THE FORGOTTEN WOMAN ARRIORS, FREEDOM FIGHTERS OF INDIA DURING 1850`S
THE FORGOTTEN WOMAN ARRIORS, FREEDOM FIGHTERS OF INDIA DURING 1850`S 1857 முதல் சுதந்திரப் போரின் மறைக்கப்பட்ட வீராங்கனைகள் 1857-ம் ஆண்டு, மே 10 அன்று மீரட் நகரின் இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். சிப்பாய்களின் எழுச்சி இந்தியா முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஹிந்து, முஸ்லீம் சிப்பாய்கள் ஒன்றிணைந்து டில்லியை ஆண்ட பகதூர் ஷா வே தங்களது மன்னர் என அறிவித்தனர். இந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் கிழக்கிந்தியக் கம்பெனியால் ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர். முதல் இந்திய சுதந்திரப் போரில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர் என்பது பலருக்கு தெரியாது. ஜான்சிராணி லட்சுமி பாயை தவிர மற்ற பெண் போராளிகளை நாம் அறிந்திருக்க மாட்டோம். 1857 போரில், பங்கேற்ற பெண் போராளிகள் சிலரைப் பற்றிய அறிமுகம் இங்கே இடம் பெறுகிறது. ஜான்சியின் ராணி “லட்சுமி பாய்” ஜான்சி ராணி ஜான்சி ராணி என அழைக்கப்படும் ராணி லட்சுமி பாய், 1828-ம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். 17 வயதில் ஜான்சியி...