GANDHI LIKED FREEDOM FIGHTERS OF TAMILNADU
GANDHI LIKED FREEDOM FIGHTERS OF TAMILNADU தென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை... காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்! #Gandhi150 தமிழ்மகன் தமிழர்களுக்கு காந்தியையும் காந்திக்குத் தமிழர்களையும் அளவுக்கு அதிகமாகவே பிடித்துப்போனது. தமிழில் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.மகாத்மா காந்திக்கும் தமிழருக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அது, தென்னாப்பிரிக்காவில் காந்தி வக்கீல் தொழிலைத் தொடங்கிய காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்து, ஆங்கிலேயர்களின் அடாவடித்தனங்களை எதிர்த்து சிறை சென்று உயிர் மாய்ந்த மூவரில் ஒருவரை நம்மில் பலருக்கும் தெரியும்... அவர் தில்லையாடி வள்ளியம்மை. 16 வயது இளம் பெண். தென்னாப்பிரிக்காவில் யாருடைய தியாகம் அரும்பலன் தந்தது என்று யாரும் கூற முடியாது. ஆனால், ஒன்று நமக்குத் தெரியும். வள்ளியம்மையின் தியாகம்' என்று வள்ளியம்மையின் பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார், காந்தி. வள்ளியம்மையோடு அவருடைய தாய் ஜானகியும் சிறைக்க...