சகல கலா வல்லவன் நடிகர் ரஞ்சன் இறப்பு 1983 செப்டம்பர் 12
சகல கலா வல்லவன் நடிகர் ரஞ்சன் இறப்பு 1983 செப்டம்பர் 12 ரஞ்சன் (இயற்பெயர்: இராமநாராயண வெங்கடரமண சர்மா[1], மார்ச் 2, 1918 - செப்டம்பர் 23, 1983) இந்தியத் திரைப்படவுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். நாட்டியக் கலைஞர், இசைக் கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர். திரையுலகில்[தொகு] ரஞ்சன் கல்லூரியில் படிக்கும் போதே ஆண்டு விழாவொன்றில் நடனம் ஆடினார். ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி வந்த வேப்பத்தூர் கிட்டு என்பவர் இவரது நடனத்தைக் கண்டு பி. ஜி. ராகவாச்சாரி என்ற திரைப்பட இயக்குனரிடம் அறிமுகப்படுத்தினார். அவரது ரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு ரஞ்சனுக்குக் கிட்டியது. 1941 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளிவந்தது. உலக விடயம் எதுவும் தெரியாமல் காட்டில் வசித்து வந்த ரிஷ்யசிருங்கராக ரஞ்சனும் அவரை மயக்கி நாட்டுக்கு அழைத்துப் போக வந்த மாயாவாக வசுந்தராதேவியும் (இவர் வைஜயந்திமாலாவின் தாயார்) நடித்தனர். ஜெமினியின் நந்தனார் (1941) படத்தில் ரஞ்சன் சிவபெருமானாக சிவதாண்டவம் ஆடி இருந்தது ரசிகர்களின் வரவேற...