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாவர். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள். இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.[4]

வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் தீவ்யன''
போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில்
விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன்
மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் ..துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில்
வளர்க்கப்பட்டது .வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக்
கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
இவையெல்லாம்,வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு 
நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன .
வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம்

பின்வருமாறு :
தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல் ,
குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் ,
ஜெகன் என்று அழைக்கப்படும் .கணேஷானந்தன்
ஜெகநாதன் ,
தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்,
சிவபாதம்
மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம்
சிவபாதம் ,
செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம்
நடேசுதாசன் ,
அருமைநாயகம் என்றும்சின்னராஜா என்றும்
அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம்,
அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம்
அன்பழகன் ,
ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன்
பாலசுப்பிரமணியம் ,
சுரேஷ்
மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார்,
சின்னதுரை அருந்தவராசா,
தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம்
தேவகுமார் ,
மயில்வாகனம்
சின்னையா ,
சித்திரவேல்
சிவானந்தராஜா,
கணபதிப்பிள்ளை மயில்வாகனம்,
தம்பு கந்தையா,
சின்னப்பு உதயசீலன்,
கணேஷ் என்றும் கணேஷ்வரன்என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்,
கிருஷ்ணபிள்ளை நாகராஜா,
கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம் ,
அம்பலம்
சுதாகரன்,
இராமலிங்கம்
பாலச்சந்திரன்,
பசுபதி மகேந்திரன்,
கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன்
தில்லைநாதன் ,
குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம் ,
மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார் ,
ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம்
சிவகுமார் ,
ராஜன்
கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்,
கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்,
யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன் ,
அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன்
அமிர்தலிங்கம் ,
அந்தோணிப் பிள்ளை உதயகுமார்,
அழகராசா ராஜன்,
வேலுப்பிள்ளை சந்திரகுமார்,
சாந்தன் என்று அழைக்கப்படும்சிற்றம்பலம்
சாந்தகுமார் முதலிய 35 பேர்.

இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு :
1. தெய்வநாயகம் பாஸ்கரன்
 2.பொன்னம்பலம் தேவகுமார் 
3.பொன்னையா துரைராசா
 4.குத்துக்குமார் ஸ்ரீகுமார் 
5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம்
6.செல்லச்சாமி குமார்
7.கந்தசாமி சர்வேஸ்வரன்
8.அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 
9. சிவபாலம் நீதிராஜா 
10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 
11. கந்தையா ராஜேந்திரம்
12. டாக்டர் ராஜசுந்தரம் 
13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 
14. ஆறுமுகம் சேயோன் 
15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
17. செல்லப்பா இராஜரட்னம்
18. .குமாரசாமி கணேசலிங்கன்

Friday, 12 June 2020

KOKKATI SOLAI MASSACRE IN SRILANKA GENOCIDES HELD 1991 JUNE 12



KOKKATI SOLAI MASSACRE IN 
SRILANKA GENOCIDES HELD 1991 JUNE 12




.ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 33 வருடங்கள் ஆகிவிட்டன.

கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும்.

கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.

1987ஆம் ஆண்டில் தை 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்கே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


மண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைதான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர். அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன். அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர் அதிரடிப்படையினர்.

இறால் பண்ணையில் தொடங்கிய இரத்தவேடடை தலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை என்று தொடர்ந்தது. பிரதேசத்தின் கிராமங்களை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதரில் வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர். கிராமம் அல்லோலகல்லோலமானது. படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.

வீட்டுக்கு வீடு மரணம். கொன்றழிக்கப்பட்டவர்கள் எல்லாம் உறவினர். ஒரு வீட்டில் பலர் கொலை. குடும்பம் குடும்பாக கொன்றொழிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலை எளிதில் மறக்கவோ எளிதில் ஆறவோ முடியாத பெரும் காயமாக நிகழ்ந்தது. ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்தனர் இலங்கை அதிரடிப்படையினர்.

பலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமாக சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர்.

கொக்கட்டிச்சோலைப்படுகொலை நடந்தேறி இன்றைக்கு 29 வருடங்கள் கழிந்துவிட்டன என்று கூறுவதைவிடவும் அந்தக் கொடூரப் படுகொலைக்காய் நீதிக்கு காத்திருந்து 29 வருடங்கள் என்று கூறலாம். ஈழத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த இன அழிப்புப் படுகொலைகள் பலவும் விசாரணை நடக்கிறது என்றும் விசாரணை இல்லை என்றும் இழுத்தபடிப்பதைப் போல இலங்கை அரசுகள் கொக்கட்டிச்சோலைப் படுகொலையையும் கடந்து 29 வருடங்கள்.

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் சர்வதேள அளவில் இலங்கை அரசின் இன அழிப்பு முகத்தை அம்பலம் செய்தது. யோசப் பரராச சிங்கம் இந்தப் படுகொலைக்கு உதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி கவனப்படுத்தினார். அவரது கடுமையான முயற்சியினால் இப்படுகொலை குறித்து சர்வதேச அரங்கில் அதிகம் பேசப்பட்டது. அதனாலேயே ஜே.ஆர். அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.

படையினர் பொறுப்பின்றி நடந்து அப்பாவிகளை பலியாக காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபோதும் அந்த அறிக்கையுடன் கொக்கட்டிச்சோலைப் படுகொலை விவகாரத்தை அன்றைய இலங்கை அரசு மறைக்க முனைந்தது. படைகளைகளுக்கு தண்டனையை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்ய ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து இனழிப்பு படுகொலைகளை ஊக்குவித்தது.

கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன. இன்றைய தினம் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறுகின்றது. அத்துடன் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெறுகிறது.

மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.







.

Wednesday, 27 May 2020

1958 RIOTS IN SRILANKA,MAY 27,1958



1958 RIOTS IN SRILANKA,MAY 27




.இலங்கை இனக்கலவரம், 1958 (1958 riots in Ceylon) என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும். இவ்வன்முறைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்றன. ஆனாலும், 1958 சூன் 1 இல் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வு பொதுவாக இனக்கலவரம் என அழைக்கப்பட்டாலும், சில இடங்களில் இனவழிப்பாகவே நடத்தப்பட்டது.[2] இவ்வழிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை[3] கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு 70 முதல் 300 வரையென அறிவிக்கப்பட்டது.[1] இக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆயினும், தமிழர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த காரணத்தினால் சில சிங்களவர்களின் உடமைகளும் சேதமாக்கப்பட்டன. அத்துடன், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பகுதிகளில் சிங்களவர்கள் சிலர் தமிழர்களால் தாக்கப்பட்டனர்.[2]

பின்புலம்

இதனையும் பார்க்க: தனிச் சிங்களச் சட்டம்
1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா பெரும்பான்மை சிங்களமயமாக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினார். புதிய அரசு சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக அறிவித்து தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இலங்கையின் கால்வாசிக்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்களாக இருந்தனர். இச்சட்டம் தமிழர்களிடையே எதிர்ப்பைத் தூண்டி விட்டது. தமது, மொழி, கலாச்சாரம், பொருளாதார நிலை இதனால் பாதிக்கப்படும் என அவர்கள் அஞ்சினர்.[4]

தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் அறப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் இனங்களுக்கிடையே முறுகல் நிலை அதிகரித்தது. இலங்கையின் கிழக்கே கல்லோயா நகரில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.[1] இதனை அடுத்து பிரதமர் பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், இதன் மூலம் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டில் பிரதமருக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழும் நிருவாக மொழியாக இருக்க உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், சிங்களத் தேசியவாதிகள், மற்றும் பௌத்த துறவிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு நடைப் பயணம் மேற்கொண்டனர்.[4][5][6] இவ்வெதிர்ப்பை அடுத்து, பண்டாரநாயக்கா அரசு பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தது.

இதற்கிடையில், பிரித்தானியக் அரச கடற்படையினர் தமது திருகோணமலைத் தளத்தை மூடியதை அடுத்து 400 தமிழ்த் தொழிலாளர்கள் பணியிழந்தார்கள். இவர்களை சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பொலன்னறுவை மாவட்டத்தில் குடியமர்த்த அரசு திட்டமிட்டது. இந்நடவடிக்கை அம்மாவட்டத்தில் உள்ள சிங்களவர் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியது. சிங்களக் கும்பலகள் அங்கு உருவாகி அங்கு குடியேற வந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கியது.[7]

நெருக்கடிநிலை 56 - நூல்
"Emergency '58 : the story of the Ceylon race riots" என்ற நூல் தார்சி வித்தாச்சி என்ற ஊடகவியலாளரால் இந்தக் கலவரங்கள் பற்றி எழுதப்பட்டது.


இலங்கை இனக்கலவரங்களுக்கு பழகிப்போன நாடுதான். இங்கு தமிழருக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த வன்செயல்கள், அதனைத் தொடர்ந்த கலவரங்கள் பெரும்பாலும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்ட, பலரும் அறிந்த விடயங்கள்.

ஆனால், இலங்கையில் நடந்த முதலாவது வன்செயல் அல்லது கலவரம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது பலரும் அறியாத விடயம்.

முதலாவது இனக்கலவரம்

1915-இல்தான் இலங்கையில் அண்மைய சரித்திரம் அறிந்த முதலாவது இனக்கலவரம் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்தது.

அன்றைய அந்த முதலாவது கலவரத்தின்போது சிங்களவர்களின் கும்பல் ஒன்று கண்டியில்தான் பள்ளிவாசலை தாக்கி, முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை எரித்துள்ளது.

அப்போது இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்தது.

இப்போதும் மீண்டும் கண்டியில் மீண்டும் அப்படியான கலவரம் ஒன்று நடந்தேறியுள்ளது. அதுதான் இப்போதுள்ள ஒற்றுமை.

சுதந்திரத்திற்கு பின் தமிழ்-சிங்கள கலவரம்

படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES
சுதந்திரத்துக்கு பின்னர்தான் இலங்கையில் தமிழ்- சிங்கள கலவரங்கள் நடக்கத் தொடங்கின.

1958, 1977 மற்றும் 1983 கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராக மிக பெரிதாக திட்டமிட்டு நடத்தப்பட்டவையாக கருதப்படுகின்றன.

1983இல் தமிழ் இளைஞர்களும் ஆயுதங்களை கையில் எடுக்க நிலைமை ஓர் உள்நாட்டுப் போராகவே மாறிவிட்டது.

இந்தக் காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் சிங்களவர்கள் ஈடுபட்டது குறைவு.

ஆனால், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டமை உட்பட, கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் இன மோதல்கள் அப்போது நடந்திருக்கின்றன.

உள்நாட்டுப் போருக்கு பின் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

ஆனால், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னரே மீண்டும் முஸ்லிம்கள் மீது ஆங்காங்கு தாக்குதல்கள் நடந்துள்ளன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவனல்ல,காலி மற்றும் களுத்துறை பகுதிகளில் அப்படியான வன்செயல்கள் அவ்வப்போது நடந்து வந்திருக்கின்றன.

பொதுவாக, முஸ்லிம்களின் வணிக முயற்சிகளின் வெற்றி, அரசியலில் அவர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக எண்ணிக்கை அடிப்படையில் உருவாகியிருப்பது, அவர்கள் மீதான தாக்குதல்களுக்கான நேரடிக் காரணங்களாக முஸ்லிம் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் பார்க்கப்படுகின்றன.

1983 கலவரத்தின் போதும், அதற்கு பின்னரான உள்நாட்டுப்போரின் போது முஸ்லிம்கள் பெரும்பான்மையினத்தவரோடு இணைந்து தமிழருக்கு எதிராக செயற்பட்டதாக தமிழ் தரப்பினர் பார்க்கிறார்கள்.

ஆனால், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்கள் மீதே இப்படியான தாக்குதல்களும், இன ரீதியான வெறுப்பு பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இருவகை இன முறுகல்கள்

படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES
குறிப்பாக, இங்குள்ள இனமுறுகல்களை தற்போதைக்கு இரு வகையாக பார்க்கலாம்.

ஒன்று, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிங்கள- முஸ்லிம் முரணாகவும், இரண்டு, கிழக்கு மாகாணத்தில் காணி போன்ற பிரச்சனைகள் காரணமாக முஸ்லிம் - தமிழ் முரணாகவும் அவற்றை பார்க்க முடியும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழரோடு ஒப்பிடுகையில் முஸிம்கள் அரசியல் ரீதியாக ஓரளவு அதிகாரத்தை தம்வசம் வைத்திருப்பதால், அவற்றை பிரயோகித்து தமது நிலங்களை அவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற் குற்றச்சாட்டு தமிழர் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றது.

ஆனால், அம்பாறை நகரில் கடந்த வாரம் உணவில் முஸ்லிம் கடைக்காரர்கள் "ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்தை" கலப்பதாக குற்றஞ்சாட்டி தாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தை சேர்ந்தவர்களாவர்.

இந்தச் சம்பவந்தான் அண்மைய வன்முறை செயல்களில் முதலில் நடந்ததாகும்.

நடந்தது அதிகார துஷ்பிரயோகமா?

அன்றைய தினம் திட்டமிட்ட வகையில் பேருந்தில் வந்த கூட்டம் தமது பள்ளிவாசல் ஒன்று உட்பட பல உடமைகளை தாக்கி சேதமாக்கியதாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அன்றைய தினத்தில் அம்பாறை மாவட்டத்தில் அட்டைப்பள்ளம் என்ற இடத்தில் இந்துக்களின் மயானத்தை முஸ்லிம் ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறி, அதனை தடுக்கச் சென்ற தம்மை முஸ்லிம் போலிஸார் மற்றும் அதிகாரிகள் தடுத்து வைத்ததாக தமிழர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA/AFP/GETTY IMAGES
தமது காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதன் ஒரு கட்டமாக அவர்கள் இதனை பார்க்கிறார்கள்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 23 தமிழர்கள் (பெண்கள் உடபட) போலீஸில் தடுத்து வைக்கப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இவை பெரிதாக ஊடகங்களில் பேசப்படவில்லை. அம்பாறை நகரில் முஸ்லிம்களின் உடமைகள் சிங்களவரால் தாக்கப்பட்டமையே பெரிதாக பேசப்பட்டது.

இதனையடுத்து, இரு தினங்களுக்கு முன்னதாக கண்டி நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மீண்டும் அவர்கள் மீது பெரும்பான்மையின சிங்களவர்களின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

ஒரு சிறிய வாகன விபத்துச் சம்பவத்தை அடுத்து ஒரு சிங்களை நபரை முஸ்லிம்கள் சிலர் தாக்கவே அவர் சில தினங்களின் பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.

அதனையடுத்தே அங்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்த சிங்கள கூட்டம் ஒன்றால் முஸ்லிம்களின் சொத்துக்கள், வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்டுள்ளன.

போலீஸார் தலையிட்டும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு வேளையிலும் தாம் தாக்கப்பட்டதாக முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

மியான்மரை போன்று தம்மீது தாக்குதல் நடத்த வந்த கூட்டத்தில் பௌத்த பிக்குகளும் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். படங்களும் அதனை உறுதி செய்கின்றன.

உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சில அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவசர சட்டத்திற்கு என்ன தேவை?

அது மட்டுமன்றி முன்னதாக நடந்த தாக்குதலில் சிங்கள நபர் மரணமானது குறித்தும் போலீஸார் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும், அவர்கள் அப்படி செய்திருந்தால் இந்த வன்செயல்கள் வெடித்திருக்காது என்றும் பொதுபல சேன என்ற கடும்போக்கு சிங்கள அமைப்பு கூறியுள்ளது.

ஆகவே, போலீஸாருக்கும் மேலாக இராணுவத்தை அழைக்கும் தேவை அரசாங்கத்துக்கு வந்திருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் வந்ததே தற்போதைய நல்லாட்சி அரசு.

இதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்களின் ஆதரவு அதிகம்.

அண்மைய தேர்தலில் அந்தக் கட்சி பின்னடைவை சந்தித்ததை அடுத்து நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது நாட்டின் சட்டம், ஒழுக்குக்கான அமைச்சு பிரதமரின் பொறுப்பில் விட்டு வைக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே அவர் பொறுபேற்ற உடனேயே நடந்திருக்கும் இரு இன மோதல் சம்பவங்கள் அவருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.சட்டம், ஒழுங்கு அமைச்சரின் செயல் திறனின்மையே அமைதியின்மைக்கு காரணம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவிந் தலைவரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இப்படியான நிலைமைகளே எப்படியாவது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கடினமான நடவடிக்கையை எடுக்க அரசாங்கத்தை தூண்டியுள்ளன.

அதன் விளைவாகவே இந்த அவசர நிலை பிரகடனம் உடனடியாக வந்துள்ளது.இந்த அவசர நிலைகூட முதற்கட்டமாக அதிகபட்சம் 10 நாட்களுக்கே அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை செயல்கள் ஒருபுறம் என்றால் இன்று முஸ்லிம்களும் வேறு இடங்களில் அமைதியின்மைக்கு காரணமாகியுள்ளனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தாம் அதிகமாக வாழும் இடங்களில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவற்றில் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.இரு பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்றில் ஒரு தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ளார். அங்கு இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.ஆகவே, உடனடியாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இப்படியான வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டிய பொறுப்பில் அரசாங்கம் இருக்கிறது.