Monday 22 February 2021

CHARLES DARWIN ,NATURALISTS BORN 1809 FEBRUARY 12 - 1882 APRIL 19

 


CHARLES DARWIN ,NATURALISTS  

BORN 1809 FEBRUARY 12 - 1882 APRIL 19


சார்லஸ் டார்வின்...

எத்தகைய மகத்தான மனிதர்... 



அவருக்கு மிகவும் பிடித்த நூல் பைபிள்... அவரை கிறிஸ்துவ மத போதகராக ஆக்க வேண்டும் என்று அவருடைய தந்தையும் கொஞ்சம் முயன்றிருக்கிறார்.


நம்பிக்கை என்பது வேறு...

உண்மை என்பது வேறு...


நம்பிக்கைக்கு ஆதாரங்களோ , சான்றுகளோ , ஆய்வக பரிசோதனை முடிவுகளோ எதுவும் தேவையில்லை.


அது இதயத்தின் பாற்பட்டது ; உணர்வுகளோடு தொடர்புடையது.


ஆனால் உண்மை என்பதோ மூளையோடு அறிவோடு சிந்தனையோடு தர்க்கரீதியான காரண காரியத்தோடு கூடியது.


நம்பிக்கையில் கேள்விகளுக்கு இடமேயில்லை... கேள்விகள் வந்தாலே அது முழுமையான நம்பிக்கை ஆகாது.


ஆனால் பகுத்தறிவில் கேள்விகளுக்கு மட்டும் தான் இன்றியமையா இடமுண்டு. ஆராய்ந்த பிறகே ஏற்றுக் கொள்வதும், தவறென்று உறுதி செய்யப்பட்டவற்றை தயங்காமல் தூக்கி எறிவதும் பகுத்தறிவின் சிறப்பு.


டார்வினோ தன்னுடைய மதத்தின் மீது நம்பிக்கையுடன் இருந்த போதிலும் பகுத்தறிவுடன் இருந்தார்.





அதனால் தான் ஆதாம்-ஏவாளிடம் இருந்து தான் இந்த உலகம் உருவானது என்ற பைபிளின் கூற்றுக்கு எதிராக தன்னுடைய பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை கூற முடிந்தது.


இவ்வளவு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலத்திலேயே எதையும் சிந்தித்துப் பார்த்து முடிவெடுங்கள் என்று சொன்னால் ஏராளமான எதிர்ப்பு கிளம்புகிறது.


அன்றைய காலகட்டத்தில் டார்வின் எவ்வளவு கடுமையான எதிர்ப்புகளை... ஆட்சியாளர்களின் எதிர்ப்புகளை... கிருஸ்துவ திருச்சபையின் எதிர்ப்புகளை எதிர் கொண்டிருப்பார் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்...


"வலிமையுள்ளதே  வாழும்" என்று அவர் கூறவில்லை. 

"தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்" என்பது தான் அவருடைய சித்தாந்தம்.


ஒரே காலகட்டத்தில் தோன்றியிருந்தாலும் வலிமையான டைனோசர்கள் இன்று இவ்வுலகில் இல்லை ; ஆயினும் கரப்பான்பூச்சிகள் வாழ்ந்து கொண்டுள்ளன.


"குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்று சார்லஸ் டார்வின் கூறியதாக பரவலாகக் கூறப்படுகிறது.


ஆனால் அவர் அவ்வாறு கூறவில்லை. மனிதனும், குரங்கும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான ஓர் உயிரினத்தில் இருந்து கிளைத்து பிரிந்து வந்திருக்கலாம் என்பதே அவருடைய கருத்து. 


இயற்கை தன்னுடன் இயைந்து போவதை மட்டுமே தக்கவைத்துக் கொள்கிறது. எனவே உலக உயிர்கள் இயற்கைக்கு ஏற்றவாறு தங்களைத் தக்கவைத்துக் கொள்ள காலந்தோறும் தேவையான மாற்றங்களைப் பெற்று வருகின்றன.


எதிலும் இடத்திற்கும், நேரத்திற்கும், சூழலுக்கும் ஏற்றவாறு மாறுதல் பெறுபவை மகிழ்ச்சியாக வாழும்.


மாற முடியாதவை மருகி மயங்கும்; ஏங்கித் தவிக்கும்; செத்தும் போகும். 


The origin of species என்ற அவருடைய புகழ்பெற்ற நூல் அறிவியல் உலகின் பல்வேறு புதிய வாசல்களுக்குத் திறவுகோலாக அமைந்திருந்தது.


சார்லஸ் டார்வின் உலகோரால் என்றும் நினைத்துப் போற்றப்பட வேண்டிய பேரறிஞர்.


இன்று பிப்ரவரி 12 அவருடைய பிறந்தநாள்...

No comments:

Post a Comment