MRINALINI SARABHAI ,CLASSICAL DANCER BORN 1918 MAY 11 - 2016,JANUARY 21
MRINALINI SARABHAI ,CLASSICAL DANCER BORN 1918 MAY 11 - 2016,JANUARY 21 .மிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai, 11 மே 1918 - 21 சனவரி 2016 )[1] இந்தியாவின் பிரபலமான ஒரு நடனக் கலைஞர், பயிற்றுனர் மற்றும் நடன இயக்குனர் என்ற பன்முகங்கள் கொண்டவர் ஆவார். அகமதாபாத் நகரில் இவர் நடனம், நாடகம், இசை மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றுக்கான "தர்பனா நிகழ்த்துக் கலைக் கழகம்" என்ற இசைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.[2]. பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் மிருணாளினி 18,000 நபர்களுக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.[3]. கலைக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பத்மசிறீ, பத்மபூசண் உட்படப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன [4]. வாழ்க்கைச் சுருக்கம் இளமையும் கல்வியும் மிருணாளினி 1918 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் கேரளத்தில்,[1] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினர். தாய் ஒரு சமூகநலத் தொண்டர்...