SATYARAJ , A PERFECT ACTOR IN INDIAN CINEMA
SATYARAJ , A PERFECT ACTOR IN INDIAN CINEMA ரங்கராஜ் சுப்பையா என்ற இயற்பெயர் கொண்ட சத்தியராஜ் இந்திய திரைப்பட நடிகர் மற்றும் ஊடக நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் வில்லனான பாத்திரங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் முன்னணி பாத்திரங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட படங்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். பிறப்பு மற்றும் இளமை பருவம்[மூலத்தைத் தொகு] சத்யராஜ் என்ற நடிகரின் இயற் பெயர் ரங்கராஜ் .இவர் சுப்பையா -நாதாம்பாள் தம்பதியரின் மகனாய் 3 அக்டோபர் 1954 அன்று பிறந்தார் , இவருக்கு கல்பனா மன்றாடியார் ,மற்றும் ரூபா சேனாதிபதி என்ற இரு தங்கைகள் உண்டு . .கோயம்புத்தூர் சென்ட் மேரியின் கான்வெண்ட் பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் கோயம்புத்தூர், ராம்நகர், சுப்பர்பன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை அறிவியலில் தாவர இயல் படித்தார் . இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார். திரைப்பட வ...