Friday 19 February 2021

TYPIST GOPU -MGR

 


டைப்பிஸ்ட் கோபு!!- எம்.ஜி.ஆர்

காசே கடவுள்!!

---------------------------


எம்.ஜி.ஆர் பற்றிய  இந்த நிகழ்வை எவ்வளவு பேர்கள் அறிந்திருப்பீர்கள் என்பது நமக்குத் தெரியாது!

 நம் கடன் பதிவு செய்து கிடப்பதே?

டைப்பிஸ்ட் கோபு!!

அந்த கால சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர்!

அதே கண்கள்,,காசே தான் கடவுளடா போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!!

சிவாஜி,,ஜெய்சங்கர்,,முத்துராமன்--இப்படி அந்த கால நாயகர்களுடன்  நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர்,,எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருடன் நடித்ததாகத் தெரியவில்லை!!

1978!!


வசந்த நாட்களாக தமிழக மக்களுக்கு புலர்ந்தது-

அசந்த நாட்களாக ஆகிறது டைப்பிஸ்ட் கோபுவுக்கு??

அவரது அன்பு மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன்?

இவர் ஒன்றும் பெரிய ஹீரோவாக ஜொலிக்கவில்லையே??

ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்?

வழக்கம் போல் தாம் சார்ந்த நடிகர்கள் அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று,,காலிங்-பெல்லை அழுத்தியும்-சாரி கோபு--

நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு,, கடவுள் உன்னைக் கை விட மாட்டார்--

என்ன பண்ணறது கோபு? விதி வலியது??

இதில் சிவாஜி மட்டும்--

நீ எப்படியாவது பையன் ஆப்பரேஷனை முடிச்சுடு. நான் உனக்கு  ரெண்டு படங்களுக்கு சிபாரிசு பண்ணறேன்??

ஆக தத்துவங்களும் ஆறுதல்களும் உபதேசங்களும் வந்ததே தவிர --

உதவி??--ம்ஹூம்!!

எவரிடத்திலும் கிடைக்காது இடிந்து போன கோபுவின் காதில் தேனை ஊற்றுகிறார் டாக்டர் ஹண்டே!

தோட்டத்துக்குப் போய் சின்னவரைப் பாரு!!

குத்தும் குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துக்குப் போன கோபு,,காத்திருந்து--காத்திருந்து--

வள்ளல் முகம் காண்கிறார். விஷயத்தை சொல்கிறார்!

டைப்பிஸ்ட் கோபுவுக்கு எம்.ஜி.ஆர் தந்ததோ-

ஷார்ட் ஹாண்ட் தனமான பதில்??

நான் பாத்துக்கறேன்??

வேகமான,,அதே சமயம்-சுருக்கமான பதில்?

மறு நாளைக்கும் மறு நாள் ஆபரேஷன்?

அடுத்த நாளும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோபுவுக்கு ஏமாற்றமே பதில்?

மறு நாள் காலை ஆபரேஷன்?--

மருத்துவர்களால் மகனின் இதயத்துக்கு என்றால்-இன்றே ஆபரேஷன்?

கொந்தளிக்கும் கோபுவின் இதயத்துக்குக் காலம் செய்கிறது?

எல்லா நம்பிக்கையும் அற்று நைந்து போய் மருத்துவமனை சென்ற கோபுவுக்கு  மாயாஜாலம் காத்திருக்கிறது?

ஆஸ்பத்திரி டீன்,,அதாவது தலைமை மருத்துவர் கோபுவை அழைக்கிறார்--

மகனுக்குப் பால் ஊற்ற வேண்டியது தானா என்று இடிந்து போன கோபுவின்--

இதயத்துக்குப்  பால் வார்க்கிறார் மருத்துவர்?

ஆபரேஷனுக்கான மொத்த பணத்தையும் எம்.ஜி.ஆர் கட்டிட்டார்??

மறு நாள் அறுவை சிகிச்சை பதினோரு மணிக்கு!

ஒன்பது மணிக்கு டாக்டர் ஹண்டேயின் விஜயம்!

தேவையான அறிவுறுத்தல்களை டீனிடம் சொல்லி விட்டுத் திரும்பும் ஹண்டே,,

கோபுவின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சொல்கிறார்!

சின்னவர் உன்னிடம் கொடுக்கச் சொன்னார்!

உள்ளேப் பார்த்தால்--பதினைந்தாயிரம் பணம்?

பணம் கட்டிட்டாங்க சார் எம்.ஜி.ஆர் ஆஃபீஸிலிருந்து-சொன்ன கோபுவிற்கு பதில் சொல்கிறார் ஹண்டே--இது இதர மருத்துவ செலவுகளுக்கு???

சரி!! 

எம்.ஜி.ஆர் உதவியதைக் கொஞ்சம் பார்ப்போமா?

முதல்வருக்கிருந்த பலதரப்பட்ட அலுவல்களில் பிஸியாக இருந்த எம்.ஜி.ஆர்,,வெளியே கிளம்ப ஆயத்தமாகி,,மனைவி ஜானகி அம்மையாரிடம் விடை பெறும்போது --

ஜானகி அம்மா டெக்கில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம்?

காசேதான் கடவுளடா??

உடனே எம்.ஜி.ஆருக்கு கோபு தான் நினைவுக்கு வருகிறார்--

மின் அதிர்ச்சியை மேனிக்குள் படர விட்ட வண்ணம் ஜானகியிடம் சொல்கிறார்--

ஜானு,,நாளைக்கு கோபுவோட மகனுக்கு ஆபரேஷன்!

தாம் கலந்து கொள்ள இருந்த அரசு விழாவையும் மறந்துவிட்டு அரை மணியில் அவர் செய்திருக்கிறார் அத்தனை ஏற்பாடுகளையும்!!

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்

கீதையிலே கண்ணன்!!

கீதையில் கண்ணன் சொன்னதைத் தன்

பாதை எங்கும் பரப்பியவன் ராமச்சந்திரன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும். இல்லையா அருமைகளே???


No comments:

Post a Comment