REINCARNATION OF CEYLON BOY
OF KALPANA CHAWLA
இலங்கையில் மறு பிறவி எடுத்துள்ள சிறுவன் கூறும் ஆச்சரியமான விபரங்கள்!! இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சவ்லாவின் மறுபிறவியாக இருக்கலாம் என நம்ப்படுகின்றது
கம்பஹா – மினுவாங்கொடை பகுதியில் தனது முற்பிறவி குறித்த தகவல்களை வெளியிடும் சிறுவன் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பிரபலமாகி வருகிறது. 7 வயதான இந்த சிறுவன் மினுவாங்கொடை – மாராபொல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.இந்த சிறுவனின் கருத்துக்கள் ஆச்சரியமானவை. அவை கற்பனையாக தெரிந்தாலும் அந்த சிறுவன் விண்வெளி பயணம் மற்றும் விண்வெளி ஓடம் மற்றும் சூரியனை கடந்து செல்லும் விதத்தை விபரிக்கின்றார்.அத்துடன் விண்வெளி ஓடம் தீ பிடித்து பாலைவனத்தில் விழுந்தது குறித்தும் விபரிக்கின்றார்.மேலும் வாகனத்தில் தியாகம் செய்துக்கொண்டிருந்ததாகவும் கூறுகின்றார். இதனைவிட ஆச்சரியம் அந்த சிறுவன் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை சரளமாக பேசுகிறார். சிங்களத்தில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கின்றார்.அழிந்து போன டைனோசர் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த விலங்கினத்தின் இனங்கள் பற்றியும் சிறுவன் கூறுகிறார்.
2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கொலம்பியாவின் விண்வெளி ஓடம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பாலைவன பிரதேசத்தில் எரிந்து விழுந்தது.இந்த சிறுவனும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சவ்லாவின் மறுபிறவியாக இருக்கலாம் என இந்த துறை சம்பந்தமான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பிற்காலத்தில் இந்த சிறுவனிடம் தற்போதுள்ள நினைவுகள் மறந்து போகக் கூடும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment