SIVAKUMAR, THE ONLY HERO LIVE IN TO DAY BORN 1941 OCTOBER 27



SIVAKUMAR, THE ONLY HERO LIVE IN 
TO DAY BORN 1941 OCTOBER 27


சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.[3]

திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.

கம்பராமாயண சொற்பொழிவு

கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன..[3]

நடிகர் சிவகுமாரின் குடும்பம் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒரு சர்ப்ரைஸ் பயணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்றால், நடிகர் சிவகுமார், அவரது மனைவி, நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா ஆகிய ஐவர் மட்டுமே இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைகளில் சிக்கி படாத பாடுபட்ட நிலையில் தற்போது ரிலாக்ஸ் மூடுக்கு மாற இந்த வெளிநாடு பயணத்திற்கு சென்றுள்ளனர்.

நடிகர் சிவகுமார் பற்றியும் அவரது பன்முகத் திறமைகளை பற்றியும் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன. ஆம் அந்த நடிப்பு சக்கரவர்த்தியின் இரண்டு இளவரசர்களும் ஊர் அறிந்த திறமைசாலிகளே என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன.முன்னர் தந்தை திரையுலகை கலக்கினார். இன்றோ மகன்கள், மருமகள் என குடும்பமே கலைக் குடும்பமாக ஜொலிக்கிறது. தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்தி என அனைவருமே படு பிஸியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு புறம் பாசிட்டிவான விமர்சனங்கள் மற்றுமொரு பக்கம், படம் பற்றின நெகட்டிவான கமெண்ட்ஸ் என்ன கலவையாய் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

சூர்யாவின் நிலைமை இப்படி என்றால் கார்த்தியின் படமோ வேறு மாதிரி சர்ச்சையில் சிக்கி இப்போது தான் அதிலிருந்து வெளிவந்து இருக்கிறது. பாக்கியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தான் சுல்தான். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று கொண்டிருக்கும் போது சில சர்ச்சைகள் ஏற்பட்டு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது தான் அது சம்பந்தமான சிக்கல்கள் சரியாகி வருகின்றன.சிவகுமாரும் சர்ச்சைகளில் சிக்காமலில்லை. அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்ற சர்ச்சையை கிளப்ப அதற்கு சிவகுமாரே, அவரின் விளக்கத்தை மிக நீளமாக அளித்து இந்த சர்ச்சையில் இருந்து விடுபட்டார்.


குதூகலமாய் இருந்த குடும்பம் பல சர்ச்சைகளில் சிக்கி ஒரு வார காலமாக படாத பாடுபட்டு வந்திருந்த நிலையில், நடிகர் சிவகுமாரின் குடும்பம் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒரு சர்ப்ரைஸ் பயணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்றால், நடிகர் சிவகுமார், அவரது மனைவி, நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா ஆகிய ஐவர் மட்டுமே இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஜோதிகா மற்றும் சூர்யாவின் மகன், மகள், கார்த்தியின் மனைவி ரஞ்சனி, மகள், பிருந்தாவின் கணவர் மற்றும் அவரது குழந்தைகள் என இவர்கள் யாரும் பயணத்தில் உடன் செல்லவில்லை என்பது தான் ஆச்சரியம்.

பள்ளி விடுமுறையை அடிப்படையாக வைத்து இந்த 10 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தாலும் ஏன் ஜோதிகாவும் அவருடைய வாரிசுகளும் உடன் செல்லவில்லை என்பது தெரியவில்லை. மேலும் முழுக்க முழுக்க சிவகுமாரின் ரத்த சம்பந்த உறவுகள் மட்டும் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார்கள் அதன் காரணம் என்ன என்பதெல்லாம் புரியாத புதிராக வைத்திருக்கிறார்கள்.

என்னுடன் நடித்த நடிகைகளில் இளமையானவர் ஜெயசித்ரா தான் - நடிகர் சிவகுமார்
By Vinoth R| Published: Wednesday, September 11, 2019, 12:04 [IST]
சென்னை: நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாள் விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவர், குறத்தி மகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 100 % காதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருக்கிறார். மேலும், நானே என்னுள் இல்லை என்ற படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். புதிய ராகம் என்ற படத்திற்கு தானே வசனம் எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார்.

நல்ல பிள்ளைகள் அமைவது வரம். அது நடிகை ஜெயசித்ராவுக்கு அமைந்திருக்கிறது. 2010ஆம் ஆண்டு நானே என்னுள் இல்லை என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அம்ரீஷ். அதனைத் தொடர்ந்து மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, சத்ரு போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தற்போது, கர்ஜனை, யங் மங் சங், வீரமாதேவி, பரமபத விளையாட்டு, கா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த 09.09.19 அன்று நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளுக்கு அவரது மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ் திரையுலக நட்சத்திரங்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாக கொண்டாடி அம்மா ஜெயசித்ராவை ஆச்சரியப்படுத்தினார். விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:-

நடிகர் சிவகுமார் பேசும்போது, என்னுடன் நடித்த வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். சொல்லத் தான் நினைக்கிறேன் மறக்கமுடியாத படம். அதேபோல், வெள்ளிக்கிழமை விரதம் படமும் மறக்க முடியாத படம்.

பாம்பை ஜெயசித்ராவின் அருகில் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்தக் காட்சிகளை சவாலாக செய்து முடித்தார் ஜெயசித்ரா. சினிமா துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன்.

நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. ஆனால், ஜெயசித்ராவுக்கும், அவரது மகன் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கும், 16 செல்வங்களும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, என்னை பொருத்தவரையில் அன்று தண்ணி கருத்துருச்சி தவள சத்தம் கேட்டிருச்சி பாட்டில் பார்த்த அதே ஜெயசித்ராவாகத்தான் இன்றும் பார்க்கிறேன். அவருடைய முக வசீகரம் 1 சதவீதம் கூட மாறாமல் இன்றளவும் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் அவருடைய கள்ளம் கபடமற்ற மனம் தான்.

பாசம் கொண்ட பிள்ளைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இதற்கு முன் வாழ்த்திச் சென்ற நடிகர் சிவாகுமாருக்கு அருமையான இரண்டு பிள்ளைகள் வாய்த்திருக்கிறார்கள். அதேபோல், ஜெயசித்ராவுக்கும் அதிக அன்பு மிகுந்த மகன் கிடைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் ஜெயசித்ரா கதாநாயகி தான். அவருடைய வாழ்க்கையில் அவரது மகன் அம்ரீஷ் கொண்டாடும் பிறந்த நாள் விழா தான் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். இன்று போல் என்றைக்கும் அம்மாவை இதே அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் அம்ரீஷுக்கு கோரிக்கை வைத்தார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

நடிகை ஜெயசித்ரா பேசும்போது, என் பிறந்த நாளை என் மகன் அம்ரீஷ் வெகு விமரிசையாகக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நான் வெளியூர் படப்பிடிப்பிற்கு செல்லும் போது அவனை விட்டு செல்வதில் மிகுந்த மனவேதனை அடைவேன். எனக்கு ஏக்கம் வராமல் இருக்க அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். இதன்மூலம் அவனருகில் நான் இருப்பதாக எண்ணத்தை அவனுக்குக் கொடுப்பேன்.

படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது அவனுக்கு பிடித்த பொம்மைகளை வாங்கி வருவேன். ஒருமுறை அமெரிக்கா செல்லும் சமயத்தில் என் கணவர் பிள்ளையை அழைத்துச் சென்றால் படப்பிடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது என்று அனுப்ப மறுத்துவிட்டார். விமானத்தில் நீண்ட நேரம் அவனது நினைவு நீங்கவே இல்லை. பிறகு இந்தியா திரும்பும்போது அவனுக்கு பிடித்த பெரிய கார் பொம்மையை வாங்கி வந்தேன்.

இதுவரை அவனை நான் திட்டியதோ, அடித்ததோ கிடையாது. எத்தனையோ பிறந்த நாள் இதற்கு முன் கொண்டாடியிருந்தாலும் இந்த பிறந்த நாளை என்னால் மறக்கமுடியாது. எனது பிறந்த நாளைக்கு மறக்க முடியாத பரிசை என் மகன் எனக்கு கொடுத்திருக்கிறான் என்று நெகிழ்ந்ததோடு அல்லாமல், எனது பிறந்தநாள் விழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.

நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாள் விழாவில், ஆர்.வி.உதயகுமார், நடிகர் சிவகுமார், சௌகார் ஜானகி, சினேகன், நமீதா மற்றும் அவரது கணவர், இயக்குநர் சாய்ராம், லக்ஷ்மன் ஸ்ருதி, நேக் ஸ்டுடியோவின் கல்யாண், பாடகர் சிவா போன்ற திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


சென்னை: நடிகர் சூர்யாவும் அவரது தம்பி நடிகர் கார்த்தியும் அவர்களின் ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள், அவர்களுடைய தாய் தந்தையரை காலம் முழுவதும் கண் கலங்காமல் ஒரு குழந்தையை போல் பாவித்து அன்போடு கவனித்து கொள்ளுங்கள் என்பது தான்.

இதை வெறும் வார்த்தையோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் அவர்கள் அதை தங்களது வாழ்வில் செய்து காட்டியும் வருகிறார்கள். இன்றும் சூர்யா, கார்த்தி இருவரும் தங்களது குடும்பத்துடன் தங்களது தாய் தந்தையுடன் தான் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.நீ இதை செய், இதை செய்யாதே அப்படி இப்படி என பலரும் பல விதங்களில் தங்களது கருத்துக்களை மற்றவர் மீது திணிக்க தான் செய்கிறார்கள். இதை யாராலும் தடுக்கவே முடியாது. ஆனால் இதில் ஒரு அழகு என்னவென்றால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை எத்தனை பேர் தங்களது சொந்த வாழ்வில் கடைபிடிக்கிறார்கள் என்றால் அது மிகவும் சொச்சமாக தான் இருக்கும். இது எதார்த்தம்.

ஆனால் அதிலும் சிலர் விதிவிலக்குகளாக இருப்பர். அப்படி இரு உத்தம மகன்களை பெற்றெடுத்தவர் தான் நடிகர் சிவகுமார். இதை அவர் மிகுந்த பெருமையுடன் கூறுகிறார். அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாய் இருந்து வருகிறார்கள் நடிகர் சூர்யா குடும்பத்தினர். அங்கு பல விழாக்கள் நடைபெறும். ரசிகர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்கள் பற்றி சூர்யா விசாரிப்பது வழக்கம்.அந்த வகையில், சமீபத்தில் சிவகுமார் குடும்பம் மட்டும் ஐரோப்பா நாடுகளுக்கு 20 நாட்கள் சுற்றுலா சென்று திரும்பி வந்துள்ளார்கள். தங்களது பிஸியான ஷெட்யூலுக்கு இடையிலும் சிவகுமார் அவரது மனைவி, சூர்யா, கார்த்தி மற்றும் சிவகுமாரின் மகள் பிருந்தா இவர்கள் மட்டும் இந்த சுற்றுலாவிற்கு சென்று வந்துள்ளனர்.


சூர்யாவின் மனைவி ஜோதிகா, குழந்தைகள், கார்த்தியின் மனைவி மற்றும் குழந்தைகள், பிருந்தாவின் கணவர் மற்றும் குழந்தைகள் என இவர்கள் யாரும் அந்த சுற்றுலாவிற்கு செல்லவில்லை என்பது தான் அங்கு ஹை லைட். சிவகுமாரின் மனைவி, மகள், மகன்களோடு மட்டும் லண்டன், பாரிஸ், வெனிஸ், பிரான்ஸ் என்று 20 நாட்கள் ஜாலியாக சுற்றி பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதை ஒரு சஸ்பென்ஸ் சுற்றுலாவாக பிளான் செய்துள்ளார்கள். திரையுலகின் ஒட்டு மொத்த கண்ணும் சிவகுமார் குடும்பத்தின் மீது தான்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER