Thursday 18 February 2021

VASANTHA MALIGAI -DIALOGUE SIVAJI GANESAN

 

VASANTHA MALIGAI -

DIALOGUE SIVAJI GANESAN




நாம் எவ்வளவோ வசனங்கள் ரசித்திருப்போம். ஆனால் !

இந்த காதல் காவிய கவிதை நடைக்கு இணையேது ! ...


(இந்த வசனம் படமாக்குவதற்கு பத்து நிமிடம் இருக்கும் போது 

பாலமுருகனால் எழுதப்பட்டது 

சிவாஜிக்கு மனப்பாடம் செய்ய ஐந்தே நிமிடம் )

ஆனந்த்: லதா… இந்த இதயம் இருக்கே அதை ஒருத்தருக்கு கொடுக்காத வரைக்கும் விசாலமாயிருக்கும். கொடுத்ததுக்கு அப்புறம் ரொம்ப சுருங்கிப் போய்விடும். அடுத்தவங்களுக்கு கொடுக்க சம்மதிக்காது.

லதா: அப்படி என்றால் உங்கள் இதயம்…!

ஆனந்த்: அதை ஒரு தேவதைக்கு அர்ப்பணித்து விட்டேன். அந்த அன்பு தெய்வம் குடியிருக்கும் கோயிலை நீ பார்க்க வர்றீயா?

லதா: பார்க்கிறேன்..

ஆனந்த்: வா.. பார்.. பார் 

என் காதல் தேவதைக்கு நான் கட்டியிருக்கும் இந்த ஆலயத்தை பார்! 

உள்ளத்திலே படர்ந்திருக்கும் முல்லைக் கொடிக்கு நான் அமைத்திருக்கும் இந்த பந்தலைப்பார்! 

என் இதய சாம்ராஜ்ஜிய தலைவியின் ஆட்சி ஆரம்பமாகப்போகும் அன்பு மாளிகையைப் பார்! 

என் கண்களைத் திறந்து விட்ட காதல் தெய்வம் காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்த மண்டபத்தை பார்! 

வானத்து நிலா நீராட இறைவன் மேகத்தைப் படைத்தான். என் வாழ்வின் நிலா நீராட இந்த பொய்கையை படைத்தேன். 


இது இறந்துபோன ராணிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல! 

உயிரோடு இருக்கும் என் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த மாளிகை! 

இது சமாதி அல்ல! 

சன்னிதி! ..

ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால் ஆகாயத்திலே மின்னிக் கொண்டிருக்கும் அத்தனை நட்சத்திரங்களையும் எடுத்து வந்து தோரணமாக கட்டி தொங்கவிட்டு இருப்பேன். 


வானத்து நிலவைப் பறித்து வந்து இந்த வசந்த மாளிகைக்கு வண்ண விளக்காக அமைத்திருப்பேன்! 

என்ன செய்வது! 

எனக்கு அந்த சக்தி இல்லையே..! சக்தி இல்லையே…! 

என்ன பார்க்கிறாய்…!


லதா: இந்த அளவிற்கு உங்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அந்த பாக்கியவதி எங்கே என்று பார்க்கிறேன்.

ஆனந்த் : 

அவளைப் பார்க்க வேண்டுமா… 

வா என்னோடு… 

உள்ளே சென்று பார்! …

அங்கு தான் என் இதயம் இருக்கிறது. 

அவளும் இருக்கிறாள்..! 

நீ திரும்புகின்ற திசையெல்லாம் அவள் திருவுருவம் தான் காட்சியளிக்கும். 


        காதலிக்கத் தெரியாதவனையும் காதல் செய்ய வைக்கும் பாலமுருகனின் வசனங்கள் நிறைந்தகாட்சி இது!

பகிர்ந்த பதிவு 

💥💥

இதயக்கனி விஜயன்

No comments:

Post a Comment