KIRUBANANDA VARIYAAR SWAMIGAL EXPLANATIONS
19 ஆவது நூற்றாண்டு, பக்திக்கு எதிரான பிரச்சாரங்கள் நாடு தழுவியதாக இருந்த காலம். தூய பக்தியை, மூட நம்பிக்கை எனத் தூற்றி... தெரு முனை பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த நேரம்.
அந்த இருளை அகற்றி... தெரு முனைகளில், பொது வீதிகளில், பொது ஜனங்களுக்கு மத்தியில், 'பக்தியின் ஒளியை', வெகு ஜனங்களுக்கு மத்தியில், மிகுந்த தைர்யத்துடன் பரவவிட்ட, உன்னத அறநெறியாளர் 'வாரியார் சுவாமிகள்'.
வேத, இதிகாச, புராணங்கள் மட்டுமின்றி... வெகு ஜன மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம், 'இறைவனை', அவர்களின் இதயத்தில் குடிகொள்ள வைத்த, 'ஆன்ம சிந்தனையாளர்'. வெகு ஜன மக்களின் சந்தேகங்களை, அந்த மேடைகளிலேயே தீர்த்து வைத்த 'ஞான வள்ளல்'.
ஒரு முறை, சுவாமிகளின் உபன்யாஸத்தின் போது, 'எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்குத் தனியாக கோவில்கள் எதற்கு... ? அங்கு மட்டும் எப்படி இறைவனின் சக்தி மிகுந்து இருக்கும்... ?' என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு சுவாமிகள், 'எல்லா இடங்களிலும் சூரிய பகவானின் கதிர்கள் விரவியிருந்தாலும், அதை ஒரு பூதக் கண்ணாடி வழியாக, காகிதத்தில் குவிக்கும் போது, அந்தக் காகிதம் சூடாகித் தீப்பற்றி எரிந்து விடுகிறதல்லவா ! அது போல, எல்லா இடத்திலும் விரவியிருக்கும் இறைவனின் பேரருள் கருணை, அவர் உறைந்திருக்கும் கோவில்களில் குவிந்திருக்கிறது. அங்கு செல்லும் போது, நமது துன்பங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிப் போகின்றன !' என்றார்.
ஆன்மீகத்தின் மிது சூழவிருந்த அந்த இருளை அகற்றி... எங்கும் ஆன்மீகத்தின் ஒளியை பரப்பியதில்... வாரியார் சுவாமிகளின் பங்கு அளப்பரியது.
ஓம் சரவணபவ !
No comments:
Post a Comment