Posts

Showing posts with the label CHOLA

SEMBIYAN MAADEVI APRIL 26,910-1001

Image
SEMBIYAN  MAADEVI APRIL 26,910-1001 சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவியார். இவர் சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர். சோழ மன்னர் முதல் பராந்தக சோழனின் (கி.பி.907–953) இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனும், (கி.பி.957–970) அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பும் தன் மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன் (கி.பி.970–985) ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பு ஆட்சியேற்ற அருள் மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் (கி.பி.985–1014) ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இம்மாதரசி ஆறு சோழ மன்னர்கள் சோழ மண்டலத்தை ஆள்வதனை காணும் பேறு பெற்றவர். இவரை போல் வாழ்ந்த பேரரசி ஒருவரை உலகில் காண இயலாது. இவர் ஆறு பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றை சோழர் சரித்திர நூற்கள் குறிப்பிடுகின்றன. இச்சோழப் பேரரசி அரசர் குடியில் பிறந்தவர். தன் மாமனார், தன் கணவன், தன் கணவனின் தம்பி அரிஞ்சய சோழன் சுந்தரசோழன், மகன் உத்தமசோழன், பேரன் ராசராசன் காலத்தில் வாழ்ந்தவர். கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல் சிறுவனாக இருந்த மகன் உத்தம சோழனை வளர்த்தெடுத்தத் தாய...

A SHORT HISTORY OF FISHERMAN , FORMERELY CHOLA SOLDIERS

Image
A SHORT HISTORY OF FISHERMAN , FORMERELY CHOLA SOLDIERS வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து அறிக்கை விடுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், "கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரியுள்ளார். மீன்பிடிப்பில் ஈடுபட்டு, சிங்களப்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரில், 22 பேர் இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆகும். இவர்களில் 21 பேர் வன்னியர்கள். இவர்களின் வரலாறு ஒரு வீரமிக்க போர் வரலாறு ஆகும்! சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்பு சிங்களப்படையினர் தென் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து கிராமங்களைக் கொளுத்தினர், மக்களைக் கொன்றனர். சிங்களப் படையின் அட்டூழியத்தைத் தடுக்க சோழ மன்னர் தன்னுடைய படைவீரர்களை அனுப்பினார். சோழப்படையினர் சிங்களப் படையைத் தோற்கடித்து, சிங்களத் தளபதிகளின் தலையைக் கொய்து மதுரைக் கோட்டை மு...

CHOLA DYNASTY -VIJAYALAYA CHOLAN BEGINS FROM THIRUPURAMBIYAM BATTLES

Image
CHOLA DYNASTY -VIJAYALAYA CHOLAN BEGINS FROM THIRUPURAMBIYAM BATTLES பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விஜயாலய சோழன் ஆவான். ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான். தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப...

RASHRAKOODARS,NULAMBAS, AND CHOLA DYNASTYS

Image
RASHRAKOODARS,NULAMBAS, AND CHOLA DYNASTYS கிராமமா, நகரமா என உறுதியாகச் சொல்ல முடியாத ஊர் அதக்கூர். அதன் முக்கியத்துவத்தை நமக்குச் சொன்னார் வரலாற்றுப் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன். “தற்போதைய அரக்கோணம் அருகே தக்கோலம் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழர்களின் ஆளுகைக்குள் இருந்தது தக்கோலம். அதைக் கைப்பற்ற ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணன் படையெடுத்து வருகிறார். (வட கர்நாடகத்தையும் தென் மகாராஷ்டிரத்தையும் ஆட்சி செய்தவர்கள் ராஷ்டிரகூடர்கள்) அப்போது பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தியன் சோழ சாம்ராஜ்யத்தின் அரசர். தக்கோலத்தில் சோழப் படைகளுக்கும் ராஷ்டிரகூடப் படைகளுக்கும் போர் நடக்கிறது. போரின் முடிவில், ராஷ்டிரகூடப் படைத் தளபதி பூதகன் என்பவரால் ராஜாதித்தியன் கொல்லப்படுகிறார். இதற்கு வெகுமதியாகத் தளபதி பூதகனுக்கு அதக்கூரைப் பரிசாகக் கொடுக்கிறார் மூன்றாம் கிருஷ்ணன். இந்தத் தகவலைச் சொல்லும் முக்கியக் கல்வெட்டு பெங்களூரு அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்த அதக்கூரைத்தான் இப்போது நாம் கடந்துகொண்டிருக்கிறோம்” என்றார் சிவராமகிருஷ்ணன். காரைச் சுவர் வீடுகளும், சீமை ஓட்டுக...