Thursday 24 October 2019

SEMBIYAN MAADEVI APRIL 26,910-1001



SEMBIYAN  MAADEVI APRIL 26,910-1001


சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவியார். இவர் சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர்.

சோழ மன்னர் முதல் பராந்தக சோழனின் (கி.பி.907–953) இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனும், (கி.பி.957–970) அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பும் தன் மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன் (கி.பி.970–985) ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பு ஆட்சியேற்ற அருள் மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் (கி.பி.985–1014) ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இம்மாதரசி ஆறு சோழ மன்னர்கள் சோழ மண்டலத்தை ஆள்வதனை காணும் பேறு பெற்றவர். இவரை போல் வாழ்ந்த பேரரசி ஒருவரை உலகில் காண இயலாது.

இவர் ஆறு பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றை சோழர் சரித்திர நூற்கள் குறிப்பிடுகின்றன. இச்சோழப் பேரரசி அரசர் குடியில் பிறந்தவர். தன் மாமனார், தன் கணவன், தன் கணவனின் தம்பி அரிஞ்சய சோழன் சுந்தரசோழன், மகன் உத்தமசோழன், பேரன் ராசராசன் காலத்தில் வாழ்ந்தவர். கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல் சிறுவனாக இருந்த மகன் உத்தம சோழனை வளர்த்தெடுத்தத் தாயாக விளங்கினார். இரண்டாம் பராந்தக சோழன் காலத்தில் இவருக்கு பிறந்த ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி, தேவனையும் பாட்டியாக இருந்து வளர்த்தார்.

சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி
சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவியார். இவர் சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர்.

சோழ மன்னர் முதல் பராந்தக சோழனின் (கி.பி.907–953) இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனும், (கி.பி.957–970) அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பும் தன் மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன் (கி.பி.970–985) ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பு ஆட்சியேற்ற அருள் மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் (கி.பி.985–1014) ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இம்மாதரசி ஆறு சோழ மன்னர்கள் சோழ மண்டலத்தை ஆள்வதனை காணும் பேறு பெற்றவர். இவரை போல் வாழ்ந்த பேரரசி ஒருவரை உலகில் காண இயலாது.

இவர் ஆறு பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றை சோழர் சரித்திர நூற்கள் குறிப்பிடுகின்றன. இச்சோழப் பேரரசி அரசர் குடியில் பிறந்தவர். தன் மாமனார், தன் கணவன், தன் கணவனின் தம்பி அரிஞ்சய சோழன் சுந்தரசோழன், மகன் உத்தமசோழன், பேரன் ராசராசன் காலத்தில் வாழ்ந்தவர். கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல் சிறுவனாக இருந்த மகன் உத்தம சோழனை வளர்த்தெடுத்தத் தாயாக விளங்கினார். இரண்டாம் பராந்தக சோழன் காலத்தில் இவருக்கு பிறந்த ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி, தேவனையும் பாட்டியாக இருந்து வளர்த்தார்.



சுந்தரசோழன் இறந்த பிறகு அருண்மொழி தேவனை பெற்றெடுத்த வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறி உயிர் துறந்ததும் சுந்தரசோழனின் மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் பாட்டியாக விளங்கினார். அப்போது அருண்மொழி தேவனுக்கு வயது 5. பிற்காலத்தில் மாபெரும் பேரரசனாக ராஜராஜன் விளங்கியமைக்கு செம்பியன் மாதேவியின் வளர்ப்பு நிலை முக்கிய பங்காற்றியது. இவரை மாபெரும் பேரரசனாகவும், திருமுறைகளை மீட்டெடுத்து, பண்முறைகளையும் மீட்டெடுத்து பண்முறை அடிப்படையில் திருமுறைகளை ராசராசன் தொகுப்பதற்கு இவரின் வளர்ப்பே காரணமாக விளங்கியது.

ராசராசனை பேரரசனாகவும், கோவில் கட்டுமானம் செய்யும் படைப்பாளியாகவும், மக்களை நேசித்த பேரரசனாகவும், ஆட்சியில் பல்வேறு சிறப்புகளை பெறுவதற்கு இவரின் வளர்ப்பு நிலையும், ராசராசனின் தமக்கை குந்தவை நாச்சியாரின் வளர்ப்பும் வழிகாட்டுதலும் காரணமாக விளங்கின.

இதனால் ராசராசன் தனக்கு பிறந்த 3 பிள்ளைகளுக்கு தமக்கு உறுதுணையாக நின்ற மூவரின் பெயரை சூட்டினான். முதலாவதாக தனக்கு பிறந்த மூத்த மகளுக்கு தன் பாட்டியின் சிறப்பு பெயரான மாதேவிஅடிகள் என்று பெயரிட்டான். 2–வது மகளுக்கு தமக்கை குந்தவையின் பெயரை வைத்தான். தனது மகனுக்கு செம்பியன் மாதேவியாரின் மகன் மதுராந்தகன் பெயரை வைத்தான். இம்மதுராந்தகனே பிற்காலத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் என்று அழைக்கப்பெற்றான்.
இம்மாதேவியார் பெயரால் மழ நாட்டில் ஓர் ஊர் உள்ளது. இது இன்றும் செம்பியக்குடி என்று அழைக்கப்பெறுகிறது. இவரது கணவர் கண்டிராதித்தர் பெயரில் கண்டராதித்தம் என்ற ஊர் உள்ளது. இவ்வம்மையார் பெயரில் நாகப்பட்டினத்தின் அருகில் செம்பியன்மாதேவி என்கிற ஊர் உள்ளது. இவ்வூரில் கயிலாயநாதர் கோவில் உள்ளது. இறைவன் பெயர் கயிலாயமுடைய மாதேவர். இறைவி பெயர் பெரிய நாயகி. மூன்று நிலை ராசகோபுரம் உள்ளது.

கயிலாய நாதர் கோவில் செம்பியன் மாதேவியரால் கட்டப்பட்டதாகும். ராஜேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் செம்பியன் மாதேவியின் படிமத்தை இக்கோவிலில் கி.பி.1019–ல் நிறுவினான். (பிற்கால சோழர் சரித்திரம் ப.90) இதன் வழிபாட்டிற்கு வேண்டிய நிவந்தங்கள் அளித்தான். இதனை கல்வெட்டுக்குறிப்பு (481–1925) குறிப்பிடுகின்றது. பிற்காலத்தில் இவருக்கு வெண்கல சிலையையும் அமைத்துள்ளனர். இத்திருவுருவத்தை இன்றும் இவ்வூர் மக்கள் அனைத்து வீடுகளில் இருந்தும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் என சீர்வரிசையில் பொருட்களை எடுத்து வந்து ஆராதனை செய்து வருகின்றனர்.

செம்பியன் மாதேவியின் மகன் உத்தம சோழனுக்கு மனைவியர் பலர் இருந்தனர் என்று செம்பியன் மாதேவி ஊரின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பட்டன தானதுங்கி, மழபாடித்தென்னவன் மாதேவி, இருங்கோளர்மகள், வானவன்மாதேவி, விழுப்பரையர் மகள் கிழானடிகள், பழவேட்டையர் மகள், பட்டத்தரசி திரிபுவன மாதேவி அன்றியும் பஞ்சவன் மாதேவி, சொர்ணமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் எனப் பலர் இருந்தனர். இவர்கள் அனைவரும் தம் மாமியார் செம்பியன்மாதேவி பெயரால் அமைத்த திருக்கயிலாய முடையார் ஆலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், திங்கள் வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் பல அளித்தமையை கல்வெட்டுக்கள் கூறுகின்றன.இவ்வம்மையார்க்கு நெடுநாட்கள் குழந்தையின்றி இருந்தது. பின்பு மதுராந்தகன் என்னும் உத்தம சோழனை மகனாகப் பெற்றார். மகன் குழந்தையாய் இருந்தமையால் கண்டராதித்தன் தம்பி அரிஞ்சய சோழன் இளவரசு பட்டம் பெற்றான். கி.பி.954–ல் அரிஞ்சய சோழன் இளவரசு பட்டம் பெற்றான். கி.பி.957–ல் கண்டராதித்த சோழன் இறந்தார். இளம் புதல்வனைக் காக்க வேண்டியும் சிவஞான செல்வராக விளங்கிய சிவத்தொண்டுகளை ஆற்ற வேண்டியும் இவ்வம்மையார் உயிர் வாழ்ந்தார். சிவ தொண்டுகள் செய்வதிலேயே பெரும் கவனம் செலுத்தினார்.

திருநல்லம்திருமுறை தலங்களுள் திருநல்லமும் ஒன்றாகும். சோழநாட்டு தென்கரை தலங்களுக்குள் ஒன்று இன்று இத்தலத்தை கோனரிராஜபுரம் என்று அழைக்கின்றனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவிலை கற்றளியாக்கி தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என அழைத்திட செம்பியன் மாதேவியார் ஏற்பாடு செய்தார்.

இக்கோவிலில் தன் கணவன் இங்குள்ள இறைவனை வழிபடுவது போல் ஒரு படிமத்தையும் வைத்தார். அப்படிமத்தின் கீழ் உள்ள கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ கண்டராதித்தஸ்ரீ தேவர் தேவியார் மாதேவடிகளாரான ஸ்ரீ செம்பியன்மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ கண்டராதித்தத் தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையாருக்கு திருக்கற்றளி எழுந்தருளிவித்த இத்தகுக் கற்றளியிலேயே திருநல்ல முடையாரை திருவடி தொழுகின்றாராக எழுந்தருளிவித்த கண்டராதித்த தேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திருக்கோவிலில் நாள்தோறும் வழிபாடும் பிறவிழாக்களும் நடைபெறுவதற்கு செம்பியன்மாதேவி நிலங்கள் வழங்கியுள்ளார்.
இவ்வம்மையார் கற்றளியாக்கிய கோவில்களுக்குள் விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலும் ஒன்றாகும். இறைவன் பெயர் பழமலைநாதர். இறைவி பெயர் பெரியநாயகி. இக்கோவிலின் இப்பொழுதுள்ள சுற்றளி செம்பியன் மாதேவியால் கட்ட பெற்றதாகும். இக்கோவில் உத்தமசோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் கி.பி.982–ல் கற்றளியாக்கப்பட்டுள்ளது. இவர் இக்கோவில் அன்றி இக்கோவிலில் உள்ள ஸ்நபந மண்டபம், கோபுரம், சுற்றாலை, பரிவாரத் தேவதைகளுக்கான கோவில் கட்டி உள்ளார்.

இவ்வமையார் திருவாரூர் அறநெறிக் கோவிலை சுற்றியாக்கியுள்ளார். திருத்துருத்தி என்று அழைக்கப்பெற்ற குத்தாலம் சொன்னவாறு அறிவார் கோவிலையும் கற்றளியாக அமைத்து தந்துள்ளார். திருமணஞ்சேரி கோவிலையும் கற்றளியாக்கி உள்ளார். ஆநாங்கூர் கோவிலையும் கற்றளியாக அமைத்துள்ளார். திருக்கோடிக்கா கோவிலையும் கற்றளியாக்கி உள்ளார்.

தென்குரங்காடு துறை ஆபத் சகாயேஸ்வரர், பவளகட கொடியம்மை கோவிலை கற்றளியாக்கி உள்ளார். கல்வெட்டில் இறைவன் திருக்குரங்காடு துறை மகாதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். செம்பியன்மா தேவியாரை குறிப்பிடும் பொழுது உத்தமதேவரை திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் மாதேவடிகளாரான செம்பியன் மாதேவியார் என்று குறிப்பிடப்படுகிறார்.

இவ்வம்மையாரின் இறுதி திருப்பணி பெற்ற கோவில் திருவக்கரை கோவிலாகும். இக்கோவில் ராஜராஜ சோழன் ஆட்சியின் 16–ம் ஆண்டாகிய கி.பி.1001–ல் கற்றளியாக்க பெற்றுள்ளது மற்றும் இக்கோவிலுக்கு இவ்வம்மையார் செய்த தொண்டுகளும் குறிப்பிட பெற்றுள்ளன. இதன் பிறகு இவ்வம்மையார் பற்றிய குறிப்புகள் காணப் பெறவில்லை. எனவே கி.பி.1001–ல் இவர் சிவனடியை அடைந்திருக்க வாய்ப்புள்ளது.


இம்மாபெரும் பேரரசி 1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன், 2. கணவர் கண்டராதித்தன், 3. கொழுந்தன் அரிஞ்சய சோழன், 4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன், 5. தன் மகன் உத்தம சோழன், 6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் காலம் வரை வாழ்ந்து சிவாலயங்களை கற்றளிகளாக்கியும், நாள் வழிபாட்டிற்கும் மாத வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் அளித்தும், சோழ அரசை நிலையான அரசாக்கிய குலமாணிக்கமாக திகழ்கிறார்.

பிற்காலத்தில் சோழ வம்சத்து பெண்கள் திருக்கோவில்களில் நிவந்தம் அளிக்கும் மரபைத் தோற்றுவித்தார். இவ்வம்மையார் உய்யக்கொண்டான் திருமலை என்னும் திருக்கற்குடியில் விழுமியர்க்கு பொன்னாலும் மணியாலும் இழைத்த திருமுடி அளித்தார். இம்மரபு பின் வந்தோராலும் பின்பற்றப்பட்டன. இவர் மேற்கொண்ட அறப்பணிகள் பிற்காலத்தவருக்கு வழிகோலியுள்ளன. இவ்வம்மையார் வரலாற்று ஆசிரியர்களால் பெண்ணுலகம் போற்றும் மாதேவ அடிகளாராகவும் சோழர் குல மாணிக்கமாகவும், உத்தம சீலியாகவும் போற்றப்படுகிறார்.

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி அருகே உள்ள செம்பியக்குடி கிராமத்தில் அவதரித்த செம்பியன் மாதேவிக்கு அவ்வூர் மக்கள் 1000 கிலோவில் ஐம்பொன் சிலை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்காக செம்பியன் மாதேவி அறக்கட்டளை நிறுவி தலைவர் சைவராஜ் தலைமையில் பொதுமக்களிடம் சிலை செய்தற்காக தங்கம், பித்தளை உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வருகிறார்கள். இப்பணிக்கு தஞ்சை மாவட்டத்தில் இருந்தும் மக்கள் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

செம்பியன் மாதேவி சிலை செய்யப்பட்டு அவர் பிறந்த நாளான வருகிற 2015–ம் ஆண்டு சித்திரை மாதம் கோட்டை நட்சத்திர நாளில் நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

– முனைவர் சண்முக. செல்வகணபதி, தஞ்சாவூர்.









’’செம்பியன் மாதேவி’’’ (கி.பி 910 – 1001) சிவஞான கண்டராதித்தரின் பட்டத்தரசி ஆவார். இவரது சமாதி இன்று சேவூரில் (செம்பியன் கிழானடி நல்லூர்) அமைந்துள்ளது

சோழர்கால செப்புத் திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்று தமிழாய்வு.ஆர்க் போற்றுகிறது. [1
பிறப்பும் வாழ்வும்
செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மழவர் குடும்பத்தில் பிறந்தவர். சோழப் பேரரசர் கண்டராத்தினாரை மணந்தார். அவரைப் போல தேவியாரும் சிறந்த சிவத்தொண்டராக விளங்கினார். தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர் இவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் செம்பியன் மாதேவியார்.[2]

சோழப்பேரரசுகளை வழிநடத்துதல்
முதலாம் பராந்தகச் சோழன்.
கண்டராதித்த சோழன்
அரிஞ்சய சோழன்
சுந்தர சோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்)
உத்தம சோழன்
ராசராச சோழன்
முதலிய ஆறு சோழப்பேரரசர்களின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார். கண்டராத்த சோழர் கி.பி 957ல் மரணமடைந்த போது அரிஞ்சய சோழனை அரசாள வைத்தவர். ஆதித்த கரிகாலன், ராஜராஜன், குந்தவை ஆகியோரை அன்போடு வளர்த்தவர். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

திருப்பணிகள்
செம்பியன் மாதேவியார் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். அவை கி.பி 7 ஆம் நூற்றாண்டிலும், கி.பி 8 ஆம் நூற்றாண்டிலும் சோழப்பேரரசுகளினால் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட சிவ ஆலையங்கள். அவர் முதன் முதலில் சீரமைத்த திருக்கோவில் திருநல்லம் ஆகும். [3] சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்களைக் கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார். அவை

திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
திருமணஞ்சேரி
தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை)
திருக்கோடிக்காவல்
ஆதாங்கூர்
குத்தாலம்
திருவக்கரை
திருச்சேலூர்
புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டும் கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும். கோவில்களுக்கு நாள்தோறும், திங்கள்தோறும் கைங்கரியங்கள் சிறப்பாக நடக்க இறையிலி கொடுத்தார். பல சிவதளங்களுக்கு பொன், வெள்ளியென அணிகலன்களும் கொடுத்ததாக கல்வெட்டுகளில் அறிய முடிகிறது.[4] செம்பியன் மாதேவியார் குறித்த கல்வெட்டுகள் திருவேள்விக்குடி சிவதளத்தில் உள்ளது. [5]

புகழ்
இன்றளவும் சோழர்கள் காலக் கோயில்கள் நிலைத்திருக்க செம்பியன் மாதேவியாரின் கற்றளி மாற்றமே காரணமாகும்.


பெண் குல திலகம்
பெண் குல திலகம் செம்பியன் மாதேவி

10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் இளவரசியை மணந்தார். கண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே செம்பியன் மாதேவி.

கண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார்.

கணவர் கண்டராதித்தருக்குப் பிறகு சோழ அரியணையில் அமர அவருடைய பிள்ளைக்கு உரிமை இருந்தாலும் மிகச் சிறிய பாலகனானதால், தாய் அனைவருக்கும் வழிகாட்டினாள்.

சோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான செம்பியன் மாதேவியின் வேண்டுகோளை அரிஞ்சயர் ஏற்றார். நாட்டின் அரசரானார். இவ்வாறு செம்பியன் மாதேவியின் வழிகாட்டுதலால் நாட்டின் அரசுரிமைப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது. சிவபக்தியில் தோய்ந்த கணவரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்த செம்பியன் மாதேவி, சோழ நாட்டுச் சிவாலயங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாள். தியாகமும் பக்தியும் அன்பும் மிகுந்த மாதேவியை அரச குடும்பத்தவரும் அந்நாட்டு மக்களும் மிகுந்த மதிப்புடன் போற்றினார்கள். செம்பியன் மாதேவி, தம் கணவர் தமக்கிட்ட சைவப் பணிகளைச் செய்ய விழைந்தார். அவர் விழைந்தவற்றுக்கு ஆகும் செலவை, அரிஞ்சய சோழர் அள்ளி வழங்கினார்.

ஓர் இயக்கமாகவே, சைவப்பணியைச் செய்து வந்த மாதேவி சிவாலயங்களுக்குச் சென்று பார்வையிட்டார். 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் சோழவள நாட்டில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆனால் அவை எல்லாம் மண்ணாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன. அதனால் அவை காலப் போக்கினாலும் பருவ மாற்றங்களாலும் சிதிலமடைந்து கிடந்தன.

இவ்வாறு நூற்றுக்கணக்கான கோவில்கள் இருப்பதைப் பார்த்து செம்பியன் மாதேவி கண்ணீர் வடித்தாள். இறைவனின் ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணி இனி தம் பணி என்று உறுதி செய்து கொண்டார். அதுவே சிவபக்தராம் தம் கணவரின் உள்ளத்துக்கும் உகப்பான பணி என்று எண்ணி மகிழ்ந்தார்.

முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் ஆகும். சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டார்கள்.

நல்லம் கோவில் பணி முடியும் தறுவாயில், கருவறைக்கு வெளிச் சுவரில், கண்டராதித்தர் சிவபூஜை செய்வது போன்று செதுக்கச் செய்தார். அதைக்கண்டு,மாதேவியின் கண்கள், கணவரை நேரிலே காண்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தன. இதுபோன்றே மேலும் பத்து கோவில்களிலும் கணவரின் சிவபூஜைக் காட்சியைச் சித்திரிக்கச் செய்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அக்காட்சியை நாம் கண்டு களிக்கலாம்.

சிவத்தொண்டில் ஈடுபட்டு கோவில் பணிகளைச் செய்தது போன்றே, மாதேவி, சோழநாட்டு இளவரசர்கள், இளவரசிகளையும் பக்தியும் நற்குணங்களும் நிரம்பியவர்களாக வளர்த்து வந்தார்.

அரிஞ்சய சோழரின் மைந்தர்களும் மகள் குந்தவியும் மாதேவியிடம் வளர்ந்து நற்குண நற்செயல்களை அறிந்தார்கள். எல்லாருடைய நெஞ்சங்களிலும் இளமை முதலே சிவபக்தியை வளர்த்தார். ஆகையால் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும் சிவபக்தியுடனே வாழ்ந்து சிவப்பணிகளில் ஈடுபட்டார்கள்.

செம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலே வளர்ந்த ராஜராஜன், அரியணை ஏறியதும் தஞ்சைத் தரணியில் வானுயர்ந்த கோபுரத்துடன் பெரிய கோவிலைக் கட்டினான். அதுமட்டுமல்ல, நியாயம், தர்மம் ஆகியவற்றை நன்கு உள்ளத்திலே பதிய வைத்தவர் பெரியன்னை செம்பியன் மாதேவியல்லவா?

அரிஞ்சயரின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, ராஜராஜன் அரியணையை ஏற்க முன்வரவில்லை. கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர்தான் அரியணையில் அமரத் தகுந்தவர் என்று வாதாடினார். இத்தகைய தியாக புத்தியும் நேர்மை குணமும் அவருக்கு ஊட்டியவர் செம்பியன் மாதேவி தானே! தேவியின் பெயரால் கோவில்களில் பல மான்யங்கள் அளிக்கப்பட்டன. பல ஏரிகள் குளங்கள் வெட்டப்பட்டன.


செம்பியன் மாதேவி, சிவபக்தியில் தோய்ந்தவராக இருந்து, தாம் புகுந்த சோழநாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். அரச பரம்பரையினர் சைவப் பற்று மிகுந்தவராகச் செய்து நாட்டிற்கும் குடும்பத்தாருக்கும் நல்லன செய்து அனைவராலும் போற்றப்பட்ட மூதாட்டியாக விளங்கி, 85ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment