Sunday 21 February 2021

KALLAPART NATARAJAN DIED 1996 MARCH 27 ON TV INTERVIEW

 

KALLAPART NATARAJAN DIED 

1996 MARCH 27 ON TV INTERVIEW




கள்ளபார்ட் நடராஜன்

பதிவு எண் - 1

சிவாஜிகணேசன் அறிமுகமான ‘#பராசக்தி’ படத்தில் அறிமுகமானவர் ‘கள்ளபார்ட்’ நடராஜன். சில படங்களில் கதாநாயகனாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர்.

மருமகள், சபாஷ் மீனா, கல்லும் கனியாகும், கண் திறந்தது, வண்ணக்கிளி, ரிக்ஷாக்காரன், தில்லானாமோகனாம்பாள்,கெட்டிக்காரன், தெய்வப்பிறவி, சக்கரவர்த்தித் திருமகள், குங்குமம், மகிழம்பூ, சிங்கப்பூர் சீமான் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த தமிழ்த்திரையுலகின் பிரபல வில்லன் நடிகர். #நடனத்திலும் கைதேர்ந்தவர்.

‘சதாரம்’ நாடகத்தில் திருடன் வேடத்தில் அபாரமாக நடித்து, இவர் தந்தை ‘கள்ளபார்ட்’ ராமலிங்கம் ஆனார். அதே போல் கள்ளபார்ட் வேடத்தில் நடராஜனும் பிரமாதமாக நடித்து ‘கள்ளபார்ட்’ நடராஜன் ஆனார். நடராஜனுக்கு நல்ல குரல் வளம் உண்டு. எனவே, ‘டப்பிங்’ படங்களில் கதாநாயகர்களுக்கு குரல் கொடுத்தார். என்.டி.ராமராவ் தமிழ்ப்படங்களில் நடித்தபோதுமë, அவருடைய தெலுங்குப்படங்கள் தமிழில் `டப்’ செய்யப்பட்டபோதும், அவருக்கு குரல் கொடுத்தவர் இவரே.

டப்பிங்’ கலைஞராக இருந்த நடராஜன், ‘பராசக்தி’ படத்தின் மூலம் திரை உலகில் நுழைந்தார். ‘பராசக்தி’ படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் மோதும் அகதி முகாம் அதிகாரியாக நடித்தார்.

நவராத்திரி படத்தில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் பிரம்மாதப்படுத்திய மேடைக்கூத்தில் கள்ளப்பார்ட் வேடத்தை அமைத்துக் கொடுத்தவர் இவர் தான்.

#வண்ணக்கிளி, #குமுதம் போன்ற படங்களில் இவரது நடனத்தின் சிறப்பினைக் காணலாம்.

அந்த “சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு” பாடலில் இவர் ஆட்டம் பிரபல்யம். அந்த பாடலின் இசையை சமீபத்திய கால “அவன் இவன்’ படத்தில் ஆர்யா வும் அவர் தாய் ஜெயபிரபாவும் போடும் ஆட்டம் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

குமுதம்” படத்தின் மாமா..மாமா..ஏம்மா.. இன்று நடன கலைஞர்களால் ரசிகர்களால் ரசித்து பார்க்க படுகிறது.

கெட்டிக்காரன், கண் திறந்தது, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி வில்லனாக அசத்திய படங்களில் சில.. பின்னர் ‘பெரியகோவில்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். ‘நாகமலை அழகி’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படத்தில் எம்.ஆர்.ராதா வில்லனாக நடித்தார். பிறகு, வில்லன், குணச்சித்திர வேடம் என்று பல படங்களில் நடித்தார். ‘காட்டுமல்லி’, ‘சபாஷ்மíனா’, ‘கூண்டுக்கிளி’, ‘சக்ரவர்த்தித் திருமகள்’, ‘மதுரை வீரன்’, ‘ராஜாராணி’, ‘கண்காட்சி’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘ஒளிவிளக்கு’, ‘ரிக்ஷாக்காரன்’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.

. தற்கால நட்சத்திரங்களுடனும் நடராஜன் நடித்துள்ளார். அஜித் நடித்த ‘அமராவதி’, விஜயகாந்த் நடித்த ‘பெரிய மருது’, ‘தமிழச்சி’ ஆகிய படங்களில் நடராஜன் இடம் பெற்றார்.

பழம்பெரும் நடிகர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தருவதில் முன்னோடியான கமல் ஹாசன் தன் தேவர் மகன்” படத்தில் ரேவதியின் தந்தையாக ஓர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்து இருந்தார். இவர் நடிப்பு பாராட்டப்பட்டது.

தனியார் தொலைக்காட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்கும் முன்பு சென்னைத் தொலைக்காட்சித் தொடர்களிலும் பலவற்றில் நடித்துள்ளார்.

கே.பாலசந்தரின் ‘ரகுவம்சம்’ உள்பட 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதை 1990-ல் பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்கம், 1991-ல் ‘கலைச்செல்வம்’ விருதை வழங்கி கவுரவித்தது.

1996-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி, தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. தன் அனுபவங்களை விளக்கிக்கொண்டிருந்த `கள்ளபார்ட்’ நடராஜன், பல்வேறு நடிப்புகளை நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று மயங்கி விழுந்தார். சுற்றிலும் இருந்தவர்கள் பதறிக்கொண்டு ஓடிப்போய் பார்த்தபோது, நடராஜன் உடலில் உயிர் இல்லை. இறக்கும் போது அவருக்கு வயது-70.

கடைசி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டிருந்தவர்` கள்ளபார்ட்’ நடராஜன்.நடித்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தைத் தழுவிய ஒரு அற்புத நடிகர்.

இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு நான் ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ் 🙏😍

No comments:

Post a Comment