PARSI SURRENDERED THEIR BODY FOR BIRDS AND ANIMALS
PARSI SURRENDERED THEIR BODY FOR BIRDS AND ANIMALS கழுகுகளுக்கு உடலைத் தரும் பார்சி மக்கள்! தமிழகத்தில் ராஜாராஜ சோழனின் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அதாவது கி.பி. பத்தாம் நூற்றாண்டில்(சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு) இந்தியாவில் நிகழ்ந்த சிறுகுடியேற்றங்களில் ஒன்று பார்சி மக்களின் வரவு. அன்றைய பாரசீக தேசமான, இன்றைய ஈரான் நாட்டிலிருந்து இனமோதல் காரணமாக பார்சி இன மக்கள் அகதிகளாக தப்பித்து விபாபாரக் கப்பல்களில் ஏறி இந்தியாவுக்கு குடும்பம் குடும்பமாக வந்துசேர்ந்தனர். இப்படி வந்தவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் குடியேறினார்கள். இந்தியாவில் இன்று வாழும் பார்சி இனத்தவரின் மக்கள் தொகையானது 1 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே. பார்சி மக்களின் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக அதிக குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் முறையை குஜராத்தில் உள்ள பார்சி முன்னேற்றச் சங்கம் கடைபிடித்து வருகிறது. தங்கள் தாய் மண்ணை விட்டு வந்துவிட்டாலும் தங்களது கலாசார பழக்க வழக்கங்களை அவர்கள் கடைபிடிக்கத் தவறவில்லை. அதில் ஒன்று இறந்த பிறகு தங்கள் உடல்களை கழுகுகளுக்கு திண்ணக் கொ...