LIVE IN NATURE ,NATURALLY
LIVE IN NATURE ,NATURALLY மாந்தனைக் கொல்வது *நோயா? அச்சமா?* 1. பாமர மனிதனை விடப் படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2.அடுப்புப் புகையைப் பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட 'சிகரட்' புகைத்த பலருக்குப் புற்றுநோய் வருவது ஏன்? 3. கள்ளச் சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமரர்கள் பலருக்குக் கல்லீரல் பாதிப்பு ஏன்? 4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தைத் தேய்த்துவிட்டு வேலையைத் தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே? 5. நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவாள் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டுப் போடுபவன் எங்கே? 6. அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்பு *ஆற்றல் குறைபாடு* ஏன்? 7. உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளிக் கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்? *ஏன்? ஏன்? ஏன்?* காரணம் மிகச் சிறியது. இயற்கைக்கும் நமக்குமான த...