EASTER CELEBRATIONS
EASTER CELEBRATIONS கல்லறை திறந்தது, காரிருள் மறைந்தது... கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்தார்..! கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமே `ஈஸ்டர்' பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. கி.பி. 29-ம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. இயேசுகிறிஸ்து சாவிலிருந்து விடுதலை பெற்று உயிர்த்தெழுந்த நிகழ்வை கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி பிற கிறிஸ்தவச் சபைகளால் `பாஸ்கா திருவிழிப்பு' என்ற பெயரில் நினைவுகூரும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை அல்லது முன் இரவில் (நள்ளிரவுக்கு முன்) தொடங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்விதமாக இந்த நிகழ்ச்சி அமையும். பாஸ்கா திருவிழிப்பு பாஸ்கா திருவிழிப்பு சடங்கானது ஒளி வழிபாடு, இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் நற்கருணை வழிபாடு என நான்காகப் பிரிக்கப்பட்டு நடைபெறும். இதில் ஒளி வழிபாட்டின்போது ஆலயத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுக் கோவிலின் வெளியே ஓர் இடத்தில் தீ மூட்டப்பட்டு அதில் பாஸ்கா மெழுகுதிரி ஏற்றப்படும...