YASH CHOPRA ,DIRECTOR BORN 1932 SEPTEMBER 27- 2012 OCTOBER 21
YASH CHOPRA ,DIRECTOR BORN 1932 SEPTEMBER 27- 2012 OCTOBER 21 யஷ்ராஜ் சோப்ரா (Yash Raj Chopra, இந்தி: यश चोपड़ा, செப்டம்பர் 27,1932 - அக்டோபர் 21, 2012[1]) ஓர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்கியவர். பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்த யஷ் சோப்ரா தனது திரை வாழ்க்கையை துணை இயக்குநராக ஐ. எசு. ஜோகரிடமும் தனது அண்ணன் பி.ஆர் சோப்ராவிடமும் துவங்கினார். பெரும்பாலும் இந்தித் திரைப்படத்துறையில் பணியாற்றி உள்ளார். 1959ஆம் ஆண்டில் இயக்குநராக அவரது முதல் திரைப்படம் தூல் கா பூல் வெளியானது. தொடர்ந்து 1961இல் சமூக நாடகமாக தர்ம்புத்திரா என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் சோப்ரா சகோதரர்கள் பல திரைப்படங்களை உருவாக்கினர். பாலிவுட்டில் ஒரே படத்தில் பல முன்னணித் திரைப்பட நடிகர்களை வைத்து படமெடுக்கும் பாணியை துவக்கி வணிக ரீதியாக வெற்றிபெற்ற வக்த் (1965) இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. 1973ஆம் ஆண்டில் தமது சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ...