Thursday 25 February 2021

A.VINCENT CINEMATOGRAPHER ,DIRECTOR BORN 1928 JUNE 14 - 2015 FEBRUARY 25

 

 A.VINCENT CINEMATOGRAPHER ,DIRECTOR 

BORN 1928 JUNE 14 - 2015 FEBRUARY 25



அலோய்சியசு வின்சென்ட் (Aloysius Vincent, 14 சூன் 1928 – 25 பெப்ரவரி 2015) 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிறீதருடன் பல சிறப்பானப் படங்களில் பணி புரிந்துள்ளார். 1974ஆம் ஆண்டில் வெளியான பிரேம்நகர் என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவரது கடைசி மலையாளத் திரைப்படமாக 1985இல் வெளியான முப்பரிமாணத் திரைப்படமான பவுர்ணமி இராவில் அமைந்தது.[1] 2003ஆம் ஆண்டில் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் (ISC) இவருக்கு கே. கே. மகசன், வி.கே.மூர்த்தியுடன் கௌரவ அங்கத்துவம் வழங்கியது.[2]


உடல் நலக்குறைவால் 25 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[3]


ஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள்

அமரதீபம் (1957)

உத்தம புத்திரன் (1958)

கல்யாணப் பரிசு (1959)

விடிவெள்ளி (1960)

தேன் நிலவு (1961)

போலீஸ்காரன் மகள் (1962)

நெஞ்சம் மறப்பதில்லை (1963)

காதலிக்க நேரமில்லை (1964)

எங்க வீட்டுப் பிள்ளை (1965)

அடிமைப்பெண் (1969)

பிரேம் நகர் (தெலுங்கு) (1971)

வசந்த மாளிகை (1972)

கௌரவம் (1973)

அன்னமய்யா (தெலுங்கு) (1997)

இயக்கிய திரைப்படங்கள்


துலாபாரம் (1969)

நாம் பிறந்த மண் (1977)

Kamal-Amrohi-Josef-Wirsching-Meena-Kumari-
and-a-few-of-Josefs-assistants-on-an-outdoor-shoot
-in-Kashmir-for-the-filming of-Dil-apna-aur--Parai-
which-was-released-in-1959-min


மூத்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ வின்சென்ட் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

தமிழில் யார் பையன், உத்தம புத்திரன், கல்யாணப் பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட்.

அமரர் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண் போன்ற படங்களுக்கும், சிவாஜி கணேசன் நடித்த கவுரவம், வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏராளமான தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள வின்சென்ட், 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.இரு வீடுகள், எங்களுக்கும் காலம் வரும், நாம் பிறந்த மண், திருமாங்கல்யம் போன்றவை இவர் இயக்கிய தமிழ்ப் படங்களில் சில. மலையாளத்தில் பல படங்கள் இயக்கியுள்ளார்.2003-ம் ஆண்டு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இவருக்கு கவுரவ உறுப்பினர் பதவி அளித்தது. பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஜெயனன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட் இவரது மகன்களாகும்.


உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் இன்று மரணமடைந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வின்சென்டின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1997-ம் ஆண்டு அன்னமய்யா தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு, ஓய்வை அறிவித்தார்.


No comments:

Post a Comment