P.S.SEETHA LAKSHMI ,TALENTED ACTRESS
DIED 2019 FEBRUARY 28
எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீரை எல்லோருக்கும் தெரியும். எம்.ஆர்.ஆர் வாசு, ராதாரவி இருவரும் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பாத்திரத்தை நடித்து மேடையேற்றியிருக்கிறார்கள்.
ரத்தக்கண்ணீர் நாடகம் முழுக்க முழுக்க பெண்கள் நடித்து மேடையேற்றப்பட்டிருக்கிறது.
ராதா நடித்த வேடத்தில் பி.எஸ் சீதாலட்சுமி நடித்திருந்திருக்கிறார். அவர் நடிப்பை பார்த்த ராதா பிரமித்துப்போய் சீதாலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார்
“ சீதா, என்னையே நான் இந்த நாடகத்தில் பார்த்தேன்.”
எம்.ஜி.ஆர் நாடகங்களிலும் நடித்தவர். சிவாஜி நாடகங்களிலும் நடித்தவர்.
வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் சீதாலட்சுமி “வெள்ளையம்மா” ரோலில் நடித்தவர். படத்தில் பத்மினி வெள்ளையம்மாவாக நடித்தார்.
'வெள்ளையம்மா, வந்துதுடியம்மா ஒன் காளைக்கு ஆபத்து.'
உதயசூரியன் நாடகத்தில் மு.கருணாநிதியுடன் நடித்திருக்கிறார்.
அவர் பழம்பெரும் நடிகை பி.எஸ். சீதாலட்சுமியென்றாலும் 1960களில் தான் மிகவும் பிரபலம்.
அப்போது சுந்தரிபாய், சி.கே.சரஸ்வதி போன்றவர்கள் போல வில்லி நடிப்பில் தனித்துவம் காட்டியவர். அவருடைய நடிப்பு காரணமாக ‘சிடு மூஞ்சி சீதாலட்சுமி’ என்று இவரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கத்துவார்கள். வெடு, வெடு என்று வசனம் பேசுவார்.
பாசமலரில் பி.எஸ்.ஞானத்தை பார்த்தவுடன் பெண்கள் திட்டுவார்கள். அது போல பி.எஸ்.சீதாலட்சுமியும் சினிமா தியேட்டரில் படம் ஓடும்போது திட்டு வாங்குவார். சீதாலட்சுமி சாயல் எஸ்.என்.லட்சுமிக்கு சகோதரியா என்று பலரை குழம்ப வைத்திருக்கிறது.
நவராத்திரியில் சாவித்திரி சந்திக்கும் பல பாத்திரங்களில் சீதாலட்சுமியும் ஒருவர்.
எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாருக்கு அக்காவாக வருபவர் சீதாலட்சுமி தான். அதே வருடம் ’அன்புக்கரங்கள்’ படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக படு சீரியஸ் ரோல் செய்தார். “காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன். மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்… அம்மா நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்.” – உருக்கமான பாடல் காட்சியில் சிவாஜி நெகிழ்த்துவார்.
பணம் படைத்தவன் படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு மனைவியாக, எம்.ஜி.ஆரின் அம்மாவாக சீதாலட்சுமி.
இவருடைய கணவர் பிரபல எடிட்டர் கே.பெருமாள். இயக்குனர் ஏ.காசிலிங்கத்தை குருவாக சொல்வார்.
எம்.ஜி.ஆர் படங்களில் எடிட்டராக இருந்தவர் கே.பெருமாள். நாடோடி மன்னனுக்கே இவர் தான் எடிட்டர்.
சீதாலட்சுமியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஒரு ஆலமரம். டி.ஆர்.ராஜகுமாரி போல சொந்தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். தம்பி, தங்கை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்.
இவருடைய தங்கை மகள் டான்ஸ் மாஸ்டர் ராதிகா. இவர் மூத்த சகோதரர் டான்ஸர் கார்த்திக். சீதாலட்சுமியை அம்மாவாக பார்த்தவர்கள். ஹேர் டிரஸ்ஸர் புஷ்பா இவருடைய இன்னொரு தங்கை மகள்.
மிஸ்கினின் முகமூடியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். மரியான், 555, சிகரம் தொடு, ரோமியோ ஜூலியட், தாரை தப்பட்டை, விஷாலின் கத்திச்சண்டை, விஜய் சேதுபதியின் தர்மதுரை, உதயநிதியின் கண்ணே கலைமானே போன்ற படங்களிலும் டான்ஸ் மாஸ்டர் ராதிகா தான். ராதிகாவின் கணவர் இளையராஜா இசைக்குழுவில் இருப்பவர். வயலினிஸ்ட் பழனியப்பன்.
எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர். இவரது சொந்த ஊர் இராமநாதபுரம். 1951-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சிவாஜிகணேசன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.ரவீந்தர் எழுதிய “அட்வகேட் அமரன்” மற்றும் “இன்பக் கனவு” நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர்.
படப்பிடிப்பு நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர் ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.
கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார்.
நாடகமே உலகம், அன்னமிட்டக்கை, திருமலை தென்குமரி, உரிமைக்குரல், தங்கக்கோபுரம், நீதிபதி, திலகம், நான் யார் தெரியுமா, சத்திய சுந்தரம், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் குணச்சித்திரம்,வில்லி,நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர்.
பி.எஸ்.சீதாலக்ஷ்மி குறித்து http://nagoori.wordpress.com/ வலைத்தளத்தில் காணக்கிடைக்கப் பெற்ற செய்தி. நன்றி:- திரு.அப்துல் கையூம்.
எம்.ஜி.ஆர் நாடக மன்ற நாடகங்களில் நடித்த நடிகைளில் இன்னொரு பிரபலம் பி.எஸ்.சீதாலக்ஷ்மி. அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.. எட்டு வயது முதலே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்.
எம்.ஜி.ஆர். நாடக மன்றம் தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 1951-ஆம் ஆண்டு தன் பெற்றோருடன் ராமநாதபுரத்திலிருந்து வந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக சிறுவயதிலிருந்தே முத்துச்சாமி நாடாரின் நாடகக்குழு போன்றவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருந்தது.
சிவாஜி, கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், இவர்களோடு பற்பல நாடகங்களில் நடித்தது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.
ரவீந்தர் எழுதிய “அட்வகேட் அமரன்” மற்றும் “இன்பக் கனவு” நாடகங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்தவர் இவர். இவருடைய அலட்சியமான நடிப்பும், எடுப்பான குரலும் துடிப்பான பேச்சும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. லாயிட்ஸ் ரோட்டில்தான் பெரும்பான்மையான நாடக ஒத்திகைகள் நடைபெறும்.
சரியான நேரத்தில் ஒத்திகைக்கு வரவேண்டும். என்பதில் கண்டிப்பாக இருந்தார் எம்.ஜி.ஆர்.ஆர். யாராவது தாமதமாக வந்தால் பள்ளி வாத்தியார் போன்ற கண்டிப்புடன் கதவைச் சாத்தி விட்டு வெளியே கால்கடுக்க நிற்க வைத்து விடுவார். இதற்கு பயந்தே நாடகக் கலைஞர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். நேரம் தவறாமல் வருவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் சீதாலக்ஷ்மி.
தான் பேச வேண்டிய வசனத்தை முன்கூட்டியே ரவீந்தரிடம் “ஸ்கிரிப்ட்” கேட்டு வாங்கிக்கொண்டுச் சென்று அதற்கேற்றவாறு மனனம் செய்துக் கொண்டு வந்து பிழையின்றி அவர் ஒப்பிப்பார். வசனங்களை, உணர்ச்சிகளைக் கொட்டி ஏற்ற இறக்கத்துடன் எப்படி பேசவேண்டும் என்று பயிற்றுவிப்பதில் ரவீந்தருக்கு நிகர் அவரே. மற்ற நேரங்களில் ‘பேசாமடந்தை’யாக, ‘வாயில்லா பூச்சி’யாக அதிகம் பேசாத நபராக இருக்கின்ற இவர் ‘தொழில்’ என்று ஈடுபடும்போது எங்கிருந்து அவருக்கு ஓர் உற்சாகம், உத்வேகம், கலைஆற்றல் பீறிட்டு வருகிறதோ தெரியாது. பாத்திரத்தில் அப்படியே லயித்து ஒன்றிப் போய்விடுவார்.
“அட்வகேட் அமரன்” நாடகத்தில் ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெறும். தாயார் வேடத்தில் நடிக்கும் பி.ஸ்.சீதாலக்ஷ்மிக்கு எம்.ஜி.ஆர்தான் தன் உண்மையான மகன் என்று தெரிய வருகிறது. துக்கம் தொண்டையை அடைக்க அவரை கட்டிப்பிடித்து அழுவார். இவருடைய அழுகைக்கு ஈடு கொடுத்து எம்.ஜி.ஆரும் அதைவிட உணர்ச்சியைக் கொட்டி அழுவார். மேடையில் “ஜுகல் பந்தி” நடப்பது போலிருக்கும். நடந்துக் கொண்டிருப்பது நாடகம் என்பதையும் மறந்து ரசிகர்களும் விசும்பலுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள்.
“எல்லோரையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பவரல்லவா நீங்கள்” என்று மறைமுகமாக சீதாலக்ஷ்மியின் நடிப்புத்திறனைப் பாராட்டுவார் பழம்பெரும் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே.தேவர்.
எம்.ஜி.ஆருக்கு அழவேத் தெரியாது என்று பொதுவாகவே ஓர் அபிப்பிராயம் நிலவுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல.
நிருபரொருவர் எம்.ஜி.ஆரிடம் “நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையே உங்கள் அனுபவத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்?” என்று கேட்டபோது “எனக்கு அழுவதென்றால் மிகவும் இஷ்டம். நாடகத்தில் கிளிசரீன் எல்லாம் பயன்படுத்த மாட்டேன். சினிமாவிலும் கிளிசரீன் உபயோகப்படுத்தவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஒரு சில படங்களில் நான் அழுது படப்பிடிப்பு செய்த காட்சிகளில் திரையில் அழுவது போலவே தெரியாது. அதிகப்படியான விளக்கின் சூட்டில் கன்னத்தில் விழுமுன்னரே கண்ணீர் உலர்ந்து விடும். அதற்குப் பிறகுதான் நான் கிளிசரீன் போடவே ஆரம்பித்தேன்” என்று பேட்டி கொடுத்தார்.
சீதாலக்ஷ்மி நாடகங்களில் சின்னச் சின்ன பாத்திரங்களே ஏற்று நடித்தார். நாடகத்தின் மூலம் அவருக்கு கிடைக்கின்ற வருமானம் மிகச் சொற்பமான தொகையாகவே இருந்தது. சிவாஜி நாடக மன்றம் நடத்திய “வேங்கையின் மைந்தன்”, “தேன்கூடு”, “நீதியின் நிழல்”, “களம் கண்ட கவிஞன்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “ஜஹாங்கீர்” போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதி எழுதிய “உதயசூரியன்” நாடகத்தில் காவல்துறையினரை மையமாக வைத்துப் இவர் பாடும் தாலாட்டுப் பாடல் காட்சி பலமுறை தடை செய்யப்பட்டிருக்கிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் ராஜகோபால் போன்றவர்களுடன் நகைச்சுவை ஜோடியாக நடித்து மிகுந்த பாராட்டுகள் பெற்றார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியுடன் இணைந்து அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி”, “ஓர் இரவு”, மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய “துளிவிஷம்”, போன்ற நாடகங்களில் உள்நாட்டிலும் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று நடித்தும் பிரபலமானார்.
எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்த பெருமாள் என்பவரை 1956-ஆம் ஆண்டு திருமணம் புரிந்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் எத்தனையோ படங்களில் அம்மாவாக, சகோதரியாக, நாத்தனாராக, வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற அற்புதமான கலைஞர் இவர்.
SEETHALAKSHMI1
By S Subhakeerthana
CHENNAI: Every person has a story to tell, and when it comes to the yesteryear actress P S Seethalakshmi, it’s one of poverty and hopelessness. The veteran actor who had starred as mother or grandmother in over 100 films during the 1960s and 1970s is scrambling to make ends meet. The ailing 86-year-old had shared screen space with legends like M G Ramachandran, Chief Minister J Jayalalithaa and Sivaji Ganesan.alls of her home in Saligramam are covered with black-and-white photographs from her old films. Medicines and syrup bottles lie on the table, and trash is scattered everywhere. “TV channels regularly telecast the movies I had been a part of. I can barely recollect things these days, but I remember a few of my dialogues. Please don’t think I watch serials; I hate watching them,” she laughs.
“I looked fit and beautiful in Enga Veetu Pillai (1965), Aandavan Kattalai (1964), Anbu Karangal (1965), Petralthaan Pillaiya (1966) etc. But when I look at my reflection, I feel sorry for myself. It has been 7-8 years since I acted even in serials. I have blood pressure, high diabetes and can’t move on my own. I never thought that I’d become like this. It’s a curse to be busy once and now be home doing nothing,” she tears up.Recalling her association with Jayalalithaa, she tells us, “We have worked together. Those were golden days. Amma knows me pretty well and she has immense love towards me. That time, I was residing parallel to her house near Poes Garden. Many times, she has served me food. I used to visit her place often. She’s Dhairiyalakshmi and I still remember how she walks in a brisk way like an angel! I like the way she is. She would be unfazed and cope with any given situation. I think we should learn that from her. Somehow, we lost touch. And I think it’s my misfortune. Before I die, I need to see Amma. That’s my only wish!
No comments:
Post a Comment