NEIVELI LIGNITE CORPORATION HISTORY
NEIVELI LIGNITE CORPORATION HISTORY 1934ல் தனது 620 ஏக்கர் நெய்வேலி நிலத்தில் கிணறுகள் வெட்டிய ஜம்புலிங்க முதலியார் நீரில் கரித்துண்டுகள் இருப்பதைக் கண்டு ஆங்கில கலெக்டரிடம் தெரிவிக்கிறார். அவர் ஆங்கில அரசுக்குக் கொண்டு சென்று மேற்கொண்டு ஆய்வு நடத்தச் சொல்கிறார். சென்னையின் பின்னி கம்பெனி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துக் கைவிடுகிறது. பின்னர் அரசின் ஜியோலாஜிகல் சர்வே அமைப்பு களம் இறங்கி, 500 டன் கரி இருப்பதாகக் கூறுகிறது. பின்னர் 1947ல் இந்திய அரசின் சுரங்கப் பொறியாளர் கோஷ் தலைமையிலான குழு சுமார் 2000 மில்லியன் டன் கரி இருப்பதாக உறுதி செய்கிறது. 1951ல் அமெரிக்க அரசு தனது பொறியாளர்களை அனுப்பி ஆய்வு செய்து, பொருளாதார ரீதியாகப் பலன் அளிக்கும் முயற்சியே என்று சான்றளிக்கிறது. ஜம்புலிங்க முதலியார் தனது நிலத்தை அரசுக்கு இலவசமாக அளிக்கிறார். 1953ல் கிருஷ்ண ராவ் என்னும் சென்னை மாகாண தொழில் மந்திரி முதல் சுரங்கம் வெட்டும் பணியைத் துவக்கி வைக்கிறார். 1954ல் பண்டித நேரு நெய்வேலிக்கு விஜயம் செய்கிறார். காமராஜர், வெங்க்கட்ராமன், சி.சுப்பிரமணியன் முதலியோரின் முயற்சியால் நெய்வேலி நிலக்கரி முயற்...