Showing posts with label கவிஞர். Show all posts
Showing posts with label கவிஞர். Show all posts

Monday, 17 October 2016

KANNADASAN கவிஞர்களுக்கு சாவே இல்லை என்ற கண்ணதாசன் அமெரிக்காவில் இறந்த நாள் 1981 அக்டோபர் 17



KANNADASAN கவிஞர்களுக்கு சாவே இல்லை என்ற கண்ணதாசன் அமெரிக்காவில் 
இறந்த நாள் 1981 அக்டோபர் 17



கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், 
நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். 

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். 

சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.


கண்ணதாசன்
பிறப்புமுத்தையா
சூன் 241927
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடுஇந்தியா
இறப்புஅக்டோபர் 171981(அகவை 54)
சிக்காகோஇலினொய்ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர்காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில்கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியா
இனம்தமிழர்
நாட்டுரிமைஇந்தியர்
எழுதிய காலம்1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக

சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்)பொன்னழகி
பார்வதி
வள்ளியம்மை
பிள்ளைகள்15

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். 

சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 

1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்[தொகு]

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[1] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[2],[3]. 

கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[4]

 ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.[5]



கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு[தொகு]

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.[6]

மறைவு[தொகு]

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். 

அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்[தொகு]

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[7] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 

1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 
1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

எம்ஜியார் செய்த உதவி 

 கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். 

இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.



இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். 

ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். 

இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார்.

 பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். 

தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம் நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்.



திரைத்துறைக்கான பங்களிப்புகள்[தொகு]
திரையிசைப் பாடல்கள்[தொகு]
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்

கதை எழுதிய திரைப்படங்கள்[தொகு]
ராஜா தேசிங்கு
வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
நாடோடி மன்னன்
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
மதுரை வீரன்
இலக்கியப் படைப்புகள்[தொகு]
கவிதை நூல்கள்[தொகு]
காப்பியங்கள்[தொகு]
மாங்கனி
பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
ஆட்டனத்தி ஆதிமந்தி
பாண்டிமாதேவி
இயேசு காவியம்
முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்[தொகு]

கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்[தொகு]

அம்பிகை அழகுதரிசனம்
தைப்பாவை
ஸ்ரீகிருஷ்ண கவசம்
கிருஷ்ண அந்தாதி
கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்[தொகு]
கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு[தொகு]
பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
பஜகோவிந்தம்
புதினங்கள்[தொகு]
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
பிருந்தாவனம்
சிறுகதைகள்[தொகு]
குட்டிக்கதைகள்
வாழ்க்கைச்சரிதம்[தொகு]
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள்[தொகு]
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
சமயம்[தொகு]
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
நாடகங்கள்[தொகு]
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்[தொகு]
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

பகவத் கீதை

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
திருக்குறள் காமத்துப்பால்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
விருதுகள்[தொகு]
சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)





"காலமெனும் ஆழியிலும் 
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!
கண்ணதாசன்,  கம்பனுக்கு எழுதிய கவிதை இது. 




கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும். 
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.

சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.
ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. 

திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.

கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது. 

பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.

ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.

அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை. 
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. 

சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.
”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது. 

கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.

கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.

“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.

ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.

”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.
காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!

கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்

* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.
* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.
* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.
* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.
*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Image may contain: 3 people, people smiling




Monday, 15 August 2016

அரவிந்த கோஷ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி பிறப்பு: ஆகஸ்ட் 15, 1872



அரவிந்த கோஷ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி 
பிறப்பு: ஆகஸ்ட் 15, 1872


அரவிந்த கோஷ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், யோகி, தத்துவஞானி எனப் பன்முகம் கொண்ட மானுட அறிஞர் ஆவார். விடுதலைப் போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ஆன்மீகவாதியாக வாழ்ந்த அரவிந்த கோஷின் வாழ்க்கை வரலாறு மற்றும் பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 15, 1872

இடம்:  கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா

பணி: விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர்

இறப்பு: டிசம்பர் 05, 1950

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு


அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட அரவிந்த கோஷ் அவர்கள், 1872  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15  ஆம் நாள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் கிருஷ்ண தன கோஷுக்கும், ஸ்வர்ணலதாவிற்கும் மூன்றாவது குழந்தையாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஸ்ரீ அரவிந்தர், தன்னுடைய தொடக்க கல்வியை டார்ஜிலிங்கிலுள்ள “லோரெட்டோ கான்வென்ட்டில்” தொடர்ந்தார். பிறகு 1879 ஆம் ஆண்டு, சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்ற அவர், கல்வியை அங்கு தொடர்ந்தார். லண்டனிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இளங்கலை கல்வியைத் தொடங்கி பட்டமும் பெற்றார். படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, புரட்சிகரமான சிந்தனையாளராக விளங்கிய அரவிந்த் அவர்கள், உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார்.

சுதந்திரப்போராட்டத்தில் அரவிந்தரின் பங்கு

தன்னுடைய 21 வயது வரை, இங்கிலாந்தில் தங்கி, கல்வி பயின்ற ஸ்ரீ அரவிந்தர், 1893 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பினார். இந்தியா திரும்பிய அவர், பரோடா சமஸ்தானத்தில் அரசப் பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றிய  பிறகு, வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பணியைத் தொடர்ந்தார். இந்தியாவில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையை கண்டு கொதித்துப்போன அரவிந்தர் அவர்கள், விடுதலைப் போராட்டாத்தில் தன்னை ஈடுபத்திக்கொண்டது மட்டுமல்லாமல், கர்சனின் வங்கப் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார். தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்” என்ற இதழை ஆரம்பித்த பின், சந்திரபாலுடன் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதனால், அரவிந்த் அவர்கள் ஆங்கில அரசால் 1907லிலும், 1908டிலும் இருமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், “கர்மயோகி” என்ற ஆங்கிலப்பத்திரிக்கை மூலமும் “தர்மா” என்ற வங்காள மொழி பத்திரிக்கை மூலமும் மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டும் கட்டுரைகளை எழுதி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்.


ஆன்மீகத்தில் ஈடுபாடு

சிறையில் இருந்த நேரங்களில் அவர் கீதை, வேதங்கள் என ஆன்மீக நூல்களைப் படித்த அவருக்கு, யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. 1909 சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற அரவிந்தர், தன்னுடைய முழுகவனத்தையும் யோக நெறியில் ஈடுபடுத்திக்கொண்டார். 1910 ஆம் ஆண்டு, ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், அங்கிருந்து தப்பித்து சந்திர நாகூருக்கு சென்று, பிறகு புதுச்சேரியை வந்தடைந்தார். அவரை மகாகவி பாரதியார் தலைமையிலான தமிழர்கள் வரவேற்று, ஒரு சீமானின் வீட்டில் தங்கவைத்தனர். இதையடுத்து, தனது அரசியல் நடவடிக்கைகளை முழுவதுமாகக் கைவிட்டு முழு ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பிறகு, அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும், யோகத்திலும் ஈடுபட்டார். அதுமட்டுமல்லால், தனது யோகத்தின் நோக்கத்தை விளக்கிடும் “சாவித்திரி” என்னும் மகா காவியத்தையும் ஸ்ரீ அரவிந்தர் படைத்தார்.

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக சிந்தனைகள்

‘உலகத்தைத் துறந்து, இறைவனை அடையவேண்டும். யோகத்தினால் கிடைக்கும் வலிமையைக் கொண்டு நாட்டு மக்களை விடுவிக்க வேண்டுமென்பதோடு’ மட்டுமல்லாமல், தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளை “ஆர்யா” என்ற ஆன்மீக இதழில், 1914 முதல் 1921 வரை எழுதினார். அவருடைய தத்துவங்கள், உண்மைகளை அடிப்படையாக கொண்டவையாக அமைந்தது.

இறப்பு

‘இந்த மானுட வாழ்வு, தெய்வீக வாழ்வாக மலர வேண்டும்’ என உழைத்த ஸ்ரீ அரவிந்தர் அவர்கள், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். ஒரு சுதந்திர போராட்ட வீரராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு மகா



Sunday, 7 August 2016

ரவீந்திரநாத் தாகூர் இறப்பு 1941 ஆகஸ்ட் 7


ரவீந்திரநாத் தாகூர் இறப்பு 1941 ஆகஸ்ட் 7

உண்மையின் சிரிப்பு தான் அழகு என்பது 
ரபீந்திரநாத் தாகூர்   


பிறப்பு 
இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி (1861-05-09) பிறந்தார். இவரது பிறந்த இடம் கொல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகை ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடிப் பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார்

இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பம் எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சம‌‌‌ஸ்க்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்

இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.

வங்காள மொழிக் கவிஞர்

இரவீந்தரநாத் தாகூர்  புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எட்டாவது வயதிலேயே கவிதை

கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
பிரபலமான படைப்புகள்

கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.

1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலைமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.
இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.

தொடக்க காலம் (1861-1901)[தொகு]

1879 இல் இங்கிலாந்தில் கற்கும் வேளையில் தாகூர்.

1883 இல் தாகூர் தன் மனைவி மிருனாளினி தேவியுடன்.



இரவீந்திரநாத் தாகூர் தான் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிரைட்டண், லண்டனில் (Brighton, London) உள்ள ஒரு பள்ளியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் லண்டன் சர்வகலாசாலையில் கல்வி கற்றார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலே 1880 ஆம் ஆண்டில் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார்.
மணவாழ்வு 

 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 
1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 



நரேனும்(சுவாமி விவேகானந்தர்) தாகூரும்[தொகு]


ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.
தாகூரின் பாடல்களை பலவற்றை நரேந்திரர் பாடியுள்ளார்.
நரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்.




சாந்திநிகேதன்[தொகு]

1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் என்பவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்ப நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.

இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.


சாந்தி நிகேதன் மாணவர்கள்

நோபல் பரிசு[தொகு]

1940 இல் சாந்திநிகேதனில் மோகன்தாசு கரம்சந்த் காந்தியையும், கஸ்தூரிபாவையும் தாகூர்(மேடையின் வலப்பக்கம்) வரவேற்கிறார்.

1913 ஆம் ஆண்டில், அவரது இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.







1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.

1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.

இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதையும், அடிமைகள் போல் நடத்தப்படுவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.

1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.

1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.
1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசீய கீதமாகவும், உருவெடுத்தன.


தாகூரின் அறை

பயணங்கள்[தொகு]
1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுள் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.

ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.

இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.

ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.

1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.

இறப்பு[தொகு]

1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. 

இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் சுற்றினார். சைனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார்.




 அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.

1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது, எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.

ஜன கன மன  தேசியகீதமாக அங்கீகரிக்க பட்ட நாள் 1950 ஜனவரி  24
இந்தியாவின் தேசிய கீதமாக விளங்கும் 'ஜன கண மன'1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்து ஏழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.
இந்த கீதம் முதன்முதலில் பாடப்பட்டது கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்பு தான். பிற்பாடு இது பல்வேறு சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து இந்தியாவின் தேசிய கீதமாக உருவெடுத்தது.
இந்தப் பாடலை இயற்றிய வங்காள மஹாகவி ரபீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.
அது முதல் இந்திய மக்களின் கற்பனையையும் அரசியல் அமைப்பின் கற்பனையையும் வசீகரித்த ஒரு பாடலாக இது இருந்து வருகிறது.
சகல விதமான அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' திகழ்கிறது.
நவீன வடிவங்கள்
அவ்வப்போது புதிய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப நவீன இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருவதும் உண்டு.
முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பேழை, முன்னணி நடிகர் ஷாருக் கானின் திரைப்படம் போன்றவற்றில் வெவ்வேறு நவீன இசை வடிவங்களில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் மறுபுறம் இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன.
சர்ச்சைகள்
'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்திருந்தன.
"பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியப் பகுதிகள்தான் இந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வட கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் இருந்ததால் அப்பிரதேசம் இப்பாடலின் வரிகளில் இடம்பெறவில்லை" என அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தீபக் தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.
வட கிழக்கு பிரதேசத்தையும் பாடலில் சேர்த்தால், அப்பகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தணிய உதவும் என்று அவர் வாதிடுகிறார்.
இந்தப் பாடல் வரியில் இருந்து சிந்துவை நீக்கிவிட்டு காஷ்மீரை சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது கூட நடந்திருக்கிறது.
தேசிய கீத அந்தஸ்துக்கு போட்டி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவேகூட இந்தப் பாடல் தொடர்பில் சர்ச்சை இருந்தது.
இந்த கீதத்தை தேசிய கீதமாக ஆக்க வேண்டும் என்று வாதிட்டதற்கு பலர் இருந்த அதே நேரத்தில் இதனை தேசிய கீதமாக ஆக்கக்கூடாது என்று வாதிட்டவர்களும் அதிகம்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு தாழ் பணியும் ஒரு பாடல் இது என்று இவர்கள் வாதிட்டார்கள்.
பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு சாராரின் பிரச்சாரம் அமைந்திருந்தது.
ஆனாலும் மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' தேசிய கீதமாகவும் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்பதாக வரலாறு அமைந்துள்ளது.
இந்தியாவின் தேசிய கீதமாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது.1911 DECEMBER 27
இந்த கீதம் முதன்முதலில் பாடப்பட்டது கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்பு தான். பிற்பாடு இது பல்வேறு சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து இந்தியாவின் தேசிய கீதமாக உருவெடுத்தது.
இந்தப் பாடலை இயற்றிய வங்காள மஹாகவி ரபீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.
1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்து ஏழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.
அது முதல் இந்திய மக்களின் கற்பனையையும் அரசியல் அமைப்பின் கற்பனையையும் வசீகரித்த ஒரு பாடலாக இது இருந்து வருகிறது.
சகல விதமான அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' திகழ்கிறது.
நவீன வடிவங்கள்
அவ்வப்போது புதிய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப நவீன இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருவதும் உண்டு.
முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பேழை, முன்னணி நடிகர் ஷாருக் கானின் திரைப்படம் போன்றவற்றில் வெவ்வேறு நவீன இசை வடிவங்களில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் மறுபுறம் இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன.
சர்ச்சைகள்
'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்திருந்தன.
"பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியப் பகுதிகள்தான் இந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வட கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் இருந்ததால் அப்பிரதேசம் இப்பாடலின் வரிகளில் இடம்பெறவில்லை" என அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தீபக் தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.
வட கிழக்கு பிரதேசத்தையும் பாடலில் சேர்த்தால், அப்பகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தணிய உதவும் என்று அவர் வாதிடுகிறார்.
இந்தப் பாடல் வரியில் இருந்து சிந்துவை நீக்கிவிட்டு காஷ்மீரை சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது கூட நடந்திருக்கிறது.
தேசிய கீத அந்தஸ்துக்கு போட்டி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவேகூட இந்தப் பாடல் தொடர்பில் சர்ச்சை இருந்தது.
இந்த கீதத்தை தேசிய கீதமாக ஆக்க வேண்டும் என்று வாதிட்டதற்கு பலர் இருந்த அதே நேரத்தில் இதனை தேசிய கீதமாக ஆக்கக்கூடாது என்று வாதிட்டவர்களும் அதிகம்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு தாழ் பணியும் ஒரு பாடல் இது என்று இவர்கள் வாதிட்டார்கள்.
பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு சாராரின் பிரச்சாரம் அமைந்திருந்தது.
ஆனாலும் மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' தேசிய கீதமாகவும் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்பதாக வரலாறு அமைந்துள்ளது.