SRI VIKKIRAMA RAJA SINGHAN 1798-1832
SRI VIKKIRAMA RAJA SINGHAN 1798-1832 ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1798 -1816-1832 கண்டி அரச மரபினர் மதுரை நாயக்கர் அல்லது தஞ்சை நாயக்கர் மரபிலிருந்து பெண் எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். கண்டி அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு (1782 - 1798) ஐந்து மனைவிமார் இருந்தும் ஒருவருக்கும் பட்டத்துக்குரிய வாரிசு இருக்கவில்லை. இந்த நிலைமையை சாதகமாக்கிக்கொள்ள அதிகாரிகளும், பிரதானிகளும், திசாவமார்களும் தருணம் பார்த்துகொண்டிருந்தனர். மன்னர் வாரிசின்றி இறக்க நேரிட்டது. தனக்குப் பின் அரசாட்சியை மேற்கொள்ளவென மூத்த மனைவியின் தம்பி முத்துசாமியையே இறப்பதற்கு முன் முடிக்குரிய இளவரசனாக நியமனம் செய்திருந்தார் மன்னார். ஆனால் மன்னரின் மரணத்திற்குப் பின்னர் அரசாட்சியில் கண் வைத்துக்கொண்டிருந்த கண்டி மந்திரிகளில் ஒருவரான பிலிமத்தலாவ அரசாட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் மன்னரின் மரணத்திற்குப் பின் முத்துசாமியை நியமிக்க விடவில்லை. மன்னரின் இரண்டாவது மனைவியின் சகோதரனான கண்ணுசாமியை மதுரையில் இருந்து அழைத்து வந்து அரசனாக்கினான். கண்ணுசாமி “ஸ்ரீ விக்ரமசிங்க” என்கிற பெயரில் 1798இல...